பதிவு செய்த நாள் :
'தொழிலதிபர்கள் சொல்வதை
பிரதமர் கேட்கிறார்'

திருச்சூர்: ''விவசாயிகள், மீனவர்கள் மற்றும் சிறு வியாபாரிகளின் கோரிக்கைகள் எதுவும், மத்திய அரசின் காதுகளில் கேட்பதில்லை. அனில் அம்பானி, நிரவ் மோடி போன்றவர்கள் சொல்வதை மட்டுமே, இந்த அரசு கேட்கிறது,'' என, காங்கிரஸ் தலைவர் ராகுல் குற்றஞ்சாட்டினார்.

ராகுல்,மோடி,பிரதமர்


கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில், லோக்சபா தேர்தல் பிரசாரத்தை, காங்., தலைவர் ராகுல், நேற்று துவக்கி வைத்தார்; அப்போது, மீனவர்கள் மத்தியில் அவர் பேசியதாவது: பிரதமர் நரேந்திர மோடியை போல, நான் போலியான வாக்குறுதிகள் அளிக்க மாட்டேன். மத்தியில், காங்., ஆட்சிக்கு வந்தால், மீனவர்கள் நலனுக்காக, மத்திய அமைச்சரவையில் தனி அமைச்சகம் உருவாக்கப்படும்.

இன்றைய சூழலில், அனில் அம்பானி, நிரவ் மோடி போன்றவர்கள், பிரதமரிடம் எது சொல்ல விரும்பினாலும், 10 வினாடிகளில் அவர்களால் சொல்லிவிட முடிகிறது. இதற்காக அவர்கள், சத்தம் போட்டு குரல் எழுப்ப வேண்டிய அவசியம் இருப்பதில்லை.

Advertisement

அவர்கள், மெதுவான குரலில் சொன்னால் கூட, அது அரசை சென்றடைகிறது.

ஆனால், விவசாயிகள், மீனவர்கள் மற்றும் சிறு வியாபாரிகள் பெரும் குரலெழுப்பி கூச்சலிட்டாலும், அவர்களது கோரிக்கைகள், அரசின் காதுகளில் கேட்பதில்லை. இவ்வாறு அவர் பேசினார்.


Advertisement

வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Preabhu - Tiruppur,இந்தியா
16-மார்-201900:02:33 IST Report Abuse

Preabhuதொழில் அதிபர்களுக்கும் சப்போர்ட் பண்ணினாதான்யா அவர்கள் முதலீடு செய்து வேலை வாய்ப்பை உருவாக்குவார்கள். நீ பாட்டுக்கு போயி இத்தாலியில் இருந்து இம்போர்ட் பண்ணிடுவ. அப்புறம் இந்தியாவில் எப்படி வேலை வாய்ப்பு உருவாகும்? மக்கள் எப்படி வருமானம் ஈட்டுவார்கள் ? நாட்டுக்கு எப்படி அந்நிய செலாவணி கிடைக்கும். இதுக்கூட உனக்கு தெறியலை......................................

Rate this:
adithyan - chennai,இந்தியா
15-மார்-201919:08:24 IST Report Abuse

adithyanசொப்பன வாழ்வில் மஃகிழ்கிறார்.

Rate this:
anbu - London,யுனைடெட் கிங்டம்
15-மார்-201919:01:59 IST Report Abuse

anbuபின்னால் நிற்பவர்கள் எப்படி சிரிக்கிறார்கள். நல்ல காமெடிதான்.

Rate this:
மேலும் 18 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X