மதுபானம் கடத்திய 5 பேர் கைது

Added : மார் 14, 2019
Advertisement

காரைக்கால்:காரைக்காலில் இருந்து தமிழகப்பகுதிக்கு மது மற்றும் சாராயம் கடத்திய ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.காரைக்கால் மாவட்டத்தில் லோக்சபா தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் வழங்குவதை தடுக்க மாவட்ட தேர்தல் துறை மற்றும் காவல் துறை சார்பில் மாவட்டத்தில் ஏழு சோதனைச்சாவடிகளில் தீவிர வாகன தணிக்கை நடத்தப்பட்டு வருகிறது.நேற்று முன்தினம் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் பெருமாள் மற்றும் போலீசார் வாஞ்சூர் பகுதியில் வாகனச்சோதனையில் ஈடுபட்ட போது. டிஎன்.09 ஏஒய்0716 என்ற பதிவெண் கொண்ட காரில் ரூ.7 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில் கடத்துவது தெரிய வந்தது.அதையடுத்து மது பாட்டில்கள் மற்றும் காரை போலீசார் பறிமுதல் செய்தனர். மது பாட்டில் கடத்திய, மன்னார்குடி அண்ணவாசல் பகுதியை சேர்ந்த நாராயணன் மகன் வீரையன்(37) என்பவரை கைது செய்தனர்.ரயில் மூலம் ரூ.6 ஆயிரம் மதிப்புள்ள மது பாட்டில் கடத்த முயன்ற, நாகை வெளிப்பாளையத்தை சேர்ந்த தங்கராசு மகன் ஆறுமுகம்(40), தாத்தப்பன் மகன் சவுந்தரபாண்டியன்(48) ஆகிய இருவரை சப் இன்ஸ்பெக்டர் பெருமாள் கைது செய்தார்.திருப்பட்டினம் மேலையூர் சோதனைச்சாவடியில், அதிவேகமாக வந்த இண்டிகோ காரில் ரூ.12 ஆயிரம் மதிப்புள்ள சாராயம் கடத்துவது தெரிய வந்தது. இச்சம்பவத்தில், நாகப்பட்டினம் செல்லுாரை சேர்ந்த முருகன் மகன் சுபாஷ்(21), நாகை சுனாமி குடியிருப்பை சேர்ந்த முருகன் மகன் தங்கபாண்டியன்(25), ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X