பதிவு செய்த நாள் :
ராகுல் கேள்விகளுக்கு பா.ஜ., மவுனம்!
வேறு திட்டம் வைத்துள்ளது, 'தாமரை' கட்சி;
கடைசி நேரத்தில் போட்டுத் தாக்க வியூகம்

தமிழகத்தின், சென்னை மகளிர் கல்லுாரியில் பிரசாரம், நாகர்கோவிலில் நடந்த, காங்., தேர்தல் பிரசார கூட்டங்களில், காங்., தலைவர் ராகுல், அனல் தெறிக்கும் வகையில் பேசினார். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்தியில் ஆளும், பா.ஜ.,வுக்கு எதிராக சரமாரி புகார்களை அடுக்கினார். ஆனால், அதற்கு, பா.ஜ., தரப்பில் எந்த பதிலும் தரப்படவில்லை. பா.ஜ.,வின் மவுனம், சம்மதத்துக்கு அறிகுறியா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ராகுல்,கேள்வி,பா.ஜ., மவுனம்,வேறு திட்டம்,வியூகம்


லோக்சபாவுக்கு ஏழு கட்டங்களாக தேர்தல் அறிவிப்பு வெளியான உடனேயே, அரசியல் களம் சூடுபிடிக்கத் துவங்கி விட்டது. கூட்டணி அமைப்பது, தொகுதிப் பங்கீடு என, அரசியல் கட்சிகள் ஒருபுறம் தீவிரமாக இருக்கும் நிலையில், கட்சித் தலைவர்களும், தீவிர பிரசாரத்தை துவக்கி விட்டனர். தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன், மாநிலம் மாநிலமாக சென்று, பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு நலத் திட்டங்களை துவக்கி வைத்தார். ஆனால், தேதி அறிவிப்புக்குப் பின், அவர் எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்கவில்லை. அதே நேரத்தில், காங்., தலைவர், ராகுல், தீவிர பிரசாரத்தை துவக்கி விட்டார்.

தமிழகத்தில், 39 தொகுதிகளுக்கு, ஏப்., 18ல் நடக்க உள்ள தேர்தலுக்காக, தி.மு.க., தலைமையிலான கூட்டணியின் பிரசார பொதுக் கூட்டம், நாகர்கோவிலில் நேற்று முன்தினம் நடந்தது. முன்னதாக, சென்னையில் பிரபலமான கிறிஸ்தவ கல்லுாரி ஒன்றில், மாணவியருடன், ராகுல் நீண்ட நேரம் பிரசாரம் மேற்கொண்டார். 'மாற்றத்தை உருவாக்குவோர்' என்ற தலைப்பில், ராகுல் காரசாரமாக பேசினார். இந்த நிகழ்ச்சிகளின் போது, மத்திய அரசுக்கு எதிராக, குறிப்பாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக, பல்வேறு குற்றச்சாட்டுகளை, ராகுல் அடுக்கினார்.

வேலைவாய்ப்புகளை உருவாக்கவில்லை; விவசாயிகள் பிரச்னை; பார்லிமென்ட் மற்றும் சட்டசபைகளில் பெண்களுக்கு, 33 சதவீத இட ஒதுக்கீடு, ரபேல் போர் விமான ஒப்பந்தம் என, பல பிரச்னைகள் குறித்து, பேசினார். இது தொடர்பாக, மத்திய அரசுக்கும், மோடிக்கும் அவர் பல கேள்விகளை எழுப்பினார். ஆனால், ராகுலின் கேள்விகளுக்கும், புகார்களுக்கும், பா.ஜ., தரப்பில் இருந்து எந்த பதிலும் தரப்படவில்லை. குறைந்தபட்சம், எதிர்ப்பு கூட தெரிவிக்கப்படவில்லை.

நாடு முழுவதும், 18 - 19 வயதுள்ள, முதல் முறை ஓட்டளிக்க உள்ள இளம் வாக்காளர், 8.9 கோடி பேர் உள்ளனர். ராகுலின் பேச்சு, இவர்களை ஈர்க்கும் வகையில் அமைந்திருந்தது என, ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. கடந்த ஐந்து ஆண்டுகளில், மகளிர் மசோதா குறித்து, பார்லி.,யில் ஒருமுறை கூட, மத்திய அரசு எந்த பதிலும் கூறவில்லை. வேலைவாய்ப்புகள் உருவாக்குவதிலும், மோசமான நிலைமையே உள்ளது. கடந்த, 2018ல் மட்டும், ஒரு கோடி வேலைவாய்ப்புகள் பறிபோனதாக ஆய்வு அறிக்கைகள் கூறுகின்றன.

'அதனால், ராகுலின் பேச்சுக்கு, பா.ஜ., பதிலளிக்கவில்லை' என, கூறப்படுகிறது. ராகுலின் பேச்சுக்கு பதிலளிக்காதது, 'மவுனம் சம்மதத்துக்கு அறிகுறியா?' என கேட்ட போது, பா.ஜ., மூத்த தலைவர்கள் கூறியதாவது: ராகுலின் பேச்சுக்கு பதில் அளித்தால், மற்றவர்களின் பேச்சுக்கும் பதிலளிக்க வேண்டியிருக்கும். அதனால், இந்த அரசியல் பேச்சுகளுக்கு பதில் அளிப்பதில்லை என, முடிவு செய்துள்ளோம். பத்திரிகைகளுக்கும், ஊடகங்களுக்கும் பரபரப்பான செய்தி வேண்டும். அதனால், ராகுலின் பேச்சை பெரிதாக வெளியிடும். அடுத்த சில நாட்களில், இந்தப் பிரச்னைகள் தானாகவே அடங்கி விடும்.

அதே நேரத்தில், தகுந்த நேரத்தில், இந்த பேச்சுகளுக்கு சரியான பதிலடியை கொடுப்போம். தேர்தல் பிரசாரம் தற்போது தான் துவங்கி உள்ளது. இந்த நேரத்தில், ராகுலின் பேச்சுக்கு பதில் அளித்து, பிரச்னையை தீவிரமாக்க நாங்கள் விரும்பவில்லை. மோடியின் தலைமை மீது, எங்களுக்கும், மக்களுக்கும் மிகுந்த நம்பிக்கை உள்ளது. செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு, 2016, நவம்பரில் வெளியானது. அதே நேரத்தில்,

Advertisement

2017 பிப்ரவரியில், உத்தர பிரதேச சட்டசபைக்கு நடந்த தேர்தலில், மிகப் பெரிய வெற்றியைப் பெற்றோம்.

தமிழகத்தில் பெறும் வெற்றி, ஆட்சி அமைப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கும். அதனால் தான், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து, மற்ற கட்சிகளுக்கு அதிர்ச்சியை அளித்தோம். இங்கு ஒதுக்கப்பட்டுள்ள, ஐந்து தொகுதிகளிலும் முக்கியமான தலைவர்களை களமிறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கூட்டணி அமைத்துவிட்டாலும், தமிழகத்தில், பா.ஜ.,வுக்கு வலுவான தளம் இல்லை என்பதை உணர்ந்துள்ளோம். அதனால், மிக விரைவில், அரசியல், 'சர்ஜிக்கல் ஸ்டிரைக்' எனப்படும், துல்லிய தாக்குதலை நடத்துவோம்.

ராகுலின் கேள்விக்கு பதிலளிக்காமல் தற்போது மவுனமாக இருப்பது, அரசியல் தந்திரம். சரியான நேரத்தில், இதற்கு பதிலளிக்கப்படும். இந்தக் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல், பா.ஜ., ஆட்சியில் செய்த திட்டங்கள் குறித்து, மக்களிடம் எடுத்துரைப்போம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

தமிழகத்தில், ராகுல் பிரசாரம் செய்து கொண்டிருந்த அதே நேரத்தில், பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய ஜவுளித் துறை அமைச்சர், ஸ்மிருதி இரானி, டில்லியில் நிருபர்களை சந்தித்தார். 'காங்கிரஸ் தலைவர், ராகுலின் சகோதரியான, பிரியங்காவின் கணவர், ராபர்ட் வாத்ரா என்பது ஒரு முகமுடி தான். அவர் பெயரில், நில மோசடி உட்பட பல மோசடிகளை செய்தது ராகுலும், பிரியங்காவும் தான்' என, எதிர் தாக்குதல் நடத்தியுள்ளார்.

- கே.எஸ். நாராயணன்
- நமது சிறப்பு நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (43)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
20-மார்-201911:00:56 IST Report Abuse

Malick Rajaஅட போங்கப்பா .. லேட் மனோகர் பாரிக்கர் என்ன ஆனார் .. நமக்கும் நிலைமை அதுதான் என எண்ணாமல் இந்த முட்டாள்கள் வாழ்வது விந்தையிலும் விந்தை தானே .. கொஞ்சநாள் ஆட்டம் . எண்ணமனிதர்களோ ?

Rate this:
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
19-மார்-201904:07:53 IST Report Abuse

J.V. Iyerபாப்பு சொல்வதை யாரும் சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை. தமிழ் நாட்டில் உள்ள மக்களுக்கு மூளை சலவை செய்யப்பட்டுள்ளது. எனவே பதில் கூறினால், பயனில்லை.

Rate this:
Kumar - Chennai,இந்தியா
19-மார்-201919:24:14 IST Report Abuse

Kumarஅய்யருக்கு எப்படி? சிங்கப்பூரில் சலவை செய்து க்ளீன் பண்ணிட்டாங்களோ தமிழர்களை குறை சொல்லும் விஷ வேர்கள் வெந்நீரால் பொசுக்கப்படவேண்டும். ...

Rate this:
மணிமேகலை - paris ,பிரான்ஸ்
17-மார்-201909:04:13 IST Report Abuse

மணிமேகலை  உங்க சர்ஜிகள் ஸ்ட்ரைக் ஓட்டுப்பதிவு இயந்திரத்தின் மீதோ என்று மக்கள் சந்தேகப்படுறாங்க .

Rate this:
Kannan Iyer - Bangalore,இந்தியா
18-மார்-201907:36:22 IST Report Abuse

Kannan Iyerமக்களா நீங்களா? எதிர்க்கட்சியினர் வென்றாலும் இயந்திரக்கோளாறோ? எலெக்க்ஷன் கமிஷனையும் நம்ப மாட்டீர்கள். எனினும் இப்போது VVPAT வந்து விட்டது.சந்தேகம் வேண்டாம். ...

Rate this:
மேலும் 38 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X