பீஹாரிலும் மெகா கூட்டணி உடைந்தது? காங்., பிடிவாதத்தால் லாலு அப்செட்' Dinamalar
பதிவு செய்த நாள் :
பீஹாரிலும் மெகா கூட்டணி உடைந்தது?
காங்., பிடிவாதத்தால் லாலு அப்செட்'

பாட்னா: உத்தரபிரதேசம் உள்பட பல மாநிலங்களில் 'மஹாகத்பந்தன்' என்ற மெகா கூட்டணி உடைந்துள்ள நிலையில் பீஹாரிலும் கூட்டணி அமையும் வாய்ப்பு மங்கியுள்ளது. 'தன் தகுதிக்கு மேல் காங். அதிக தொகுதிகள் கேட்பதாக' லாலு கூறியுள்ளார்.

பீஹார்,மெகா கூட்டணி,உடைந்தது?,காங்., பிடிவாதம்,லாலு,அப்செட்


கொடுப்பதை வாங்கிக் கொண்டால் கூட்டணி தொடர்வதற்கான வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மத்தியில் ஆளும் பா.ஜ.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் இணைந்து மஹாகத்பந்தன் என்ற மெகா கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டன. ஆனால் உத்தர பிரதேச முன்னாள் முதல்வர்களான மாயாவதியின் பகுஜன் சமாஜ் மற்றும் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சிகள் தனியாக கூட்டணி அமைத்தன. காங்கிரசை கூட்டணியில் சேர்ப்பது குறித்து அவர்கள் யோசிக்கக் கூட இல்லை.

பல மாநிலங்களிலும் மாயாவதி தனியாக கூட்டணி அமைத்துள்ளார். மெகா கூட்டணிக்கு கடுமையாக போராடிய ஆந்திர முதல்வரும் தெலுங்கு தேசம் தலைவருமான சந்திரபாபு நாயுடு கூட ஆந்திராவில் காங்கிரசுடன் கூட்டணி அமைக்க முன் வரவில்லை. இதே போல மேற்கு வங்க முதல்வரும் திரிணமுல் காங். தலைவருமான மம்தா பானர்ஜி என ஒவ்வொரு தலைவர்களாக காங்கிரசை கழட்டி விட்டு வருகின்றனர்.

அதே நேரத்தில் பீஹாரில் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடன் கூட்டணி அமைப்பது குறித்து காங். பேசி வந்தது. இந்தக் கூட்டணியில் மேலும் சில கட்சிகளும் இணைந்துள்ளன. பீஹார் முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளமும் பா.ஜ.வும் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளன.

மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 50 : 50 விகிதத்தில் போட்டியிட இக்கட்சிகள் முடிவு செய்துள்ளன. இந்தக் கூட்டணியில் உள்ள ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்திக்கு 6 தொகுதிகள் கொடுத்து தலா 17 தொகுதிகளில் போட்டியிட இவ்விரு கட்சிகளும் முடிவு செய்துள்ளன. இந்நிலையில் கால்நடை தீவன ஊழல் வழக்கில் சிறையில் உள்ள லாலு பிரசாத்தை காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சிலர் சமீபத்தில் சந்தித்துள்ளனர். 'தங்களுக்கு 15 தொகுதிகள் ஒதுக்க வேண்டும்' என அவர்கள் ஒற்றைக் காலில் நின்றனர். 'ஆனால் 8ல் ஆரம்பித்து 10 தருகிறேன்' என லாலு கூறியுள்ளார். ஆனால் இதை ஏற்காமல் காங். விடாப்பிடியாக உள்ளது. அதனால் பீஹாரிலும் மெகா கூட்டணி அமையும் முயற்சி தோல்வி அடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து ராஷ்ட்ரீய ஜனதா தள மூத்த தலைவர்கள் கூறியதாவது: நாட்டின் சுதந்திரத்திற்குப் பிறகு 55 ஆண்டுகள் பீஹாரில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. ஆனால் 1990ல் லாலு பிரசாத் கட்சியை துவக்கிய பிறகு காங்.குக்கு சரிவு ஏற்பட்டது. சமீபத்தில் மத்திய பிரதேசம் ராஜஸ்தான் சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தலில் வென்றதால் காங். மிதப்பில் உள்ளது. தங்களால் தான் மத்தியில் மாற்று அரசு ஏற்படுத்த முடியும் என பகல் கனவு கண்டு வருகிறது.

Advertisement

அதனால் தான் பா.ஜ. - ஐக்கிய ஜனதா தளம் போல 50 : 50 விகிதத்தில் தொகுதிப் பங்கீடு செய்ய வேண்டும் என முதலில் வலியுறுத்தியது. ஆனால் தங்களுடைய தகுதி தெரியாமல் காங். மனக்கோட்டை கட்டி வருகிறது. 1990களுக்குப் பிறகு தனித்து போட்டியிட்ட எந்தத் தேர்தலிலும் 6 சதவீதத்துக்கு அதிகமான ஓட்டுகளை பெற்றதில்லை. ஆனால் தங்கள் தலைமையில் தான் கூட்டணி அமைந்துள்ளதாக நினைத்துக் கொண்டு அதிக தொகுதிகளை கேட்கிறது.

காங்.குக்கு எட்டுத் தொகுதிகளுக்கு மேல் தருவதற்கு வாய்ப்பில்லை. ஆனால் 10 தருவதற்கு லாலு முன் வந்துள்ளார். பீஹாரில் தன் பலம் என்ன என்பதை காங்கிரஸ் உணர வேண்டும். இதற்கு மேல் பிடிவாதம் பிடித்தால் கூட்டணியில் காங்கிரசை சேர்ப்பது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதற்கிடையே முன்னாள் மத்திய அமைச்சர் உபேந்திர குஷ்வாகாவின் ஆர்.எல்.எஸ்.பி. எனப்படும் ராஷ்ட்ரீய லோக் சமதா கட்சி வி.ஐ.பி. எனப்படும் விகாசில் இசான் கட்சி முன்னாள் முதல்வர் ஜிதன் ராம் மான்ஜியின் மதச்சார்பற்ற ஹிந்துஸ்தானி அவாமி மோர்ச்சா ஆகியவை ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடன் தொகுதி உடன்பாடு செய்துள்ளன.


Advertisement

வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rohin - jk ,இந்தியா
16-மார்-201913:59:08 IST Report Abuse

Rohinரெண்டு பிராடும் கூட்டணியா வெட்கம் வெட்கம், இப்ப லொள்ளு உள்ளே அடுத்த ELECTION ல ராவுல் உள்ளே, அடுத்த தேர்தலில் ரெண்டு பிராடும் ஜெயிலுக்கு உள்ள உக்காந்துகிட்டு கூட்டணி பேசும்

Rate this:
adalarasan - chennai,இந்தியா
15-மார்-201922:25:15 IST Report Abuse

adalarasanஅரசாங்க கஜானாவிலிருந்து, தன சொந்த சொத்துபோல், பணத்தை, எடுத்ததற்காக, இரண்டு கேசுகளில் தண்டிக்கப்பட்டு ஜெயிலில் இருக்கவேண்டியவர், உடல் நிலை சரியில்லை என்று வழக்கம்போல், நாடகம் ஆடி, வெளியில் உள்ளார்?இப்ப. தேர்தலில் முழுமையாக ஈடுபட , உடலில் வலு வந்திருக்குஉள்ளே போட வேண்டியது தான..?யார் கேட்கிறது..?இதே ஒரு ஆயிரம் ரூபாய், திருடிய, ஏழை,ஜாமீனில் கூட வரமுடியாமல், பல வருடங்கள், ஜெயிலி வாடுகிறான்..?இதுதான் நம் சட்டம்…?

Rate this:
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
15-மார்-201919:13:52 IST Report Abuse

Natarajan Ramanathanகாங்கிரஸுக்கு பீகாரில் ஒரு தொகுதிக்குமேல் கொடுப்பதே அதிகம்தான்.

Rate this:
மேலும் 16 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X