மருத்துவ விடுப்பில் சென்றார் விமானப்படை வீரர் அபிநந்தன்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

மருத்துவ விடுப்பில் சென்றார் விமானப்படை வீரர் அபிநந்தன்

Updated : மார் 15, 2019 | Added : மார் 15, 2019 | கருத்துகள் (11)
Advertisement
அபிநந்தன்,விமானப்படை வீரர், மருத்துவ விடுப்பு

புதுடில்லி: விமானப் படை வீரர் அபிநந்தனிடம் விசாரணை முடிவடைந்ததை அடுத்து அவருக்கு சில வாரங்கள் மருத்துவ விடுப்பு அளிக்கப்பட்டது.

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். இதையடுத்து பாக்.கின் பாலகோட் பகுதியில் உள்ள பயங்கரவாதிகள் முகாம் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. இந்நிலையில் பிப். 27ல் பாக். விமானத்தை போர் விமானத்தில் துரத்திச் சென்ற இந்திய விமானப் படை வீரர் அபிநந்தன் பாக். ராணுவத்திடம் சிக்கினர். மூன்று நாட்களுக்கு பின் அவர் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார்.



பாக். ராணுவத்தினர் அவரை நடத்திய விதம் குறித்தும் அங்கு நடந்தவை குறித்தும் விமானப் படை உட்பட பல்வேறு துறையைச் சேர்ந்த அதிகாரிகள் அபிநந்தனிடம் விசாரணை நடத்தினர். அப்போது பாக். ராணுவம் தன்னை மனதளவில் துன்புறுத்தியதாக அபிநந்தன் தெரிவித்தார். அவரிடம் விபரங்கள் கேட்டறிவதை அதிகாரிகள் நேற்றுடன்( மார்ச் 14) முடித்தனர். இதையடுத்து அபிநந்தனுக்கு சில வாரங்கள் மருத்துவ விடுப்பு அளிக்கப்பட்டது.

'சில வாரங்களுக்கு பின் அபிநந்தனின் உடல் தகுதி பரிசோதிக்கப்பட்டதும் அவர் எப்போது பணிக்கு திரும்புவார் என தெரிவிக்கப்படும்' என விமான படை அதிகாரிகள் தெரிவித்தனர்.





வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
tamil selvam - tamilnadu,இந்தியா
15-மார்-201914:32:34 IST Report Abuse
tamil selvam இவரை ரொம்பவே ஹிம்ஸ பண்ணிருக்கான் பாக்கிஸ்தான்காரன்.
Rate this:
Share this comment
VELAN S - Chennai,இந்தியா
17-மார்-201912:02:41 IST Report Abuse
VELAN Sஇவரை கிரவுண்ட் எம்பலாயியாக போட்டு பரம சக்கராவை கையில் கொடுத்து உட்கார வைத்து விடுவார்கள் . , இவரை ஏர் மார்சல் அளவுக்கு கொண்டு வரும் பொறுப்பு அரசாங்கத்திற்கு இருக்கு , அதை ஒழுங்கா செய்தா சரி ....
Rate this:
Share this comment
Cancel
Pon Gane - Peryakullam,இந்தியா
15-மார்-201911:18:12 IST Report Abuse
Pon Gane அவர் ஒரு ராணுவ அதிகாரி , அவரை பற்றி ஏன் மேலும் மேலும் பொதுவெளியில் விவாதிக்கிறீர்கள் ।அது அவருடய பாதுகாப்புக்கு நல்லதல்ல। எதிரி நாட்டு இராணுவத்திடம் அவர் அவருடய சொந்த விசயத்தை சொல்லவில்லையென்று சொல்லிவிட்டு இங்கு ஊடகங்கள் அவருடய வீட்டுக்குள் வரை கேமராவை கொண்டுபோய் செய்திகளில் காடுகெறிர்கள்। நம் நாட்டுக்கு அழிவுகாலம் எதிரியால் அல்ல நம்மால் தான்। மாறுங்கள் மக்களே , மாறுங்கள் ஊடகத்துறையேயேய்
Rate this:
Share this comment
Cancel
15-மார்-201908:54:19 IST Report Abuse
ஆப்பு இவரால வரக்கூடிய அரசியல் ஆதாயம் குறைந்து விட்டது. இவருக்கு ஆபீசில் வேலை குடுத்து உக்காத்தி, ஒரு அசோக சக்ராவைக் குடுத்துருவாங்க. ஜை ஹிந்த்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X