மக்கள் நீதி மையம் | Dinamalar

மக்கள் நீதி மையம்

Added : மார் 15, 2019
Advertisement
 மக்கள் நீதி மையம்

புதுச்சேரி:மக்கள் நீதி மையத்தின் புதுச்சேரி நிர்வாகிகள் கூட்டத்தில், லோக்சபா தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயார் செய்யப்பட்டது.புதுச்சேரி லோக்சபா தேர்தலுக்கான, தேர்தல் அறிக்கை தயாரிப்பது தொடர்பாக, மக்கள் நீதி மையத்தின் நிர்வாகிகள் கூட்டம், மாநில தலைவர் எம்.எ.எஸ்., சுப்ரமணியன் தலைமையில் நடந்தது.மாநில பொதுச் செயலாளர் ராஜன், இணை பொதுச் செயலாளர் முருகேசன், பொருளாளர் தமிழரசன், செயலாளர்கள் அரிக்கிருஷ்ணன், நிர்மலா சுந்தரமூர்த்தி, ஏ.கே. நேரு, ராம. அய்யப்பன், சந்திரமோகன், பிராங்க்ளின் பிரான்சுவா உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், புதுச்சேரி மாநில மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையிலும், புதுச்சேரி மாநில வளர்ச்சியை கருத்தில் கொண்டும் மக்கள் நீதி மையத்தின் தேர்தல் அறிக்கை தயார் செய்யப்பட்டது. இந்த தேர்தல் அறிக்கையை, மாநில தலைவர் எம்.ஏ.எஸ். சுப்ரமணியன், கட்சித் தலைவர் கமல்ஹாசனை சந்தித்து, வழங்கினார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X