கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
மதுரையில் தேர்தல் தேதி மாற்றம் இல்லை
கமிஷன் பதிலால் நீதிமன்றம் அதிருப்தி

மதுரை: சித்திரைத் திருவிழா தேரோட்டத்தன்று ஏப்.,18 மதுரையில் தேர்தல் நடத்துவதற்கு பதிலாக, வேறு தேதியில் நடத்த உத்தரவிடக் கோரிய வழக்கில், 'தேதியை மாற்ற வாய்ப்பில்லை' என்ற தேர்தல் கமிஷனின் பதிலால் உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை அதிருப்தி அடைந்தது. இன்று (மார்ச் 15) பதில் மனு செய்யாவிடில், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ஆஜராக வேண்டும் என நீதிபதிகள் எச்சரித்தனர்.

மதுரை,தேர்தல் தேதி,மாற்றம் இல்லை,கமிஷன் பதில், நீதிமன்றம், அதிருப்தி


மதுரை வழக்கறிஞர் பார்த்தசாரதி தாக்கல் செய்த பொதுநல மனு: தமிழகத்தில் தேர்தல் ஏப்.,18 ல் நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவில் ஏப்.,15 ல் பட்டாபிஷேகம் மற்றும் தொடர் நிகழ்வாக ஏப்.,18 ல் தேரோட்டம் நடக்கவுள்ளது. அன்று மாலை கள்ளழகர் எதிர்சேவை, ஏப்.,19 ல் காலை வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளல் நடக்கிறது. திருவிழாவில் தென்மாவட்டத்தினர் பங்கேற்பர்.

தேரோட்டம் நடக்கும் பகுதியில் ஓட்டுச்சாவடிகள் இடம்பெறும். உள்ளூர் மற்றும் வெளிமாவட்ட வாக்காளர்கள் ஓட்டுப்பதிவு செய்ய சிரமம் ஏற்படும். திருவிழாவில் அதிக போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுவர். வருவாய்த்துறையினர் திருவிழா பணியில் ஈடுபடுவர். அவர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்துவது சிரமம். மதுரையில் வேறு தேதியில் தேர்தல் நடத்த இந்திய தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு பார்த்தசாரதி மனு செய்தார்.

நேற்று முன்தினம் விசாரித்த நீதிபதிகள், 'ஏப்.,18 ல் தேரோட்டம், எதிர்சேவையில் பக்தர்கள்

பங்கேற்று விட்டு சொந்த ஊர்களுக்குச் சென்று அதே நாளில் ஓட்டுப் பதிவு செய்வது இயலாத ஒன்று. இதுபோன்ற சூழ்நிலையில் தேர்தல் நடத்தினால் நுாறு சதவீத ஓட்டுப் பதிவு என்பது நடைமுறை சாத்தியமற்றது. ஏப்.,18 ல் தேர்தல் நடத்தும் முடிவை தேர்தல் கமிஷன் மறு பரிசீலனை செய்து, வேறு தேதியில் நடத்தலாமா என்பதை பரிசீலித்து மார்ச் 14 ல் தேர்தல் கமிஷன் தெரிவிக்க வேண்டும்' என்றனர். நேற்று நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு விசாரித்தது.

விவாதங்கள் வருமாறு:
தேர்தல் கமிஷன் வழக்கறிஞர்: ஏப்.,19 ல் பொது விடுமுறை. இதை கருத்தில் கொண்டே ஏப்.,18 ல் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது. கூடுதலாக ஆயுதம் தாங்கிய போலீசாரை பாதுகாப்பில் ஈடுபடுத்தி, அமைதியாக தேர்தல் நடத்தப்படும். தேரோட்டத்திற்கு 2 லட்சம் பேர் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. தேரோட்டம் நடக்கும் பகுதியில் ஓட்டுப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அன்று மதுரை மட்டுமன்றி, தமிழகம் முழுவதும் மற்றும் பிற மாநிலங்களில் தேர்தல் நடக்கிறது. மதுரைக்கு மட்டும் தேர்தல் தேதியை மாற்ற வாய்ப்பில்லை.

நீதிபதி: அப்படி எனில் தமிழகத்தின் ஒட்டுமொத்த தொகுதிகளிலும் தேர்தலை ஒத்திவைக்கலாமே?

தேர்தல் கமிஷன் வழக்கறிஞர்: நாடு முழுவதும் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு திருவிழாக்கள் நடக்கும். அதற்காக வெவ்வேறு தேதிகளில் மாற்றி தேர்தலை நடத்த முடியாது. திட்டமிட்ட தேதியை மாற்றினால் அது மற்ற மாநில தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தும்.

நீதிபதிகள்: நீங்கள் தேர்தல் நடத்துவதில்தான் ஆர்வமாக உள்ளீர்கள். திருவிழா அன்று அதில் பங்கேற்க மக்கள் விரும்புவார்களா அல்லது ஓட்டுப் பதிவு செய்ய வருவார்களா?

Advertisement

தேர்தல் கமிஷன் வழக்கறிஞர்: உளவுத்துறை அறிக்கை மற்றும் சில புள்ளிவிபரம் அடிப்படையில் தேர்தல் தேதியை முடிவு செய்தோம்.

நீதிபதிகள்: நீங்கள் உயர்மட்ட அளவில் முடிவு செய்துள்ளீர்கள். கீழ்மட்ட கள யதார்த்தத்தை கருத்தில் கொள்ளவில்லை. தேர்தல் கமிஷனின் முடிவில் பிடிவாதமாக உள்ளீர்கள். கீழே இறங்கி வந்து வாக்காளர்களின் நிலையை பற்றி யோசிக்கவில்லை. உங்கள் பதில் திருப்தி அளிக்கவில்லை. விழா பகுதிகளில் 59 ஓட்டுச் சாவடிகள் உள்ளன.

18 சாவடிகள் பதட்டமானவை. அந்த ஓட்டுச்சாவடிகளில் 200 மீ., துாரத்திற்குள் வாக்காளர்களைத் தவிர, வேறு யாரையும் நுழைய அனுமதிக்கமாட்டோம் என்கிறீர்கள். இந்த கட்டுப்பாட்டின்படி, ஓட்டுச் சாவடி அமைந்துள்ள பகுதிகளில் தேரை பார்க்க வரும் பக்தர்கள் கூடுவதை தடுப்பீர்களா அல்லது ஓட்டுப் பதிவு செய்ய வருவோரை அடையாளம் கண்டு அனுமதிப்பீர்களா? உங்களுக்கு திருவிழா மற்றும் மக்களைப் பற்றி கவலை இல்லை.

மதுரையில் ஏப்.,18 தேர்தல் நடத்த எதன் அடிப்படையில் முடிவு செய்யப்பட்டது? மதுரையில் திருவிழா அன்று தேர்தல் நடத்துவதற்கான திட்டமிடல், முன்னேற்பாடுகள் குறித்து தேர்தல் கமிஷன் விரிவான பதில் மனுவை இன்று (மார்ச்15) தாக்கல் செய்ய வேண்டும். தவறினால் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ஆஜராக வேண்டும். இவ்வாறு எச்சரித்தனர்.


Advertisement

வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
15-மார்-201920:45:39 IST Report Abuse

Pugazh Vமதுரை மற்றும் அதன் சுற்று ப்பகுதி நகர கிராம வாக்காளர் கள் யாரும் பாஜகவுக்கு அல்லது அதிமுகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள். எனவே கமிஷன் கரெக்டா கோவில் திருவிழா அன்று தேர்தல் நடத்த முடிவு செய்துள்ளது. தேதியை மாற்ற மாட்டேன் என்று அடம் பிடிக்கிறது.

Rate this:
natarajan s - chennai,இந்தியா
15-மார்-201915:47:05 IST Report Abuse

natarajan sஒரு மாநில தேர்தல் ஆணையர் எல்லா மாவட்ட ஆட்சியரிடம்( அவர்தான் Returning Officer மற்றும் District Election Officer ) கருத்து கேட்ட பிறகே மத்திய தேர்தல் ஆணையருக்கு கருத்துரு அனுப்பி அதன் பின் தான் தேர்தல் தேதி முடிவு செய்யப்படும். மதுரை மாவட்ட ஆட்சியருக்கு தேர்த்திருவிழா மற்றும் கள்ளழகர் எதிர்சேவை பற்றி தெரியாமலா report அனுப்பியிருப்பார்.? மாவட்ட தேர்தல் அதிகாரி (அரசின் அனுமதியோடுதான் ) அந்த நாட்களில் தேர்தல் நடத்த முடியும் என்று report கொடுத்திருப்பார்.அதனால்தான் இந்த முடிவு. மேலும் இது ஒரு பொது தேர்தல் அதனால் தேர்தல் schedule அறிவிப்பதற்கு முன் மாநில அரசு , மாநில தேர்தல் கமிஷனர் , மாவட்ட ஆட்சியர் எல்லோரும் ஒருமித்த கருதுக்குப்பின் தான் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கும். மக்களும் தங்களது கடமையை உணர்ந்து வாக்களிக்க முன் வரவேண்டும். இது ஒரு சமய சார்பற்ற நாடு (அப்படித்தானே எல்லோரும் கூவுகிறார்கள் ) எந்த மத திருவிழாவாக இருந்தால் என்ன வாக்களித்து விட்டுப்போய் சமய பணியை செய்ய வேண்டியதுதான்.அதுதான் இரண்டு மணிநேரம் கூடுதலாக அனுமதி என்கிறார்களே . இந்த கோரிக்கையை ஏற்றால் அடுத்துபுனித வெள்ளி, LENT ) ரம்ஜான் நோன்பு அடுத்து plus 2 result 10 th result அப்புறம் அட்மிஷன் கல்லூரி திறப்பு உள்ளதால் தமிழ்நாட்டில் தற்சமயம் தேர்தல் நடத்த வேண்டாம் என்று கிளம்பிவிடுவார்கள். குறித்த தேதியில் நடத்துவதே சரி.

Rate this:
Girija - Chennai,இந்தியா
15-மார்-201910:40:39 IST Report Abuse

Girijaஒரே நபர் ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிட்டு ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதியில் வெற்றிபெற்று மீதி தொகுதிகளில் ராஜினாமா செய்து இடை தேர்தல் வந்தால் அவரது ரத்த சம்பந்த உறவுகள் அத்தொகுதிகளில் போட்டியிடக்கூடாது என்ற தேர்தல் திருத்தும் கொண்டுவரவேண்டும் .

Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X