பதிவு செய்த நாள் :
'ரபேல்' ஆவண திருட்டு:
தீர்ப்பு ஒத்திவைப்பு

புதுடில்லி: 'ராணுவ அமைச்சகத்திலிருந்து, 'ரபேல்' போர் விமானங்கள் வாங்கும் ஒப்பந்த ஆவணங்களின் நகல் எடுத்தது, திருட்டு' என்ற மத்திய அரசின் வாதம் குறித்த வழக்கில், உச்ச நீதிமன்றம், தீர்ப்பை ஒத்தி வைத்தது.

ரபேல்,ஆவண திருட்டு,தீர்ப்பு,ஒத்திவைப்பு


ஐரோப்பிய நாடான, பிரான்சிடமிருந்து, ரபேல் போர் விமானங்கள் வாங்க, மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்த நடைமுறையில் முறைகேடுகள் நடந்துள்ளதாக, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இதில், கடந்தாண்டு, டிச., 14ல் அளித்த தீர்ப்பில், 'இந்த ஒப்பந்தம் செய்வதற்கான நடைமுறையில் முறைகேடுகள் நடந்ததற்கான முகாந்திரம் ஏதும் இல்லை' என, கூறப்பட்டது. இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி, வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷண், முன்னாள் மத்திய அமைச்சர்கள், அருண் ஷோரி,

யஷ்வந்த் சின்ஹா உள்ளிட்டோர் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளனர்.

இதற்கிடையில், ரபேல் போர் விமானம் ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்கள் அடிப்படையில், ஆங்கில நாளிதழில் செய்திகள் வெளியானது. அந்த ஆவணங்களின் நகல்கள், சீராய்வு மனுவுடன் இணைக்கப்பட்டிருந்தன. 'ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக, ராணுவ அமைச்சகத்தில் இருந்த ஆவணங்கள் திருடப்பட்டுள்ளன'' என, மத்திய அரசு சார்பில், உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. பின், 'ஆவணங்கள் திருடப்படவில்லை. அவற்றை நகல் எடுத்துள்ளனர்; இதுவும் திருட்டுக்கு சமமானது தான்' என, மத்திய அரசு கூறியது. இந்த வழக்கு, தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, மத்திய அரசின் சார்பில் ஆஜரான, அட்டார்னி ஜெனரல், கே.கே. வேணுகோபால் வாதிட்டதாவது: இந்த ஆவணங்கள், மத்திய அரசின் சிறப்புரிமை பெற்ற ஆவணங்கள். இந்த ஆவணங்களின் நகல் எடுத்ததும், திருடியதற்கு நிகரானதே. இந்த ஆவணங்கள், நாட்டின் பாதுகாப்பு, இறையாண்மை தொடர்பானவை.

Advertisement

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழும், இந்த ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தர விட முடியாது. திருடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் வாதிட்டார்.

இந்த ஆவணங்கள், சிறப்புரிமை ஆவணங்களா என்பது குறித்து, கே.கே. வேணுகோபாலுக்கும், அமர்வில் இடம்பெற்றுள்ள நீதிபதி, கே.எம். ஜோசப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது. விசாரணைக்குப் பின், இந்த ஆவணங்களின் நகல் எடுத்ததும் திருட்டுக்கு ஒப்பானது என்ற மத்திய அரசின் வாதம் சரியானதா என்பது குறித்த தீர்ப்பை, அமர்வு ஒத்தி வைத்துள்ளது. 'இது தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடுவது குறித்து, பின் விசாரிக்கப்படும்' என, நீதிபதிகள் தெரிவித்தனர்.


Advertisement

வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Subramaniyam Veeranathan - Bangalore,இந்தியா
17-மார்-201900:09:16 IST Report Abuse

Subramaniyam Veeranathanஉண்மையில் இந்த பழங்கால வழக்கறிஞ்சர்களும் இன்றைய நீதிபதிகளுக்கும் நம் நாட்டு ராணுவத்தைப்பற்றியும் அதன் பாதுகாப்பு நடவடிக்கை பற்றி என்ன தெரியும். இவர்கள் என்ன நாட்டின் பாதுகாப்பு பற்றி படித்த மேதைகளா???? இல்லை ராணுவத்தில் சிலகாலமாவது வேலைபார்த்தவர்களா????. இன்று நம் ராணுவத்தின் நவீனமாக்கல் கடந்த 20 வருடங்களாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் நம் ராணுவம் பலமிழந்துள்ளது என்பது எல்லோருக்கும் தெரியு. நம் எதிரி நாடு எப்போதோ F-16 விமானத்தை வாங்கி நம்மைவிட அவர்களின் விமானப்படையை பலப்படுத்தியுள்ளது. இதனால் நம் நாட்டின் பாதுகாப்பே இப்போது கேள்விக்குறியாகவுள்ளது. நம் விமானப்படை இதனால் 40 வருட பழமையான பாதுகாப்பில்லாத MIG -21 விமானங்களை இன்னும் வைத்துக்கொண்டு நம் விமானப்படை பைலட்களை கொன்று குவித்துக்கொண்டிருக்கின்றது. இரண்டு வழக்கறிஞ்சர்களுக்கு குறைந்தது 10 அல்லது 20 வருடம் வருமானத்துக்கு குறைவில்லாமல் இந்த ரபேல் வழக்கை நடத்த விட்டு பிறகு மீண்டும் தொடர்வார்கள். இவர்கள் தான் நம் நாட்டு பிரஜைகளின் வாழும் உரிமையை வருடக்கணக்காக வழக்கை நடக்கவிட்டு மொத்த வழக்கறிஞ்சர்களின் வருமானத்துக்கும் உத்தரவாதமானவர்கள். நம் நாட்டில் நீதி கிடைக்கும்போது வழக்கை தொடர்த்தவனும் உயிரியோட இருப்பதில்லை, தண்டனைக்குரியவனும் இருப்பதில்லை. வெறுமனே நம் நாட்டில் வழக்கறிஞ்சர்களுக்காகமட்டும் நம் நீதிமன்றங்கள் வேலைசெய்துகொண்டிருக்கின்றன என்பது எல்லோருக்கும் தெரியும். 5 ரூபாய் மணியார்டர் சரியாக பட்டுவாடா செய்யவில்லை என்பதற்காக 50 வருடம் வழக்கை நடத்தியவர்கள்தானே நம் நீதிபதிகள் என்பது நம் எல்லோர்க்கும் தெரிந்தஉண்மையே. இதை யாரும் மாற்றமுடியாது. இவர்கள் மற்றவிடவும் மாட்டார்கள். கேட்டல் மக்களுக்காக ஏற்றப்பட்ட சட்டம் மக்களுக்கே தெரியாது என்பர். வாழ்க நம் நாட்டு ஜனநாயகம்.

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
15-மார்-201920:32:58 IST Report Abuse

Pugazh Vஇந்தியா பாஜக ஆட்சி யில் வளர்கிறது பாதுகாப்பாக இருக்கிறது என்றெல்லாம் அள்ளி விட்டார்கள். கூலா உள்ள பூந்து பாதுகாப்பு அமைச்சகத்தின் 6 ட்ரக்குகளையும் 40 வீரர்களையும் தூக்கறான். 3 நிலை பாதுகாப்பு இருக்கும் அமைச்சகத்தின் ஆபீஸுக்கு வந்து ஃபைல் களை ஜெராக்ஸ் எடுத்துக்கொண்டு போகிறான். இதுதான் பாதுகாப்பா? நிர்வாக சீர்குலைவு மடஞ நிர்வாக மே இல்லை. There is no governance or adminstration controls in this govt is the reality. ஆ... அந்த ஊழியர் காங்கிரஸ் என்று ஆரம்பித்து விடவேண்டாம். அமைச்சகம் வரும் ஒவ்வொரு ஊழியர் விசிட்டர் எல்லோரும் 3 நிலைகளில் செக்கிங் கழித்து தான் செல்ல வேண்டும். இதெல்லாம் சொன்னால் பாஜக வினர் நம்ம மதத்தையும் நாட்டையும் மாத்திருவாய்ங்க.

Rate this:
sahayadhas - chennai,இந்தியா
15-மார்-201913:01:46 IST Report Abuse

sahayadhasஆடி தள்ளுபடியில் போடவும். அதான் நாறுதே.

Rate this:
மேலும் 18 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X