இதயம் இணைந்தன; கண்கள் பனித்தன : பா.ஜ., ஏ.ஜி.பி.,கூட்டணி

Added : மார் 15, 2019 | கருத்துகள் (4)
Advertisement
 இதயம் இணைந்தன; கண்கள் பனித்தன : பா.ஜ., ஏ.ஜி.பி.,கூட்டணி

குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் செய்வதை எதிர்த்து, கூட்டணியை முறித்துக் கொண்ட, ஏ.ஜி.பி., எனப்படும், அசோம் கன பரிஷத் கட்சி, அசாமில் மீண்டும், பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்துள்ளது.

'கொள்கைகளில் இரு கட்சிகளுக்கும் இடையே முரண்பாடு இருக்கலாம். ஆனாலும், இது தேர்தல் கூட்டணி' என, இரண்டு கட்சித் தலைவர்களும் கூறியுள்ளனர்.வட கிழக்கு மாநிலமான அசாமில் உள்ள, 14 தொகுதிகளுக்கு, ஏப்., 11, 18, 23ல் தேர்தல் நடக்க உள்ளது. இந்தத் தேர்தலில், மீண்டும் கூட்டணி அமைத்து போட்டியிட, ஏ.ஜி.பி., மற்றும், பா.ஜ., முடிவு செய்துள்ளன.

கடந்த, 2014 லோக்சபா தேர்தலில், மொத்தமுள்ள, 14 தொகுதிகளில், தனித்து போட்டியிட்ட, பா.ஜ., ஏழில் வென்றது. காங்கிரஸ் மற்றும் பத்ருதீன் அஜ்மலின், ஏ.ஐ.டி.யு.எப்., எனப்படும், அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி, தலா மூன்றில் வென்றன.ஒரு தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் வென்றார்.

தனித்து போட்டி யிட்ட, ஏ.ஜி.பி., அனைத்து தொகுதி களிலும் தோல்வியடைந்தது. அதன் பிறகு பா.ஜ., கூட்டணியில், ஏ.ஜி.பி., இணைந்தது. இந்நிலையில், அண்டை நாடுளான, வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ் தானில் சிறுபான்மையினராக இருந்து, இந்தியாவுக்கு வந்துள்ளவர்களுக்கு, இந்தியக் குடியுரிமை அளிக்கும் வகையில், குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்ய உள்ளது.

இதற்கான மசோதா, லோக்சபாவில் நிறைவேறியது; ராஜ்யசபாவில் நிலுவையில் உள்ளது.இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அாசமில், பா.ஜ., கூட்டணியில் இருந்து விலகு வதாக, ஏ.பி.ஜி., கூறியது. ஏ.ஜி.பி., தலைவர், அதுல் போரா, பா.ஜ., தலைவர்களுடன் பேச்சு நடத்தி, மீண்டும் கூட்டணியில் சேர்ந்து உள்ளார்.

'இதயங்கள் இணைந்தன, கண்கள் பனித்தன, அதனால் மீண்டும் கூட்டணி சேர்ந்தோம்' என, அவர்கள் கூறவில்லை. கொள்கை என்பது வேறு, அரசியல் என்பது வேறு.'இப்போது அமைந்திருக்கும் கூட்டணி, தேர்தலுக்கானது' என, இரு கட்சியின் தலைவர்களும் புல்லரிக்க வைக்கும் விளக்கம் அளித்துள்ளனர்.

- சமுத்ர குப்த கஷ்யப் -சிறப்பு செய்தியாளர்

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raja - Trichy,இந்தியா
20-மார்-201901:46:58 IST Report Abuse
Raja வெட்க கேடு இந்த கட்சிகளின் அரசியல். ஒரு கொள்கையும் கிடையாது ஒரு கோட்பாடும் கிடையாது. மக்களை ஏமாற்றுவது இவர்களுக்கு கை வந்த கலை.
Rate this:
Share this comment
Cancel
Rajaiah Samuel Muthiahraj - Canberra /kancheepuram,இந்தியா
15-மார்-201907:37:52 IST Report Abuse
Rajaiah Samuel Muthiahraj கூட்டணிகள் இப்போது புல்லரிக்க வைக்கும் பிறகு உள்ளத்தை அரிக்கும் பின் உடலையே அரித்து விடும்
Rate this:
Share this comment
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
15-மார்-201916:39:34 IST Report Abuse
Chowkidar NandaIndiaஆம். தமிழ்நாட்டில் நடக்கபோவதும் அதுதான்....
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
15-மார்-201906:50:22 IST Report Abuse
Bhaskaran தனியாக நின்னால் போனியாகாது என்ற சூட்சுமத்தை தெரிந்து வைத்துக்கொண்டுள்ளார்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X