எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
சரிப்பட மாட்டார்!
அதுக்கு ராகுல் சரிப்பட்டு வரமாட்டார்!
'மாஜி' வெளியுறவு துறை அமைச்சர்
எஸ்.எம்.கிருஷ்ணா சிறப்பு பேட்டி

மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில், நீங்கள் வெளியுறவு துறை அமைச்சராக இருந்த போது, தற்போதைய, காங்., தலைவர், ராகுல், இடையூறு செய்ததாக குற்றம் சாட்டினீர்கள்; எப்படி இடையூறு செய்தார்?
ஆட்சி நிர்வாகத்தில் எந்த பொறுப்பிலும் இல்லாத நிலையிலும், அந்த பணிகளில் ராகுல் குறுக்கிட்டார். உதாரணமாக, ஒரு முக்கியமான அவசர சட்டத்தை கொண்டு வர, அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் விரும்பினார். அச்சட்ட மசோதா, அமைச்சரவை முன்வைக்கப்பட்டது. ஆனால், அமைச்சரவையில் எந்த பொறுப்பிலும் இல்லாத ராகுல், அந்த மசோதா நகலை பகிரங்கமாக கிழித்தெறிந்தார். இது போன்ற ராகுலின் செயல்பாடு, ஜனநாயகத்துக்கு ஒத்து வராது.

எஸ்.எம்.கிருஷ்ணா,Congress,Rahul,Rahul Gandhi,காங்கிரஸ்,ராகுல்,ராகுல் காந்தி


அப்போதைய காங்கிரஸ் தலைவர், சோனியா, ஏதேனும் நெருக்கடி கொடுத்தாரா?
கட்சியின் தலைவராக இருந்த சோனியா, காங்கிரசை ஆட்சியில் அமர்த்த சிரமப்பட்டார். எது சரி, எது தவறு என்று தீர்மானிக்க அவருக்கு வாய்ப்பிருந்தது. ஆனால், எந்த பதவியிலும் இல்லாத ராகுலின் குறுக்கீட்டை தான் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

ராகுலின் செயல்பாடு தான், நீங்கள் காங்கிரசில் இருந்து விலக காரணமா?
ராகுலின் செயல்பாடு மட்டுமல்ல; அவரது தலைமையையே ஏற்று பணியாற்ற முடியாத சூழல் எழுந்தது. அதனால் தான், காங்கிரசிலிருந்து விலகினேன்.

நடிகை, குத்து ரம்யா, மாண்டியா தொகுதியிலிருந்து காலி செய்து, டில்லியில் அரசியல் செய்வது பற்றி தங்களின் கருத்து என்ன?
ரம்யா எங்கிருந்தால் என்ன... அவரை பற்றி பேச விரும்பவில்லை.

மாண்டியா அரசியல் தான், கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. முதல்வர் குமாரசாமியின் மகன், நிகிலுக்கு, எதிராக நடிகை சுமலதா போட்டியிடுவார் போல் இருக்கிறதே. அவருக்கு ஆதரவளிப்பீர்களா?
என்னை சந்திக்க சுமலதா வர உள்ளார். அதன் பின், அவரது நிலைப்பாடு என்ன என்பது பற்றி தெரியும்.

லோக்சபா தேர்தலில், எங்கெல்லாம் பிரசாரம் செய்வீர்கள்?
பா.ஜ., தரப்பில், முன்னாள் துணை முதல்வர், ஆர்.அசோக், பிரசாரம் செய்யும்படி அழைத்தார். கட்சி மேலிடம் எங்கு போட்டியிட சொன்னாலும் பிரசாரம் செய்வேன்.

உங்கள் பேரன் நிரந்தர கணேஷ், காங்கிரசில் டிக்கெட் கேட்டு வருகிறார். ஒரு வேளை போட்டியிடும் பட்சத்தில், உங்கள் ஆதரவாளர்கள் அவருக்கு ஓட்டு போட வாய்ப்புள்ளது அல்லவா?
அவன், எலும்பியல் அறுவை சிகிச்சை டாக்டராக உள்ளார். அவர், தேர்தல் போட்டியெல்லாம் முடியாத காரியம்.

கர்நாடகத்தில் நடக்கும், ம.ஜ.த., - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி பற்றி என்ன சொல்கிறீர்கள்?
இந்த கூட்டணியே, அவசரத்தின் குழந்தை. இந்த ஆட்சியின் கிரக நிலைகளை பார்த்தால், ஆட்சி நிலைக்குமா என்பது, வரும் மே மாதத்தில் தெரிந்துவிடும்.

Advertisement

எதை வைத்து, ஆட்சி நிலைப்பது பற்றி கூறுகிறீர்கள்?
சட்டசபை தேர்தலில் ஒருவரை ஒருவர் தீவிரமாக கண்டித்து பேசினர். தேர்தல் முடிவுக்கு பின், அதே கட்சிகள் திடீரென கூட்டணி அமைத்து ஆட்சி செய்கின்றன. இரு கட்சிகளின் செயல்பாடுகளை பார்த்தால், நிலைக்குமா என்பது சந்தேகம்.

மத்திய அரசு திட்டங்களை, மாநில அரசு செயல்படுத்தவில்லை என, பா.ஜ.,வினர் எதை வைத்து குற்றம் சாட்டுகின்றனர்?
மத்திய அரசு, பல்வேறு மக்கள் நல திட்டங்களை அமல்படுத்தியுள்ளது. அதை மக்களிடம் சேர்க்க வேண்டியது, அந்தந்த மாநில அரசுகளின் கடமை. துரதிருஷ்டவசமாக, கர்நாடக கூட்டணி அரசு, மத்திய அரசு திட்டங்களை மக்களிடம் சேர்க்க முடியாமல் செய்து உள்ளனர்.

காங்கிரசில் உங்களுக்கு என, ஆதரவு கூட்டம் உள்ளது. அவர்களும், பா.ஜ.,வில் இணைவரா?
என் ஆதரவாளர்கள் அனைவரையும், பா.ஜ.,வில் இணையும்படி பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளேன். விரைவில் பெரும்பாலானோர், பா.ஜ.,வில் இணைவது உறுதி.

காங்கிரசிலிருந்து விலகி, பா.ஜ.,வில் இணைந்தீர்கள். பா.ஜ.,வில் தங்களுக்கு ஏதேனும் பிரச்னை உள்ளதா?
பா.ஜ.,வில் நிம்மதியாக உள்ளேன்; எந்த தொந்தரவும் இல்லை.


Advertisement

வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
15-மார்-201916:10:35 IST Report Abuse

Natarajan Ramanathanராகுல் எதுக்குமே சரிப்பட்டு வரமாட்டார் என்பது ஊர் உலகத்துக்கே தெரிந்த விஷயம்தான்.

Rate this:
s t rajan - chennai,இந்தியா
15-மார்-201915:48:09 IST Report Abuse

s t rajanகாங்கிரஸ் இந்த முறையும் படு தோல்வி அடைந்தால்... அதற்கு ஒரே காரணகர்த்தா ராகூலின் உளறு வாய் தான். அவர் எதற்கும் சரிப்பட்டு வரமாட்டார். அவர் தமிழ்நாட்டுக்கு செய்யும் நன்மை தில்லு முல்லு கலத்தை (திமுகவை) அழிப்பது தான்.

Rate this:
Rajathiraja - Coimbatore,இந்தியா
15-மார்-201912:47:33 IST Report Abuse

Rajathirajaஇவர் சொத்தை பார்த்தால் ராகுல் மிகவும் கடினமாகத்தான் இருப்பார் போலும். ராகுல் தலைமை பதவி வகித்த தகுதியானவர் தான்.

Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X