அரசியல் செய்தி

தமிழ்நாடு

பா.ஜ.,வுடன் கூட்டணி ஏன்? வாசன் புது விளக்கம்

Added : மார் 15, 2019 | கருத்துகள் (17)
Advertisement
 பா.ஜ.,வுடன் கூட்டணி ஏன்? வாசன் புது விளக்கம்

சென்னை:''கட்சியின் லட்சியம் வேறு; தேர்தல் கூட்டணி வேறு,'' என, த.மா.கா., தலைவர், வாசன் தெரிவித்தார்.

அவர் நேற்று அளித்த பேட்டி:தமிழகத்தை பொறுத்தவரை, எங்கள் வளர்ச்சி, எங்களுடைய எண்ணம் எல்லாம், காமராஜர் ஆட்சி அமைக்க வேண்டும் என்பது தான். அதன் அடிப்படையில், எங்கள் செயல்பாடு அமையும். தேர்தல் கூட்டணி என்பது வேறு; கட்சியின் லட்சியம் என்பது வேறு.

எங்கள் கட்சி தொண்டர்கள் கருத்தை கேட்டு, அ.தி.மு.க., கூட்டணியில் இணைந்தோம். இன்றைய அரசியல் நிலை, சூழ்நிலை, நாட்டின் பாதுகாப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு, த.மா.கா., எண்ணிக்கை அடிப்படையில் இல்லாமல், நல்ல எண்ணங்கள் அடிப்படையில், இந்த கூட்டணியை உருவாக்கி உள்ளோம்.

லோக்சபா தேர்தலில் துவங்கி, உள்ளாட்சி தேர்தல் வரை, இக்கூட்டணி வெற்றி பெறும். தேச நலன், தேச பாதுகாப்பதில், இதுவே முதல் கூட்டணி.அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணியில், ஒரு கட்சியாக, பா.ஜ., செயல்படுகிறது.மோடி ஆட்சியை பொறுத்தவரை, குறைகளை நிறையாக்க கூடியதாக, தொடர்ந்து செயல்படுகிறது. இது, ஏற்புடையதாக உள்ளது. முதல்வர், துணை முதல்வர், சாமானியர்களாக செயல்படுவதால், ஏழை மக்களின் எண்ணத்தை பிரதிபலிக்கும் திட்டங்களை, தொடர்ந்து வழங்குகின்றனர். இதை, மக்கள் வரவேற்கின்றனர்.

பா.ஜ.,வை பொறுத்தவரை, குறைகளை நிறைகளாக்க முயற்சிக்கின்றனர். அந்த நம்பிக்கை அடிப்படையில், இந்த கூட்டணி. கூட்டணி வெற்றிக்காக, 39 தொகுதிகளுக்கும் செல்ல உள்ளேன். பொதுச் செயலர் முனைவர் பாட்ஷாவும் செல்வார்.இவ்வாறு, வாசன் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
I love Bharatham - chennai,இந்தியா
16-மார்-201910:56:35 IST Report Abuse
I love Bharatham கருத்து சொல்கிறவர்கள் ...மத அடிப்படியேலே பேசுகின்றனர் ....இனி இந்து மதம் வாக்கு வாங்கி உண்டு ....இந்துக்களை எந்த கொம்பன் காட்சியானாலும் புறம் தள்ள முடியாது ....DMK கேள்வி கேளுங்க ..மத சார்பற்ற கூட்டணியாம் ....ஏன் இந்தியா யூனியன் முஸ்லீம் லீக் ...மத சார்பற்ற கட்சியோ ? ஏமாத்தியது போதும்.....இந்துக்களே விழித்தெழுங்கள் .....
Rate this:
Share this comment
Cancel
skv - Bangalore,இந்தியா
16-மார்-201906:11:47 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> நல்லவனுக்கு என்றுமே நல்ல காலம் உண்டுங்க BE GOOD டு ALL காசும் தேவைதான் ஆனால் அதுவே தான் முக்கியம் என்று கோடிகளிலே பொருளும் தீய சக்திகளா இருக்காதீங்க பிஜேபி தான் இப்போது சுத்தமாயிருக்கு வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel
Palani - Srivi,இந்தியா
16-மார்-201900:04:03 IST Report Abuse
Palani இந்த பொழப்புக்கு நாண்டுட்டு சாகலாம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X