சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சபலத்தின் விலை ரூ.2 லட்சம்

Added : மார் 15, 2019 | கருத்துகள் (22)
Advertisement
 சபலத்தின் விலை ரூ.2 லட்சம்

வேலுார்:மருந்து கம்பெனி ஊழியரிடம், 2 லட்சம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்ற பெண்ணை, போலீசார் தேடி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், தட்டக்கல்லைச் சேர்ந்தவர் சக்திவேல், 40; சென்னையில் மருந்து கம்பெனியில் பணியாற்றி வருகிறார். குடும்பத் தகராறால், மனைவி, 2016ல், குழந்தையுடன், தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.'உல்லாசமாக இருக்க பெண் தேவை' என, புரோக்கர் சீனு, 40, என்பவரை, சக்தி வேல் தொடர்பு கொண்டார்.

அவரது ஏற்பாட்டில், 10ம் தேதி சுவேதா, 25, என்ற பெண்ணுடன், வேலுார் மாவட்டம், ஏலகிரி மலையில் உள்ள, ஒரு விடுதியில், சக்திவேல் தனிமையில் இருந்து உள்ளார்.அப்போது, குளிக்க சென்ற சக்திவேலை, குளியலறைக்குள் வைத்து பூட்டிய சுவேதா, சக்திவேல் வைத்திருந்த, 2 லட்சம் ரூபாயுடன், அவரது, மாருதி ஸ்விப்ட் டிசையர் காரில் தப்பினாள்.

ஏலகிரி மலை போலீஸ் விசாரணையில், ஆந்திர மாநிலம், திருப்பதிக்கு சுவேதாதப்பிச் சென்றதும், புரோக்கர் சீனு உடந்தையாக இருந்ததும், தெரிந்தது. இருவரையும்,போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sundram - Guduvancheri,Chennai,இந்தியா
19-மார்-201911:08:27 IST Report Abuse
Ramesh Sundram இதில் ஒன்றும் தவறு இல்லை அந்த ஆளின் தேவையை அவள் பூர்த்தி செய்தாள் அவளின் தேவையை அவள் எடுத்து கொண்டு சென்று விட்டாள் இது திருட்டு கூட ஆகாது give and take அந்த பெண் நீதி மன்றத்தில் வந்து இதை எனக்கு அன்பாக தான் கொடுத்தார் என்று ஒரு அறிக்கை விட்டாலே போதும் கேஸ் தோத்து விடும்
Rate this:
Share this comment
Cancel
raghavan - Srirangam, Trichy,இந்தியா
18-மார்-201915:04:25 IST Report Abuse
raghavan புண்ணியவதி.. ஆளை போட்டுத்தள்ளாமல் கிளம்பி போனாளே ..
Rate this:
Share this comment
Cancel
arabuthamilan - Manama,பஹ்ரைன்
18-மார்-201913:44:11 IST Report Abuse
arabuthamilan பூவுக்குள் நாகம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X