பொது செய்தி

தமிழ்நாடு

'கிராமங்களில் தங்கி பயிற்சி பெற வேண்டும்'

Added : மார் 15, 2019 | கருத்துகள் (2)
Advertisement
 'கிராமங்களில் தங்கி பயிற்சி பெற வேண்டும்'

கோவை:''கல்லுாரியில் படிக்கும் மாணவர்கள், கிராமங்களில் தங்கி பயிற்சி பெற வேண்டும்; அங்குள்ள சூழல்களையும் கற்க, பாடத்திட்டத்தில் கட்டாயமாக்கப்பட வேண்டும்,'' என, துணை ஜனாதிபதி, வெங்கையா நாயுடு பேசினார்.

கோவை மாவட்டம், நீலாம்பூரில் செயல்படும், பி.எஸ்.ஜி.,தொழில் நுட்ப கல்லுாரியின், முதலாவது பட்டமளிப்பு விழா நடந்தது.மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி, துணை ஜனாதிபதி, வெங்கையா நாயுடு பேசியதாவது:

இந்தியாவில், 54 சதவீதம் பேர் விவசாயம் செய்கின்றனர். விவசாயத்தில், மாற்றம் ஏற்படும் காலம் வந்து விட்டது என கருதுகிறேன். விவசாயிகளின் கோரிக்கைகளை பிரதமரிடமும்,
மாநில முதல்வர்களிடமும் கூறி வருகிறேன்.பிரதமர் மோடி, 'தேசப்பற்று என்றால், அவரவர் வேலையை, சரியாக செய்வதே' என கூறினார். அது முற்றிலும் உண்மை. பாதுகாப்புக்கு நாம் அளிக்கும் முக்கியத்துவத்தை போன்றே, விவசாயிகளுக்கும் உதவ வேண்டும்.

உலக அளவில், பொருளாதார மதிப்பீட்டு நிறுவனங்கள், அடுத்த, 10 ஆண்டுகளில், இந்தியா மூன்றாவது பொருளாதார பலம் வாய்ந்தாக மாறும் என, மதிப்பீடு செய்துள்ளன. கல்வி என்பது வேலை தருவதற்காக மட்டுமல்ல; திறனையும், அறிவையும் வளர்ப்பது தான்.

கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்கள், சில நாட்கள் கிராமங்களில் தங்க வேண்டும். கல்வியில் ஒரு பகுதியாக, கிராமப்புறத்தில் தங்கி அங்கு நடப்பவைகளை உணர வேண்டும். அது தான் உண்மையான இந்தியா. இதை கல்வி திட்டத்தில் கட்டாயமாக்க வேண்டும்.

எதிர்காலத்தில் அனைத்தும், 'ஆன்லைன்' முறையில் அமலில் இருக்கும். எல்லாமே உங்களது மொபைல் போனில் வந்து சேரும். அரசு வழங்கும் நிதிகள், உங்களது வங்கி கணக்கில் வந்து சேரும்.பட்டம் பெறும் மாணவர்கள், தொழிலில் நேர்மையையும், நியாயத்தையும் கடைபிடிக்க வேண்டும். அதுவே அடிப்படையாக இருக்க வேண்டும்.

நியாயத்தையும், அதன் மதிப்பையும். மாணவர்களுக்கு, ஆசிரியர்கள் கற்பிக்க வேண்டும். உள்ளங்கைக்கு வந்து விட்ட, தகவல் தொழில் நுட்பங்கள், மனித வாழ்க்கையில் முன்னேற்றத்தை
ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
15-மார்-201909:58:40 IST Report Abuse
ஆப்பு //விவசாயிகளின் கோரிக்கையை பிரதமரிடம் வைத்தேன்// ஓஹோ இவுரு சொல்லித்தான் 2000 ருவா டைரக்டா வங்கிக் கணக்குல வைக்கிறாங்களோ?
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
15-மார்-201908:45:27 IST Report Abuse
Srinivasan Kannaiya இவ்வளவு நாள் இதை சொல்லலீங்களே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X