பினராயி எதிர்ப்பது மோடியையா, அதானியையா?

Updated : மார் 15, 2019 | Added : மார் 15, 2019 | கருத்துகள் (42)
Advertisement
பினராயி எதிர்ப்பது மோடியையா, அதானியையா?

கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி அரசு, தொழில் துறைக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதால், சமீப காலமாக, அங்கு, பல்வேறு தொழில் நிறுவனங்கள்,முதலீடுகளை குவிக்கத் துவங்கி உள்ளன.காங்., தலைமையிலான முந்தைய, ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசு துவக்கிய பல திட்டங்களை நிறுத்தாமல், அவற்றை துரிதப்படுத்தி செயல்படுத்துவதால், கேரள அரசு மீது, தொழில் துறையினருக்கு நம்பிக்கை அதிகரித்துள்ளது.இந்நிலையில், கேரளாவில் திருவனந்தபுரம் விமான நிலையம் உட்பட, நான்கு சர்வதேச விமான நிலையங்களை, 50 ஆண்டுகளுக்கு நிர்வகிக்கும் பொறுப்பு, பிரதமர் நரேந்திர மோடிக்கு நெருக்கமான, 'அதானி' குழுமத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு, முதல்வர் பினராயி விஜயன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

'கேரள மாநில தொழில் மேம்பாட்டு கழகம், ஒரு பயணிக்கு, 135 ரூபாய் செலவில், நிர்வாக பணிகளை மேற்கொள்வதாக ஒப்பந்த புள்ளி அளித்துள்ளபோது, 168 ரூபாய் கேட்டுள்ள, அதானி நிறுவனத்துக்கு ஒப்பந்த பணி தந்தது ஏன்?' என, பினராயி விஜயன் கேள்வி எழுப்பி உள்ளார்.தொழில் துறைக்கு ஆதரவாக செயல்படும் விஜயன், அதானி குழுமத்துக்கு எதிராக குரல் எழுப்பியது, பிரதமர், நரேந்திர மோடியை குறிவைத்துதான், என, இடது ஜனநாயக முன்னணி வட்டாரங்கள் கூறியுள்ளன.

Advertisement


வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajavelu E. - Gummidipoondi,இந்தியா
16-மார்-201910:55:42 IST Report Abuse
Rajavelu E. இங்கே பலரும் கம்யூனிஸ்ட்டுகளை பற்றி கேவலமாக பதிவு செயகிறாரகள் உங்கள் வருங்கால சந்ததி வாழும் காலத்தில் ஒருவேளை கம்யூனிஸ்ட் கட்சிகளே இல்லையென்றால் அப்போது அவர்கள் உங்களை குறித்து கேவலமான கருத்துக்களை பதிவிடுவார்கள். கம்ம்யூனிஷ்டுகள் என்றுமே ஏழை தொழிலாளர்களின் நலன் காப்பவர்கள்.
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
15-மார்-201917:12:39 IST Report Abuse
Endrum Indian எங்களுக்கு யார் அதிகம் கமிஷன் கொடுக்கிறார்களோ அவர்களுக்கு தான் நாங்கள் தொழில் உரிமம் வழங்குவோம், ஆனால் நாங்கள் கம்மினாட்டிகள் அப்படித்தானே கம்ம்யூனிஸ்ட் பினராயி விஜயன்????
Rate this:
Share this comment
Cancel
15-மார்-201914:29:40 IST Report Abuse
R.Subramanian Communist always oppose India, there is no doubt about that..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X