பொது செய்தி

இந்தியா

வீரர்கள் ஓட்டு யாருக்கு?

Updated : மார் 15, 2019 | Added : மார் 15, 2019 | கருத்துகள் (15)
Advertisement
 வீரர்கள் ஓட்டு யாருக்கு?

உத்தர பிரதேசத்தில் ஆட்சியில் இருந்த, மாயாவதியின் பகுஜன் சமாஜ் மற்றும் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சிகள், கூட்டணி அமைத்து, அண்டை மாநிலமான, உத்தரகண்டில் போட்டியிட்டாலும், அவர்களுக்கு வெற்றி வாய்ப்பு மிகவும் குறைவே.'வெற்றி வாய்ப்பு என்ன, அவர்களால், தேர்தலில் எந்த சிறு பாதிப்பையும் ஏற்படுத்த முடியாது' என, காங்., மூத்த தலைவர் கள் கூறி வருகின்றனர்.
பா.ஜ., மற்றும் காங்., இடையே தான் இந்த ஐந்து தொகுதிகளிலும் நேரடி மோதல் இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. தெஹ்ரி கர்வால், அல்மோரா, நைனிடால், ஹரித்வார் தொகுதிகளில், பகுஜன் சமாஜ் கட்சியும், போரி கர்வால் தொகுதி யில், சமாஜ்வாதியும் போட்டியிட உள்ளன.




வலுவான பா.ஜ.,கடந்த லோக்சபா தேர்தலைப் போலவே, வரும் லோக்சபா தேர்தலிலும், ஐந்து தொகுதிகளிலும் மீண்டும், பா.ஜ.,வே வெற்றி பெறும் என, பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.இதற்கு முக்கிய காரணம், சமீபத்தில் பாக்., பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள்.விவசாயம், தொழில் துறை, சேவைத் துறைகளில் அதிக அளவு வேலை வாய்ப்பு, உத்தரகண்டை சேர்ந்தவர்களுக்கு கிடையாது.

அதனால், இந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், முப்படைகளில் அதிக அளவில் பணியாற்றுகின்றனர்.பிரதமர் நரேந்திர மோடிக்கு நெருக்கமானவரான, தேசிய பாதுகாப்பு ஆலோசகர், அஜித் தோவல், இந்த மாநிலத்தைச் சேர்ந்தவர். ராணுவத் தலைமை தளபதி, பிபின் ராவத்தும் இந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்.கடந்த, 2017ல் நடந்த சட்டசபை தேர்தலில், மொத்தமுள்ள, 70 தொகுதிகளில், 57ல் பா.ஜ., வென்றது. சட்டசபை தேர்தலின் போது, பா.ஜ.,வுக்கு பலர் சென்ற பாதிப்பில் இருந்து, காங்., இன்னும் மீளவில்லை.

இதுவும், பா.ஜ.,வுக்குசாதகமாகவே உள்ளது.ஒருவேளை, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி கூட்டணி அமைத்திருந்தால், ஹரித்வாரில் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கலாம். ஆனால், அந்த அபாயமும் தற்போது இல்லாதது, பா.ஜ.,வுக்கு சாதகமாக உள்ளது.கடந்த லோக்சபா தேர்தலின் போது, 61.6 சதவீத ஓட்டுகள் பதிவானது. அப்போது, காங்., வசமிருந்த, ஐந்து தொகுதிகளையும், பா.ஜ., வென்றது. தற்போது, மாநிலத்தில் ஆளுங்கட்சியாக இருப்பதுடன், மேற்கூறிய காரணங்களால், பா.ஜ.,வுக்கு சாதகமாக உள்ளது.- கே.எஸ்.நாராயணன் -சிறப்பு செய்தியாளர்


Advertisement


வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
15-மார்-201916:06:41 IST Report Abuse
Natarajan Ramanathan நான் பார்த்தவரை சென்னையில் பெரும்பாலான இஸ்லாமியர்கள் பாஜகவுக்கு சாதகமாகவே இருக்கின்றனர். (ரிச்சி தெருவில் போய் பாருங்கள்). ஆனால் தீயமுக ஊடகங்கள் வேறுமாதிரியான பொய் செய்திகளையே சொல்கின்றன.
Rate this:
Share this comment
Cancel
BALU - HOSUR,இந்தியா
15-மார்-201913:30:56 IST Report Abuse
BALU இதில் ஆச்சரீயப்பட ஏதுமில்லைஉண்மையான தேசபக்தர்கள் பிஜேபி யைத் தான் ஆதரிப்பார்கள்.அதைவிட்டு பதவி வெறிபிடித்து, எப்படியாவது மோடியை வீட்டுக்கு அனுப்பினால் போதுமென சீனாவிடமும் பாக்கிஸ்தானுடனும் ரகசியக் கூட்டு வைத்திருக்கும் காங்கிரஸையா ஆதரிப்பார்கள்
Rate this:
Share this comment
Cancel
Ambika. K - bangalore,இந்தியா
15-மார்-201913:17:24 IST Report Abuse
Ambika. K திமுக திக பெரியார் அண்ணா கலைஞர்இவர்களின் வெற்றியே புகழ் போன்றோரின் அறியாமையே கூவத்தில் குளிக்க குடிக்க என்பது 60 களில் திமுகவின் கோஷம் 60 வருடத்திற்குபிறகும் இது வெறும் கோஷம். 20 வருடம்முன்பு அஹமதாபாத்தில் உள்ள கூவத்தின்அண்ணனாக இருந்த சபர்மதி nadhiyai தூயமையாக்குவோம் என்று கோஷமிட்டமோடி அதை செயது காட்டினார் இன்றுஜனம் அதில் குளிக்கிறார்கள் இதை சாதனை என்று ஏற்க திராவிடம் மறுக்கிறது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X