நியூசிலாந்தில் மசூதிகளில் துப்பாக்கிச்சூடு: 49 பேர் பலி

Updated : மார் 15, 2019 | Added : மார் 15, 2019 | கருத்துகள் (103)
Advertisement
Bangladesh Cricket, NewZealand, நியூசிலாந்து, துப்பாக்கிச்சூடு,  வங்கதேசம், கிரிக்கெட் அணி

கிறிஸ்ட்சர்ச்: நியூசிலாந்தில் உள்ள இரண்டு மசூதிகளில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தது. இதில் 49 பேர் உயிர் இழந்தனர். தொடர்ந்து, மருத்துவமனை அருகிலும் துப்பாக்கிசசூடு நடந்தது. கார் வெடிகுண்டு தாக்குதலும் நடத்தப்பட்டது.


நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள மசூதிக்குள் புகுந்த ஒருவன் துப்பாக்கிச்சூடு நடத்தினான். இதில் 49 பேர் உயிர் இழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.
Advertisementஇந்த சம்பவத்தை தொடர்ந்து, அந்த பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. பொது மக்கள் வீட்டை விட்டு வர வேண்டாம் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.


இதன் இடையே, கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள மற்றொரு மசூதியிலும், மருத்துவமனை வாசலிலும் துப்பாக்கிச்சூடு நடந்ததாகவும், மற்றொரு இடத்தில் கார் வெடிகுண்டு தாக்குதல் நடந்ததாகவும் அந்நாட்டு மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


துப்பாக்கிச்சூடு நடத்தியவனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். துப்பாக்கிச்சூடு நடத்தியவன், அதனை சமூக வலைதளத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்துள்ளான்.வங்கதேச வீரர்கள் மீட்பு


இந்நிலையில், டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க வங்கதேச அணி வீரர்கள் நியூசிலாந்திற்கு சென்றுள்ளனர். துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்த போது, வீரர்கள் மசூதியில் இருந்துள்ளனர். அவர்கள், துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டதும், அங்கிருந்து பத்திரமாக தப்பி சென்றனர். தற்போது அவர்கள் பத்திரமாக ஓட்டலில் உள்ளதாகவும், ஆனால், அதிர்ச்சியில் உள்ளனர் எனவும் வங்கதேச கிரிக்கெட் வாரிய செய்தி தொடர்பாளர் கூறியுள்ளனர்.மோசமான நாள்


இந்த சம்பவம் தொடர்பாக நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா அர்டெர்ன் கூறுகையில், இந்த நாள், நியூசிலாந்து வரலாற்றில் மோசமான நாள். இது எதிர்பாராத வன்முறை சம்பவம். துப்பாக்கிச்சூடு நடத்தியவனை போலீசார் கைது செய்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement
வாசகர் கருத்து (103)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Naz Malick - London,யுனைடெட் கிங்டம்
18-மார்-201903:31:07 IST Report Abuse
Naz Malick ஒரு கொடூரன் செய்த மிக பெரிய பாவ செயல். அவன் சின்னச்சிறு குழந்தைகளையும், கர்ப்பிணி பெண்களையும் விட்டு வைக்கவில்லை . இந்த அரக்கன் செய்த மூர்க்கத்திற்கு , அந்த மொத்த நியூஸிலாந்து நாட்டு மக்களும் ஒன்று கூடி அஞ்சலி செலுத்தும் காட்சியை பார்க்கிறோம். THIS EVIL PERSON WHO HAS KILLED FIFTY MEN, WOMEN AND CHILDREN IN THE MOSQUE IS BLAMING THE IMMIGRATION PROBLEM AND NAMING THE IMMIGRANTS AS INVADERS. FIRST OF ALL HE IS THE ONE WHO IS THE INVADER AND FOREIGNER IN NEW ZEALAND AS HE IS NOT EVEN A CITIZEN OF THAT COUNTRY. HE CAME ALL THE WAY FROM AUSTRALIA ONLY TO KILL ALL THESE INNOCENT PEOPLE MERCILESSLY WITH HIS SEMI AUTOMATIC GUN. BUT THE RESPONSE FROM NEW ZEALANDERS IS AMAZING.THE WHOLE COUNTRY AND ITS PEOPLE ARE SHOWING SINCERE GRIEF,SORROW AND SUPPORT AND ARE STANDING SHOULDER TO SHOULDER WITH THE VICTIMS' FAMILIES AND THE WHOLE COMMUNITY....HATS OFF NEW ZEALANDERS....THIS EVIL FROM AUSTRALIA CAME ALL THE WAY FROM THERE TO DISTURB HARMONY AND PEACE AND ALSO TO DIVIDE PEOPLE IN YOUR PEACEFUL AND PARADISE LIKE COUNTRY. BUT WITH YOUR WILL, LOVE AND COURAGE, YOU NEVER LET IT HAPPEN.....OF COURSE... NEW ZEALANDERS ARE REALLY AMAZING PEOPLE..... MY PRAYERS ARE WITH THE VICTIMS AND THEIR FAMILIES AND MAY GOD SHOWER THEM WITH ETERNAL PEACE ....
Rate this:
Share this comment
Cancel
Don Dyl -  ( Posted via: Dinamalar Android App )
16-மார்-201904:34:28 IST Report Abuse
Don Dyl I agree with you totally...this is how the Indians are turned out to be...they are terrorists on their own ideas....by religion
Rate this:
Share this comment
Cancel
makkal neethi - sel,இந்தியா
16-மார்-201900:08:10 IST Report Abuse
makkal neethi யார் செய்தலும் தண்டிக்கப்படவேண்டியர்வகள் தான் ....சுட்டவன் யார் ஏன் சுட்டான் என்ற தகவலே இன்னும் வரவில்லை அதற்குள் மூர்க்கர் கோட்டம அமைதி மார்க்கம் அது இது என்று வெறுப்புணர்வால் துடிதுடித்து தன்னைத்தானே மனழுத்தத்திற்ற்கு ஆளாக்கி கொள்கிறார்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X