கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பொள்ளாச்சி சம்பவம்: சிபிசிஐடி மனு

Added : மார் 15, 2019 | கருத்துகள் (5)
Advertisement
பொள்ளாச்சி சம்பவம், சிபிசிஐடி, திருநாவுக்கரசு,

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் பெண்கள் பலாத்காரம் செய்து, சித்ரவதை செய்த சம்பவம் தொடர்பாக திருநாவுக்கரசு, சதீஷ் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு வீட்டில் நேற்று சிபிசிஐடி போலீசார் பல மணி நேரம் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட 4 பேரையும் தங்களின் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி கேட்டு கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
natarajan s - chennai,இந்தியா
15-மார்-201916:00:43 IST Report Abuse
natarajan s ஒன்னும் கலாட்டா போவதில்லை . அதற்காகத்தான் CBI விசாரணைக்கு உதவிய. அப்படியே இது கடலில் போட்ட கல்தான். பாதிக்கப்பட்டவர்கள் யாரும் நீதிமன்றங்களுக்கு நடக்க தயாராக இருக்கமாட்டார்கள். குற்றவாளிகள் மீது rape case (IPC 376 படி) வழக்கு பதியவில்லை. wrongful comfinement criminal intimidation cyber crime IT ACT sec 66 படித்தான் நடவடிக்கை எடுக்க முடியும். எல்லாமே compoundable offence தான். மேலும் இது தேர்தல் நேரம் எதிர்க்கட்சிகளின் வாயை அடைக்க CBI விசாரணை. அவளவுதான். தேர்தலுக்கு முன்பே இதன் சலசலப்பு அடங்கிவிடும். அவர்கள் மீண்டும் வேறு ஒரு பண்ணை வீட்டில் இதை தொடருவார்கள். ருசி கண்டவர்கள் பணத்தையும் கொடுத்து company கொடுக்க பாவப்பட்ட பெண்கள் இருக்கும்போது இவனுக்கு கொண்டாட்டம்தான். போலீசுக்கு வசூல் கொட்டும் இரண்டுபக்கம் இருந்தும். 1996 களில் தமிழகத்தில் இருந்த deposit நிறுவனங்களில் முதலீடு செய்தவர்களுக்கு என்ன கிடைத்ததோ அதுதான் இதிலும். நிறுவனர் அதிபர் ஒருத்தர் கூட இதுவரை தண்டிக்கப்படவில்லை. நமது சட்டம் அப்படி.
Rate this:
Share this comment
Cancel
15-மார்-201912:36:32 IST Report Abuse
ஆப்பு இந்த சம்பவத்தால் பாதிக்கப் படப் போவது அதிமுக கூட்டணிதான். அதனால்தான் அவிங்க யாரும் வாயைத் திறக்காமல் மௌனம் காக்கின்றனர். இந்தக் கேசை சி.பி.ஐக்கு மாத்தி கலைத்து, விசாரணையை முடக்கி வெச்சு தேர்தல் வரை ஒப்பேத்திட்டா ஜெயிச்சுரலாம்னு கனவு. இதுவே தமிழகம் எங்கும் எதிரொலிச்சு பலமா போராட்டம் நடத்துனா, கூட்டணிக்கு ஆப்பு எதிரொலிக்கும்.
Rate this:
Share this comment
Cancel
ramanathan - Ramanathapuram,இந்தியா
15-மார்-201912:31:34 IST Report Abuse
ramanathan இவர்கள் ஆபத்தானவர்கள் தீரவிசாரித்து உண்மையை காவல் துறை வெளிக்கொண்டு வரவேண்டும். கிட்டத்தட்ட ஆறாண்டுகாலம் இந்த வேலையை சுதந்திரமாக செய்து கொண்டிருக்கிறார்கள் .இவர்களுக்கு மரணதண்டனை அல்லது அதற்கு சமமான தண்டணை வழங்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இவர்களது சொத்துக்களை எல்லாம் அரசு கையகப்படுத்தி விற்று இழப்பீடாக கொடுக்கலாம். அரசும் அரசுதுறை களைத்தும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு துணையாக இருக்க வேண்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X