பொது செய்தி

இந்தியா

பாக்., எல்லையில் இந்திய போர் விமானங்கள் பயிற்சி

Updated : மார் 15, 2019 | Added : மார் 15, 2019 | கருத்துகள் (16)
Advertisement

புதுடில்லி: பாகிஸ்தான் விமானப்படை அத்துமீறலை சமாளிப்பதற்கு ஏதுவாக, பாகிஸ்தானை ஒட்டிய நமது எல்லை பகுதிகளில், இந்திய போர் விமானங்கள் பயிற்சியில் ஈடுபட்டன.






காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதற்கு பதிலடி அளிக்கும் வகையில், பாகிஸ்தானின் பாலகோட்டில் உள்ள ஜெய்ஷ் இ முகமது பயஙகரவாத அமைப்பின் முகாம் மீது இந்திய விமானப்படை விமானங்கள் தாக்குதல் நடத்தின. தொடர்ந்து, பாகிஸ்தான் விமானப்படை இந்திய பகுதிகளுக்குள் ஊடுருவலாம் என இந்திய விமானப்படை கணித்தது. தொடர்ந்து முழு உஷார் நிலையிலும் இருந்தது. இந்திய பகுதிக்குள் ஊடுருவிய பாகிஸ்தானின் அதிநவீன போர் விமானமான எப் - 16 விமானத்தை, இந்தியாவின் பழைய வகையை சேர்ந்த மிக் 21 விமானம் மூலம் விங் கமாண்டர் அபிநந்தன் சுட்டு வீழ்த்தினார்.






இந்நிலையில், பாகிஸ்தான் விமானப்படை விமானங்கள் இந்திய பகுதிக்குள் ஊடுருவி அத்துமீறலில் ஈடுபட்டால், பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தானை ஒட்டிய நமது எல்லை பகுதியில், இந்திய போர் விமானங்கள் ஒத்திகையில் ஈடுபட்டன. பஞ்சாபின் அமிர்தசரஸ், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் எல்லை பகுதிகளில், இந்திய விமானப்படை விமானங்கள் அதிவேகத்தில் சென்று பயிற்சியில் ஈடுபட்டன. நேற்று (மார்ச்14) இரவு இந்த பயிற்சி நடந்தது.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chinnappa Pothiraj - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
16-மார்-201900:34:24 IST Report Abuse
Chinnappa Pothiraj இந்த அளவிற்கு பாகிஸ்தானிற்கு தைரியம் வந்தது காங்கிரஸினால் தான் இதே பாரதிய ஜனதா ஆட்சி 60 ஆண்டு காலம் ஆட்சி செய்திருந்தால் அவர்களின் கதை என்றோ முடிந்திருக்கும் இந்தியாவைப் பற்றி தவறான கண்ணோட்டம் என்ற ஒன்று இருக்க வாய்ப்பே இருக்காது. என்ன செய்ய காலத்தின் கொடுமை. மக்களே இப்பொழுதாவது விழித்திருங்கள். திரு நரேந்திர மோதி அவர்களை மீண்டும் பிரதமராக்குவோம். வந்தே மாதரம் ஜெய்ஹிந்த்
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
15-மார்-201921:15:35 IST Report Abuse
Pugazh V விமானப்படை அமைக்கப்பட்ட 1952 ஆம் ஆண்டு முதல் நடக்கும் வழக்கமான பயிற்சி தான் இது. இதில் என்ன புதிதாக இருக்கிறதோ தெரியவில்லை.
Rate this:
Share this comment
Cancel
S.Ravichandran - vellore,இந்தியா
15-மார்-201917:27:52 IST Report Abuse
S.Ravichandran ஒரு வழியில் சந்தோஷ படவேண்டிய விஷயம் மோடியின் காலத்தில் தான் இரண்டு தாக்குதல்களும் நடந்தது. பார்லிமென்ட் தீவிரவாதிகளின் தாக்குதல்களின் சமயத்தில் காங்கிரஸ் கையால் ஆகாதவன் போல் தான் நடந்து கொண்டது. அந்த சமயத்தில் என்ன செய்து கொண்டு இருந்தீர்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X