சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிலை முறைகேடு வழக்கு ஆணையர் கைது

Added : மார் 15, 2019 | கருத்துகள் (6)
Advertisement
சிலை முறைகேடு வழக்கு ஆணையர் கைது

காஞ்சிபுரம் : சிலை முறைகேடு வழக்கில் இந்து அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் வீரசண்முகமணி கைது செய்யப்பட்டுள்ளார்.
காஞ்சிபுரத்தில் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் சோமாஸ்கந்தர் சிலையில் முறைகேடு நடந்துள்ளது. இது குறித்து அண்ணாமலை என்பவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் முன்னாள் அறநிலையத்துறை ஆணையர் வீரசண்முகமணி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஏற்கனவே ,ஸ்தபதி ,முத்தையா உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிலை கடத்தல் முறைகேடு வழக்கு குறித்து பொன்.மாணிக்கவேல் தலைமையிலான அதிகாரிகள் குழு விசாரணை நடத்துகிறது.


Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jebamani Mohanraj - Chennai,இந்தியா
16-மார்-201911:28:46 IST Report Abuse
Jebamani Mohanraj அதிகார வர்க்கம் செயல் திறன் அற்ற கடமை உணர்வு அற்ற கொள்ளை கூட்டம் ஆகிவிட்டது என்பதற்கு வீர்சண்முகமணி சிறந்த எடுத்துகாட்டு.ஒரு கோவில் பிரசினையில் நடவடிகை எடுக்க நேரடியாக சந்தித்து வேண்டுகோள் வைத்தேன்.அதற்கென்ன செய்துவிட்டால் போகிறது என்றவர் பிரசினை கோவில் அதிகாரியிடம் பேசினார்.அந்த கோவில் அதிகாரி அய்யா அந்த விவகாரத்தில் கை வைத்தால் விளவு தமிழ் நாடு பூரா எதிரொலிக்கும் என்று சொல்லி இருப்பார் போல் தெரிகிறது அதிர்ச்சி அடைந்த இந்த அதிகாரி என்னது தமிழ் நாடு பூராவுமா என்று கேட்டார்.ஆக நான் சொன்ன பிரசினை பெரிய அளவு என்பதை தெரிந்து கொண்டவர் அது குறித்து ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. கைது போன்ற நடவடிக்கைகளால் அதிகார மட்டம் ஒரள்வு திருந்தினால் நல்லது திருந்துவார்களா
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
15-மார்-201916:22:47 IST Report Abuse
Bhaskaran குழந்தைகுட்டிகளுடன் இவர் க்ஷேமமாக வாழவேண்டும் கோவிலச்சொத்துக்களை ஆட்டையைப்போட்ட மகான் அல்லவோ இவர்
Rate this:
Share this comment
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
15-மார்-201913:27:14 IST Report Abuse
Lion Drsekar ஜனநாயகத்தில் மாறுவேடத்தில் சென்று உயிரை பணயம் வைத்து திருடனை பிடித்தால் காவலர்கள் வெளியே வருமுன் திருடர்கள் வெளியே வருவதுதான் உண்மை, வெளிநாட்டில் ஆள்பவர்கள் மக்களுக்காக வாழ்விறார்கள், இங்கு இவர்களுக்காக மட்டுமே வாழ்கிறார்கள், இவர்களுக்காக அவர்கள் அனைவரும் வேலை செய்கின்றனர், யாரையும் திருத்த முடியாத நிலைக்கு சென்று விற்றது,
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
15-மார்-201914:59:53 IST Report Abuse
தமிழ்வேல் அனைத்துத் துறையிலும் ஊழல் தலைமுதல் கால்வரை ஊழல் புரையோடிவிட்டது....
Rate this:
Share this comment
madhavan rajan - trichy,இந்தியா
15-மார்-201915:57:44 IST Report Abuse
madhavan rajanகாமராஜரை ஆள்வதற்கு தகுதியில்லாதவர் என்று முத்திரை குத்தி திமுகவிடம் ஆட்சியை ஒப்படைத்ததற்கு தமிழக மக்கள் இன்னும் பல தலைமுறைகளுக்கு இதுபோல் கொள்ளையடிக்கப்படுவார்கள். 1967 ல் காங்கிரஸ் ஆட்சியை ஒழிப்பதற்காக பிரச்சாரம் செய்த திமுகவுடன் அதே காங்கிரஸ் கட்சி கூட்டு சேர்ந்து மக்களை ஏமாற்றுவதை என்னவென்று சொல்ல. இந்த லட்சணத்தில் திமுக தலைவர் மற்றவர்களுடைய சூடு, சுரணை பற்றியெல்லாம் பேசுவது அதைவிட வேடிக்கை....
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
15-மார்-201917:40:27 IST Report Abuse
தமிழ்வேல் மாதவன் சார், உண்மை. ஆனால் அதிலிருந்து வந்ததுதான் அதிமுகவும். இதில் எந்த மாற்றமும் இல்லை....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X