இடைத்தேர்தல் நடத்துவதில் என்ன பிரச்சினை?: சுப்ரீம் கோர்ட் கேள்வி

Updated : மார் 15, 2019 | Added : மார் 15, 2019 | கருத்துகள் (30)
Share
Advertisement

டில்லி : தமிழகத்தில் 18 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் நடத்த ஆணையம் அறிவுறுத்தியது. மற்ற 3 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்த வேண்டும் என திமுக வழக்கு தொடந்துள்ளது.



latest tamil news




3 தொகுதி வழக்கு


தமிழகத்தில் ஏப்ரல் 18 அன்று 21 தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் நடக்கிறது. வழக்குகள் நிலுவையில் உள்ளதால் திருப்பரங்குன்றம் ,அரவக்குறிச்சி , ஒட்டப்பிடாரம் ஆகிய 3 தொகுதிகளுக்கும் தேர்தல் இல்லை என ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. 3 தொகுதிகளிலும் தேர்தல் கட்டாயம் நடக்க வேண்டும் என்று திமுக மனு அளித்துள்ளது. இந்த மனுவின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிற்கு கோரிக்கை வைத்துள்ளது திமுக.


latest tamil news


.


திமுக மனு


திமுகவின் சார்பில் ஆர்.எஸ் பாரதி , சுப்ரீம்கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். நீதிபதி ரஞ்சன் கோகாய் மற்றும் ரமேஷ் கண்ணா நீதிபதிகள் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது. 3 தொகுதிகளிலும் தேர்தல் நடத்துவதில் என்ன பிரச்சினை , 21 தொகுதிகளுக்கும் ஏன் ஒன்றாகவே தேர்தல் நடத்தப்படவில்லை என கேள்விகளை எழுப்பினர்.


latest tamil news




ஆணையம் கோரிக்கை


3 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை உடனே நடத்த உத்தரவிட முடியாது என்றும் ,தேர்தலை நடத்த உத்தரவிட எங்களை நிர்பந்திக்காதீர்கள் என்றும் நீதிபதிகள் கூறினர். வழக்கு விசாரணையை 4 வாரத்திற்கு ஒத்தி வைக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது. 2 வாரத்திற்குள் பதிலளிக்க வேணடும் என தேர்தல் ஆணையத்திற்கு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.


Advertisement




வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
16-மார்-201901:38:59 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் நாம செஞ்ச கொடுமைக்கு நிச்சயம் தோத்துருவோம் யுவர் ஹானர்.. அப்பறம் அப்சல்யூட் மைனாரிட்டி ஆயிடுவோம். ஆட்சியை கவுத்துருவாங்க யுவர் ஹானர்.. நிச்சயம் கூண்டோட ஜெயிலுக்கு போகணும் யுவர் ஹானர்.. ஜெயலலிதாவையே ஜெயிலுக்கு அனுப்புனவங்க மை லார்டு.. புரிஞ்சுக்குங்க யுவர் ஹானர் ஐயா, தெய்வமே, மை லார்டு.....
Rate this:
Cancel
Pandianpillai Pandi - chennai,இந்தியா
15-மார்-201920:26:46 IST Report Abuse
Pandianpillai Pandi தொகுதி காலியாக உள்ளது. இதற்க்கு இடைத்தேர்தல் நடத்தி ஜனநாயக கடமையை தேர்தல் ஆணையம் நிறைவேற்றவேண்டும். தொகுதி காலியாக இருப்பதால் நீதிமன்றமே நிலுவையில் உள்ளவற்றை தள்ளுபடி செய்துவிடலாம் .இதில் மக்கள் பணிக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படவேண்டும். தொகுதி காலியாக உள்ளதை காரணம் காட்டி மூன்று தொகுதிக்கும் தேர்தலை நடத்துவதே சால சிறந்தது. இதை தேர்தல் ஆணையம் கூட செய்துவிடலாம் . ஆனால் இது நடக்க ஆளும் தரப்பு விடாது. தி மு க தி மு க தான் மக்களின் நலன் கருதி தமது வழக்குகளை வாபஸ் பெற தயாராக இருக்கிறது என்பதை கேட்க்கும்பொழுது தி மு க வில் இருந்து மக்கள் பணியாற்றுவதில் பெருமிதமாக இருக்கிறது.
Rate this:
Cancel
GMM - KA,இந்தியா
15-மார்-201919:22:17 IST Report Abuse
GMM 3 தொகுதியில் தேர்தல் வழக்கு நிலுவை. வழக்கு முடிவு / இடைக்கால தீர்வு காண வேண்டும். நிர்வாகத்தில் அரசியல் குறுக்கிட்டு மக்களிடம் அதிகாரிகள் மதிப்பு இழந்து விட்டார்கள். நீதிமன்றம் பிற துறைகளில் விதிக்கு அப்பாற்பட்டு அதிகாரம் செலுத்தினால், துறைகள் பல கருத்துக்கள் மூலம் மக்களிடம் மதிப்பு இழக்கும். காங்கிரஸ் முழு அதிக அதிகாரம் காந்திஜி வைத்து கொள்ள, பாக். பிரிவினை கோரிக்கை அவருடைய உதவியுடன் நிறைவேற்ற முடிந்தது. GAG, ECI, defence, civil admn ...போன்ற துறைகள் விதி முறைகள் இல்லாமல் எடுக்கும் முடிவு அதிகாரிக்கு அதிகாரி மாறுபடும். வழக்கு தீர்ப்பும் நீதிபதிக்கு நீதிபதி மாறுபடலாம். ஆனால், மக்களிடம் பயம் கலந்த மரியாதை துறைகள் மீது வேண்டும். இல்லாவிட்டால், மாநில, மாவட்ட சுய ஆட்சி, பிரிவினை தேர்தல் நடந்து/நடத்தாதே குழுக்கள் அதிகரிக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X