திமுக., கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் எவை| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

திமுக., கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் எவை

Updated : மார் 15, 2019 | Added : மார் 15, 2019 | கருத்துகள் (65)
Advertisement

சென்னை: திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது



உடன்பாடு


தி.மு.க., கூட்டணியில், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., - கொ.ம.தே.க., - முஸ்லிம் லீக் - ஐ.ஜே.கே., ஆகிய, ஒன்பது கட்சிகள் போட்டியிடுகின்றன. இதில், காங்கிரஸ் 10 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் தலா 2 தொகுதிகளிலும், மதிமுகவுக்கு ஒரு லோக்சபா மற்றும் ஒரு ராஜ்யசபா சீட்டும், ஐஜேகே, கொ.ம.தே.க., , முஸ்லிம் லீக் கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும் வழங்கப்பட்டுள்ளன.
கூட்டணி கட்சிகளுக்கு, ஒதுக்கீடு செய்தது போக, மீதமுள்ள, 20 தொகுதிகளில், தி.மு.க., போட்டியிடுகிறது. தொகுதி பங்கீடு குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் ஆலோசனை நடந்தது. இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, அக்கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை ஸ்டாலின் அறிவித்துள்ளார்



திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்:


திமுக:


மத்திய சென்னை, தெற்கு சென்னை, வட சென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், அரக்கோணம், வேலூர், தர்மபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், நீலகிரி, பொள்ளாச்சி, திண்டுக்கல், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், தூத்துக்குடி, தென்காசி, நெல்லை


காங்கிரஸ் :


திருவள்ளூர், கன்னியாகுமரி, ஆரணி, கரூர், திருச்சி, சிவகங்கை, தேனி, விருதுநகர், கிருஷ்ணகிரி, புதுச்சேரி


மார்க்சிஸ்ட் கம்யூ.,:

கோவை, மதுரை


இந்திய கம்யூ.,:

திருப்பூர், நாகப்பட்டினம்


விடுதலை சிறுத்தைகள் :


விழுப்புரம், சிதம்பரம்

மதிமுக: ஈரோடு

முஸ்லிம் லீக்: ராமநாதபுரம்

கொ.ம.தே.க., : நாமக்கல்

ஐஜேகே: பெரம்பலூர்





17 ம் தேதி வேட்பாளர் பட்டியல்


லோக்சபா தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியல் வரும் 17 ம் தேதி வெளியிடப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

ராமநாதபுரத்தில் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் நவாஸ் கனி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.





வாசகர் கருத்து (65)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
16-மார்-201913:56:15 IST Report Abuse
Malick Raja எத்தனை கூலிப்படைகள் கூவினாலும் வெற்றிபெறும் கூட்டணியாக திமுக திகழும் .. அதன்பின் ஆட்சிக்கு வந்தபிறகு கூலிப்படைகள் கண்காணிக்கப்பட்டு தனிமையில் திருத்தப்படுவார்கள் . தமிழகத்தில் எள்முனையளவும் பிரிவினைவாதிகளின் எண்ணம் நிறைவேறாது .. தமிழர்கள் ஒரே இனம் .. சில புல்லுருவிகள் இருப்பது ஒற்றுமைக்கே வழிவகுக்கும்
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
16-மார்-201912:48:33 IST Report Abuse
Nallavan Nallavan மறைமுகமாக அதிமுக கூட்டணிக்கு உதவும் ....... நன்றி சொடல ......
Rate this:
Share this comment
Cancel
தும்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
16-மார்-201907:43:41 IST Report Abuse
தும்பி ஐயர் அனைத்துத் தொகுதிகளிலும் டெபாசிட் காலியாக வேண்டும்.... அதற்கேற்றவாறு கட்சித் தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X