France Freezes Assets Of Jaish-e-Mohammed Chief Masood Azhar | பிரான்சில் மசூத் அஸாரின் சொத்துகள் முடக்கம்| Dinamalar

பிரான்சில் மசூத் அஸாரின் சொத்துகள் முடக்கம்

Updated : மார் 15, 2019 | Added : மார் 15, 2019 | கருத்துகள் (12)

பாரீஸ்: ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அஸாரின் சொத்துகளை முடக்க பிரான்ஸ் அரசு முடிவு செய்துள்ளது.






அண்டை நாடான, பாகிஸ்தான் ஆதரவுடன் செயல்படும் பயங்கரவாத அமைப்பு, ஜெய்ஷ் - இ - முகமது. இதன் தலைவன் மசூத் அஸாரை, சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில், மத்திய அரசு மூன்று முறை முயற்சித்தது. ஒவ்வொரு முறையும், தன், 'வீட்டோ' அதிகாரத்தை பயன்படுத்தி, மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கவிடாமல், சீனா, தடுத்து விட்டது. இந்நிலையில், புல்வாமாவில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு நடத்திய தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்ததை தொடர்ந்து, அந்த அமைப்பு மீதும், அதன் தலைவன் மசூத் அஸார் மீதும், கடும் நடவடிக்கை எடுக்கும்படி, பாகிஸ்தானுக்கு நெருக்கடி கொடுத்தன. இதற்கிடையில், சமீபத்தில் நடந்த, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில், மசூத் அஸாரை, சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கக் கோரி, அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகள், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் தீர்மானம் தாக்கல் செய்தன. ஆனால், 4வது முறையாக சீனா, இந்த முயற்சிக்கு முட்டுக்கட்டை போட்டது.






இந்நிலையில், பிரான்ஸ் உள்துறை, நிதி, வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: பிரான்சில் உள்ள மசூத் அஸாரின் சொத்துகளை முடக்கி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஐரோப்பிய யூனியனின் பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் பட்டியலில் மசூத் அஸாரை சேர்ப்பது குறித்து ஆலோசனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X