பிரியங்கா மீது பாயும் மாயா

Updated : மார் 15, 2019 | Added : மார் 15, 2019 | கருத்துகள் (6)
Share
Advertisement

புதுடில்லி: உ.பி.,யில் தலித் தலைவர்களில் ஒருவர் என கருதப்படும் ‛பீம் ஆர்மி' என்ற அமைப்பின் தலைவர் சந்திரசேகர ஆசாத் என்பவருக்கு பிரியங்கா ஆதரவாக இருப்பது, பகுஜன் கட்சி தலைவர் மாயாவதிக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. இதனால் வரும் தேர்தலில் சோனியா, ராகுலுக்கு எதிராக வேட்பாளரை நிறுத்த அவர் முடிவு செய்துள்ளார்.



latest tamil news




பிரியங்கா சந்திப்பு


உ.பி.,யில் மோடிக்கு எதிராக காய்களை நகர்த்த துவங்கி உள்ளார் பிரியங்கா. சமீபத்தில் ஆசாத்தை சந்தித்த பிரியங்கா வாரணாசியில் மோடியை எதிர்த்துப் போட்டியிடுமாறு கேட்டுள்ளார்.தலித் ஓட்டுகளை நம்பி அரசியல் செய்துகொண்டு இருக்கும் மாயாவதிக்கு, ஆசாத்தின் வளர்ச்சி கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆசாத் வளர்ந்துவிட்டால் தலித் ஓட்டுகளை பிரித்துவிடுவார் என மாயா அஞ்சுகிறார்.2017 ல் சஹ்ரன்பூர் பகுதியில் ஆதிக்க ஜாதியான தாகூர் இன மக்களுடன் ஏற்பட்ட மோதலில் 2 தலித் இளைஞர்கள் கொல்லப்பட்டனர். அவர்களுக்கு ஆதரவாக பெரும் போராட்டத்தை முன்னெடுத்தார் ஆசாத். இதை வைத்து அவர் பிரபலம் அடைந்தார். தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஆசாத், 15 மாதங்கள் சிறையில் கழித்தார். ஆசாத்.மாயாவதியுடன் இணைந்து பணியாற்ற தயார் என்று அறிவித்தார் ஆசாத். மாயா இதை நிராகரித்தார். தனக்கே அவர் போட்டியாகி விடுவாரோ என்ற பயம் தான் அதற்கு காரணம்.


latest tamil news




பிரியங்கா ஆதரிப்பது ஏன்

காங்., உடன் கூட்டணி வைக்காமல் மாயா ஒதுக்கியதை காங்., தலைவர்கள் மறக்கவில்லை. இதை மனதில் வைத்து தான் ஆசாத்தை பிரியங்கா வளர்த்து விடுகிறார் என நினைக்கிறார் மாயா. பகுஜன் கட்சியில் சீட் கிடைக்காதவர்களின் பட்டியலை காங்., தயாரித்து வருகிறது. இவர்களை பகுஜன் கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக போட்டியிட வைத்து, ஆதரவு கொடுக்க காங்., நினைக்கிறது.


latest tamil news



முன்பு ரேபரேலியில் சோனியாவை எதிர்த்தும், அமேதியில் ராகுலை எதிர்த்தும் வேட்பாளரை நிறுத்த மாட்டோம் என மாயா அறிவித்திருந்தார். ஆசாத்தை காங்., வளர்த்து வருவதால் ரேபரேலியிலும் அமேதியிலும் வேட்பாளர்களை நிறுத்தப் போகிறாராம் மாயா. இப்படி மாயா செய்வது இது முதல்முறை அல்ல. 2014 தேர்தலிலும் இதே போல செய்தார். ஆனால் இம்முறை சோனியாவுக்கும் ராகுலுக்கும் எதிராக வேட்பாளரை நிறுத்த வேண்டுமானால், கூட்டணி கட்சியான சமாஜ்வாதியின் ஒப்புதலை மாயா பெற வேண்டும். மார்ச் 17 முதல் உ.பி.,யில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்ய உள்ள பிரியங்கா, ஏராளமான பிற்படுத்தப்பட்ட வகுப்பினரையும் தலித்துகளையும் சந்திக்க திட்டமிட்டுள்ளார்.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
16-மார்-201907:45:09 IST Report Abuse
அம்பி ஐயர் இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே.... சாதியைச் சொல்லித்தான் இவர்களது அரசியலே.... நடக்கிறது....
Rate this:
Cancel
Ambika. K - bangalore,இந்தியா
16-மார்-201903:52:58 IST Report Abuse
Ambika. K மிரர் சொல்வது சரி பிரியங்கா வரவினால் உ பி யில் காங்கிரஸ் 80 சீட்டையும் அள்ளும் இதன் தாக்கம் அண்டை மாநிலங்களிலும் எதிரொலிக்கும் அடுத்து காங்கிரஸ் தனித்து ஆட்சி அமைக்கும்
Rate this:
Cancel
MIRROR - Thamizhagam,இந்தியா
15-மார்-201921:09:51 IST Report Abuse
MIRROR பிரியங்கா வரவு உபி அரசியலில் பலருக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வரும் என்பதே அரசியல் வல்லுநர்களின் கணிப்பு. நிச்சயமாக தற்போதைய நாடாளுமன்ற தேர்தலில் பிரியங்காவின் வரவால் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள கருத்துக் கணிப்புகளை மாற்றியமைக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X