திருநாவுக்கரசுக்கு போலீஸ் காவல் | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருநாவுக்கரசுக்கு போலீஸ் காவல்

Added : மார் 15, 2019 | கருத்துகள் (4)
Advertisement
 திருநாவுக்கரசு , 4 நாட்கள் , போலீஸ் , காவல்

கோவை : பொள்ளாச்சியில் பாலியல் வழக்கில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசுக்கு 4 நாட்கள் போலீஸ் காவல் கொடுத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளில் திருநாவுக்கரசு முக்கியமானவர். இவரை 10 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த வேண்டும் என கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
திருநாவுக்கரசை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல அதிகாரிகள் தயாராக இருந்தனர். கோர்ட் வாசலில் பல மகளிர் அமைப்பினரும் ,பொதுமக்களும் திரண்டு இருந்தனர். குற்றவாளியை கொண்டு வந்தால் போராட்டங்களும் வன்முறைகளும் நிகழ வாய்ப்பு இருந்ததால் திருநாவுக்கரசை கோர்ட்டிற்கு கொண்டுவர முடியவில்லை.
இந்நிலையில் கோவை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி நாகராஜ் வீடியோ கான்பரன்சிங் மூலம் குற்றவாளியை 4 நாட்கள் காவலில் விசாரிப்பதற்கு அனுமதி கொடுத்தார்.





வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
16-மார்-201900:15:43 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் 5 ஆண்டுகளில் 82 தற்கொலைகள் பொள்ளாச்சி, வால்பாறை போலீஸ் சரகத்தில், கடந்த ஐந்து ஆண்டுகளில், 30 வயதுக்கு உட்பட்ட, 82 பெண்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதில், பள்ளி, கல்லுாரி மாணவிகள், 28 பேர் என, போலீஸ் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. அவர்களின் தற்கொலைக்கு, படிப்பில் கவனம் செலுத்த முடியாதது, குடும்ப பிரச்னை, வயிற்றுவலி, பெற்றோர் கண்டித்தது என, காரணங்கள் கூறப்படுகின்றன. தற்கொலை சம்பவத்தின் பின்னணியில் வேறு ஏதாவது காரணம் உள்ளதால், வெளியில் தெரிவிக்க முடியாத 'டார்ச்சர்' காரணமாக தற்கொலை செய்து கொண்டார்களா என, விசாரிக்க வேண்டுமென, மகளிர் அமைப்புகள் வலியுறுத்துகின்றன.
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
16-மார்-201900:06:39 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் அடிச்சி கேப்பாங்க "தெரியாது"ன்னு சொல்லிட்டு..
Rate this:
Share this comment
Cancel
15-மார்-201921:43:16 IST Report Abuse
ஆப்பு அப்பிடியே பாதுகாப்பா வெச்சு நிரபராதின்னு விடுதலை செஞ்சாலும் ஆச்சரியமில்லை. பாத்தா பெரிய இடத்து சிபாரிசு புள்ளாண்டான் மாதிரி இருக்கான். மாட்டுனா பெரிய புள்ளிகள் மாட்ட வாய்ப்பு இருக்கு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X