பதிவு செய்த நாள் :
வெறியாட்டம்!
நியூசிலாந்து மசூதியில் சரமாரி துப்பாக்கி சூடு
இனவெறி தாக்குதலில் 49 பேர் பரிதாப பலி
இந்தியர்கள் மாயமானதால் கடும் அதிர்ச்சி

கிறைஸ்ட்சர்ச்: நியூசிலாந்தின் இரண்டு மசூதிகளில், நான்கு பேர் அடங்கிய கும்பல் புகுந்து, சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதில், 49 பேர், பரிதாபமாக பலியாகினர். இந்த தாக்குதலை அடுத்து, 'ஒன்பது இந்தியர்களை காணவில்லை' என, இந்திய துாதரகம் தெரிவித்துள்ளதால், அவர்களும், தாக்குதலில் பலியாகி இருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. திட்டமிட்டு, இந்த இனவெறி தாக்குதலை நடத்திய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெறியாட்டம்,நியூசிலாந்து,மசூதி,துப்பாக்கி சூடு,இனவெறி தாக்குதல்,49 பேர்,பரிதாப பலிதென்மேற்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடான, நியூசிலாந்தின் முக்கிய நகரங்களில் ஒன்று கிறைஸ்ட்சர்ச். இங்குள்ள, அல் - நுார் என்ற மசூதியில், நேற்று, ஏராளமானோர் தொழுகையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, கறுப்பு உடை மற்றும் தலையில், 'ஹெல்மெட்' அணிந்த மர்ம நபர் ஒருவன், மசூதிக்குள் நுழைந்தான். அவன் கைகளில் இந்த, அதிநவீன இயந்திர துப்பாக்கியால், கண்ணில் பட்டவர்களை எல்லாம், சரமாரியாக சுடத் துவங்கினான். இதைப் பார்த்து, மசூதி யில் இருந்தவர்கள் அலறி அடித்து ஓடினர். சற்றும் பதறாமல், மசூதியின் ஒவ்வொரு பகுதியாகச் சென்று, அங்கு இருந்தவர்களை, அந்த மர்ம நபர் சுட்டுக் கொன்றான். தொழுகைக்காக வந்தவர்கள், ரத்த வெள்ளத்தில் சரிந்தனர்.


இந்த கொடூர சம்பவம் குறித்து, அல் - நுார் மசூதிக்கு அருகில் வசிக்கும், லென் பென்னா என்பவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது: மர்ம நபர், மசூதிக்குள் நுழைந்த சில நிமிடங்களில், துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. சில நிமிடங்களுக்கு பின், அவன் வெளியே வந்தான். அவன் தலையில் அணிந்திருந்த ஹெமெட்டில், ஏதோ ஒரு கருவி இருந்தது. மசூதி வாசலில், சாலை ஓரத்தில் நடந்து சென்றவர்களையும், அவன் சுட்டான். பின், அந்த துப்பாக்கியை வீசிவிட்டு, அருகில் இருந்த அவனது காரில் இருந்து, வேறொரு துப்பாக்கியை எடுத்து,

மீண்டும் மசூதிக்குள் சென்று சுட்டான். பின், வெளியே வந்து, காரில் ஏறி சென்றான். இவ்வாறு அவர் கூறினார்.


இந்த சம்பவத்தை தொடர்ந்து, நியூசிலாந்தின் லின்வுட் என்ற இடத்தில் உள்ள மசூதியில், இதே போன்ற ஒரு துப்பாக்கி சூடு சம்பவம் நடந்தது. இதிலும், சிலர் கொல்லப்பட்டனர். இந்த இரண்டு துப்பாக்கி சூடு சம்பவத்திலும், மொத்தம், 49 பேர் பலியாகினர். இதில் பலியான பெரும்பாலானோர், வேறு நாடுகளில் இருந்து, நியூசிலாந்துக்கு குடிபெயர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.


இந்த சம்பவம் குறித்து, நியூசிலாந்து பிரதமர், ஜசிந்தா ஆர்டன், செய்தியாளர்களிடம் கூறியதாவது: இதை, பயங்கரவாத தாக்குதல் என்று தான் கூறவேண்டும். நியூசிலாந்தில் குடியேறியவர்கள் மற்றும் அகதிகளாக தஞ்சம் அடைந்தவர்களுமே, இந்த தாக்குதலில் அதிகம் உயிரிழந்துள்ளனர். இது, இனவெறியால் நடத்தப்பட்ட கொடூரம். உயிரிழந்தவர்களை தவிர, 20 பேர் கவலைக்கிடமான நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.


இந்த தாக்குதல் தொடர்பாக, ஒரு பெண் மற்றும் மூன்று ஆண்களை, போலீசார் கைது செய்துள்ளனர். அதில் ஒருவன் ஆஸ்திரேலியாவை சேர்ந்தவன் என தெரியவந்துள்ளது. அதை, ஆஸ்திரேலிய பிரதமர், ஸ்காட் மோரிசனும் உறுதி செய்துள்ளார். மற்றபடி, கைது செய்யப்பட்டவர்கள் குறித்த தகவல்களை வெளியிட, போலீசார் மறுத்துவிட்டனர். துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட மர்ம நபர், 74 பக்க அறிக்கை ஒன்றை எழுதி உள்ளான். அதில், தன்னை 28 வயதான ஆஸ்திரேலிய குடிமகன் என்றும், இந்த தாக்குதலை நடத்தவே நியூசிலாந்து வந்ததாகவும், தான், எந்த பயங்கரவாத அமைப்பையும் சேர்ந்தவன் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளான்.


மற்ற நாடுகளில் இருந்து நியூசிலாந்தில் குடியேறுவோர் மீது, தன் கோபத்தை அந்த கடிதத்தில், அவன் வெளிப்படுத்தி உள்ளான். இந்த சம்பவம் குறித்து, கிறைஸ்ட்சர்ச் போலீஸ் கமிஷனர் மைக் புஷ், செய்தியாளர்களிடம் கூறியதாவது: கிறைஸ்ட்சர்ச் பகுதியில் கார் ஒன்றில், அதிநவீன சக்தி வாய்ந்த இரண்டு வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. அதில் ஒன்று செயலிழக்கச் செய்யப்பட்டது.

Advertisement

மற்றொன்றை செயலிழக்க செய்யும் பணி நடக்கிறது. இன்று ஒரு நாள் மட்டும், மசூதிக்கு யாரும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.


இந்த தாக்குதல் சம்பவத்துக்கு பின், 'இந்தியாவை சேர்ந்த ஒன்பது பேரை, காணவில்லை' என, நியூசிலாந்துக்கான இந்திய துாதர், சஞ்சீவ் கோஹ்லி தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பது குறித்து, மத்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையில், காணாமல் போன ஒன்பது இந்தியர்களில், தெலுங்கான மாநிலம், ஐதராபாதை சேர்ந்த அகமது ஜஹாங்கீரும் ஒருவர் என்ற தகவல் வெளியாகிஉள்ளது. இந்த கொடூர சம்பவத்துக்கு, பிரதமர் மோடி உட்பட, பல சர்வதேச தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அவசர உதவி எண்கள்:

இது குறித்து, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தி தொடர்பாளர், ரவீஷ் குமார், செய்தியாளர்களிடம் கூறியதாவது: காணாமல் போன இந்தியர்கள் தொடர்பாக, உள்ளூர் அதிகாரிகளுடன், நியூசிலாந்துக்கான இந்திய துாதரக அதிகாரிகள், தகவல் கேட்டு வருகின்றனர். உறுதியான தகவல்களுக்காக காத்திருக்கிறோம். அதுவரை, பெயர்கள் மற்றும் எண்ணிக்கை குறித்து, உடனடியாக எதுவும் அறிவிக்க இயலாது. நியூசிலாந்தில் வசிக்கும் தங்கள் உறவினர்களை பற்றி தகவல் அறிய, உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தகவல் தேவைப்படுவோர், 021803899 மற்றும் 021850033 என்ற எண்களில், நியூசிலாந்தில் உள்ள இந்திய துாதரகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.வங்கதேச கிரிக்கெட் அணி:

வங்கதேச கிரிக்கெட் அணியினர், நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் 'டெஸ்ட்' போட்டிகளில் பங்கேற்பதற்காக, அந்நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளனர். அவர்கள் பங்கேற்கும் கடைசி டெஸ்ட் போட்டி, இன்று நடப்பதாக இருந்தது. இதையடுத்து, துப்பாக்கி சூடு நடந்த, அல் - நுார் மசூதியில் தொழுகை நடத்த, வங்கதேச அணியினர், நேற்று மதியம் புறப்பட்டனர். அவர்கள், மசூதியை அடைவதற்கு சற்று முன், இந்த துப்பாக்கி சூடு சம்பவம் நடந்ததாகவும், மயிரிழையில் அவர்கள் உயிர் தப்பியதாகவும், வங்கதேச அணியின் மேலாளர், காலீத் மசூத் தெரிவித்துள்ளார். வீரர்கள் அனைவரும் பத்திரமாக ஓட்டல் அறைக்கு திரும்பியதாகவும், போட்டியை ரத்து செய்து விட்டு, நியூசிலாந்தில் இருந்து புறப்பட திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.நேரலையில் படுகொலை:

இந்த துப்பாக்கி சூட்டை நிகழ்த்தியவன், தலையில், 'ஹெல்மெட்' அணிந்திருந்தான். அதில், 'கேமரா' பொருத்தி, அதன் வாயிலாக, 'பேஸ்புக்' சமூக வலைதளத்தில் இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை நேரடி ஒளிபரப்பு செய்தான். இதை பார்த்து, பலர் அதிர்ச்சியில் உறைந்தனர். இந்த, 'வீடியோ' உலகம் முழுவதும், சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. பார்ப்பவர் மனதை கலங்க செய்யும் இந்த வீடியோவை பகிர்வதை உடனடியாக நிறுத்தும்படி, நியூசிலாந்து போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.Advertisement

வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dinesh Pandian - Hyderabad,இந்தியா
19-மார்-201914:10:12 IST Report Abuse

Dinesh Pandianதுப்பாக்கி எளிதில் கிடைக்கிறது , இதை தடுக்க வேண்டும்

Rate this:
k balakumaran - London,யுனைடெட் கிங்டம்
18-மார்-201900:57:40 IST Report Abuse

k balakumaranஇந்த நாடுகளுக்கு சென்று வாழுபவர்கள் இன்னொரு நாட்டில் இருந்து இடம் பெயர்ந்தவர்கள்.அய்யா, வாழ விடுங்கள் என்று கை ஏந்தி காலில் விழுந்து அந்த நாட்டின் குடியுரிமை பெறுகின்றனர், பலர் அதை மறந்து அந்த நாட்டில் அமைச்சர், பிரதமர் ஆக ஆசைப்படும் போதும், பதவியை பாவித்து தமது இனத்தவருக்கு கூடுதலாக ஒரு வலை பின்னல் மூலம் உதவுவதன் மூலம் மண்ணின் மைந்தர்களின் வெறுப்பை சம்பாதிக்கின்றனர். வேலை இல்லாதவருக்கு பண கொடுப்பனவு அரசு கொடுக்கிறது, வீடு இல்லாத வசதி அற்றவருக்கும் வீடு சட்டத்தின் படி கொடுக்க பட வேண்டும், ஆனால், கொடுக்கும் இடத்தில் இருந்து கொண்டு மண்ணின் மைந்தருக்கு அந்த சலுகைகளை மறுப்பது நடக்கிறது, இதனால் மண்ணின் மைந்தர் வெறுப்பு அடைவது இயல்பு. முந்தா நாள் அந்த நாட்டுக்கு வந்த வந்தேறுகுடி அகதிக்கு கிடைக்கும் வேலை வாய்ப்பு மண்ணின் மகனுக்கு மறுக்கப்படுகிறது. மண்ணின் மக்களுடன் நெருக்கமாக பழகினால் அவர்கள் அனுபவிக்கும் துன்பத்தை உணர முடியும். 8 வயது சிறுவன் எங்கள் பணத்தை நீங்கள் எடுத்து கொள்கிறீர்கள் என்று சொல்லும் அளவுக்கு பிஞ்சு நெஞ்சில் வன்மம் வளர்கிறது, காரணம் வறுமை. மறு புறம் அவர்களை ஏமாற்றும் சுய லாப அரசியல்வாதிகள். நாம் என்றும் இந்த நாடுகளுக்கு வந்தேறு குடிகள் என்பதை நாம் மறக்க கூடாது, அதாவது , ஒரு அளவுக்கு தான் ஊர் குருவி பறக்க முடியும் என்பது எமது அனுபவ உண்மை.எவ்வளவு அன்பாக பழகினாலும் நாம் அவர்களாக முடியாது என்பதே யதார்த்தம். நாம் வாழும் இப்புலம் பெயர் வாழ்வும் நிலை அற்றதே. ஒரு சீக்கியர் பேட்டி கொடுக்கிறார், தான் 15 வீடுகள் வைத்து இருக்கிறேன் என்று, ஒவ்வொரு நிறத்தில் வாரம் ஒரு நாள் ஒவ்வொரு விலை உயர்ந்த கார் ஓடுகிறேன் என்று, அதை பார்க்கும் மண்ணின் மகன் கறுவி கொண்டு தான் இருப்பான். இப்படி தான் வெறுப்பு வளர்கிறது,அன்பு, அறம், கருணை, வாழு, வாழ விடு, அடுத்தவருக்கு உதவுவது என்ற உயர்ந்த இந்து மத கோட்பாட்டின் படி வாழ்ந்தால் உலகில் அமைதி மட்டுமே நிலவும். உலகை படைத்தவன் படி அளந்து கிட்டே இருப்பான். எல்லாம் அவன் செயல்.

Rate this:
anbu - London,யுனைடெட் கிங்டம்
16-மார்-201919:15:03 IST Report Abuse

anbuஇப்படித்தான் நாங்க 72 கிடைக்குமென்று கடவுள் பெயரால் அடுத்தவரை கொல்லும்போது அவர்கள் எப்படி துடி துடித்து இறந்திருப்பார்கள். இறந்தவரின் குடும்பம் எவ்வளவு வேதனை அடைந்திருக்கும் ,கஷ்டப்பட்டிருக்கும் ,துயரப்பட்டிருக்கும். இறந்தவரின் வருமானத்தில் அவரை நம்பி வாழும் குடும்பம் நடுத்தெருவில் நின்றிருக்கும். கடவுள் தான் எல்லோரையும் பல பலவிதமாக படைத்திருப்பான். அவனது அரிய படைப்பை அவன் பெயரால் கொல்வது எப்படி சரியாகும். கொஞ்சம் நிதானமாக சிந்தித்தால் இதுபோன்ற அனர்த்தம் நிகழ வாய்ப்பு இருக்காது. மூளைச்சலவை செய்யப்பட்ட கூட்டம் செய்யும் வெறிச்செயலை மதத்தின் பெயரால் கண்டிக்காமல் உள்ளூர வரவேற்று பாசாங்கு கண்டனங்கள் தெரிவிப்பதும், வேறு வேறு சப்பைக்கட்டு காரணங்களை காட்டி நழுவுவதும் இதுபோன்ற அனர்த்தங்கள் பெருகவாய்ப்பு ஆகின்றன. சொர்கம் என்பது வேறெங்குமில்லை. அது இங்கே தான் உண்டு. அதை நாம் தான் அன்பு ,அமைதி, பொறுமை, சகிப்பு ,அரவணைப்பு , இரக்கம், கூடி வாழ்தல் மூலம் அமைக்க வேண்டும். இதை விடுத்து போகாத ஊருக்கு வழி தேடினால் அழிவும் அவலமும் தான் மிஞ்சும். இன்னும் சொல்ல போனால் மூர்க்கத்தின் பாஷையில் முரடன் பதில் கொடுத்துள்ளான் என்றே கருதலாம். இது முடிவற்ற மோதலையும் அழிவையும் தருமே அன்றி தீர்வு என்றுமே வராது. கொஞ்சம் திருத்தி கொண்டால் அமைதி திரும்பும்.

Rate this:
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
16-மார்-201923:41:29 IST Report Abuse

தமிழ்வேல் இதில் ஒன்றை மறந்து விடுகின்றீர்கள். தீவிரவாதி மூர்க்கனையும், முரட்டுத் தீவிரவாதியைப் பற்றியும் பேசுங்கள். ஆனால் அவர்களால் சாகடிக்கப் பட்ட அப்பாவிகளை எப்படி தூற்றிப்பேச முடிகின்றது ? அவர்களை கீழே சிலர் "49 தீவிர வாதி துளைந்தார்கள்" என்று எழுதுவது மனிதமா ? அவன்களுக்கும் (தீவிரவாதிகளுக்கும்) இவர்களுக்கும் என்னதான் வித்தியாசம் உள்ளது ? ///..... அதை நாம் தான் அன்பு ,அமைதி, பொறுமை, சகிப்பு ,அரவணைப்பு , இரக்கம், கூடி வாழ்தல் மூலம் அமைக்க வேண்டும்......மூர்க்கத்தின் பாஷையில் முரடன் பதில் கொடுத்துள்ளான் /// ...

Rate this:
மேலும் 17 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X