அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
அ.தி.மு.க., கூட்டணி,தொகுதி பங்கீடு,ஜவ்வு,சமரசம் ஏற்படாததால்,சிக்கல்,பிரச்னை,நிர்ப்பந்தம்

சென்னை: கூட்டணி பேச்சை போலவே தொகுதிகள் பங்கீட்டிலும், அ.தி.மு.க., கூட்டணி கட்சிகளுக்கு இடையேயான பேச்சு ஜவ்வாக இழுக்கிறது. தே.மு.தி.க., - பா.ஜ., தொகுதிகளை முடிவு செய்வதில் சமரசம் ஏற்படாததால் பட்டியல் அறிவிப்பில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. எனினும் வரும் 19ல் வேட்புமனு தாக்கல் துவங்க உள்ளதால் 18க்குள் இப்பிரச்னையை முடிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஆளும் அ.தி.மு.க., தலைமைக்கு ஏற்பட்டு உள்ளது.

அ.தி.மு.க., கூட்டணியில், பா.ம.க., - பா.ஜ., - தே.மு.தி.க., - புதிய தமிழகம் - புதிய நீதிக்கட்சி - த.மா.கா., - என்.ஆர்.காங்கிரஸ் போன்ற கட்சிகள் இணைந்துள்ளன. ஒரே நாளில், பா.ம.க., மற்றும், பா.ஜ.,வுடன், கூட்டணி பேச்சில் உடன்பாடு ஏற்பட்டது. அதேநேரத்தில், தே.மு.தி.க.,வுடன் உடன்பாடு ஏற்படுவதில், நீண்ட இழுபறி ஏற்பட்டது. தே.மு.தி.க., தரப்பில், அதிக தொகுதிகள் எதிர்பார்க்கப்பட்டது; அ.தி.மு.க., தர மறுக்கவே, முடிவு ஏற்படாமல் இருந்தது. இரு தரப்பினருக்கும் இடையே, மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் மத்தியஸ்தம் செய்த பிறகும், கூட்டணிக்கு சம்மதம் தெரிவிக்க, தே.மு.தி.க., தயங்கியது.

இதற்கிடையில், தி.மு.க., கூட்டணியில், வேகமாக உடன்பாடு ஏற்பட்டு,

கூட்டணி இறுதி செய்யப்பட்டு, வேறு கட்சிக்கு இடமில்லை என, அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, வேறு வழியின்றி, அ.தி.மு.க., கூட்டணிக்கு, தே.மு.தி.க.,. உடன்பட்டது. இரு கட்சிகள் இடையே உடன்பாடு கையெழுத்தானது. அதன்பின், த.மா.கா.,வுடன் நடந்த பேச்சிலும், அதேபோன்ற இழுபறி ஏற்பட்டது. த.மா.கா., இரண்டு தொகுதிகளை கேட்டது. பல கட்ட பேச்சுக்கு பின், த.மா.கா.,வுக்கு, ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டு, உடன்பாடு காணப்பட்டது.

இதையடுத்தே, அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணி இறுதி வடிவம் பெற்றது. கூட்டணிக்கு தலைமை வகிக்கும்,

அ.தி.மு.க., 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. கூட்டணி கட்சிகளான, பா.ம.க., ஏழு; பா.ஜ., ஐந்து; தே.மு.தி.க., நான்கு தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி, த.மா.கா., மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் ஆகியவை, தலா, ஒரு தொகுதிகளில் போட்டியிட உள்ளன. எந்த கட்சிக்கு, எந்த தொகுதியை ஒதுக்குவது என்பது குறித்து முடிவு செய்வதற்காக, இரண்டு நாட்களுக்கு முன், அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், கூட்டணி கட்சிகள் கூட்டம் நடந்தது; அதில், முடிவு ஏற்படவில்லை.

தே.மு.தி.க., தங்களுக்கு ஒதுக்கப்பட்ட, வட சென்னை தொகுதிக்கு

பதிலாக, கிருஷ்ணகிரியை கேட்கிறது. பா.ஜ., தங்களுக்கு ஒதுக்கப்பட்ட, நீலகிரிக்கு பதிலாக, தென்சென்னை அல்லது ராமநாதபுரத்தை கேட்கிறது. இதில் முடிவு ஏற்படாததால், சிக்கல் தொடர்கிறது. கூட்டணி பேச்சு இழுத்து கொண்டே போனது போல, தற்போது தொகுதி பங்கீடும், ஜவ்வாக இழுக்கிறது. வரும், 19ம் தேதி, வேட்புமனு தாக்கல் துவங்குகிறது. எனவே, அதற்கு முன், தொகுதிகளை முடிவு செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து, அ.தி.மு.க., நிர்வாகிகள் கூறுகையில், 'தொகுதிகளை ஒதுக்குவதில் இழுபறி ஏற்பட்டது என்பது உண்மை தான். ஆனால், தொடர் பேச்சு வாயிலாக, அதற்கு தீர்வு காணப்பட்டு விட்டது. இன்று அல்லது நாளை, கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் பட்டியல் வெளியிடப்படும்' என்றனர்.

நாளை மா.செ.,க்கள் கூட்டம்:

அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம் நாளை காலை 10:30 மணிக்கு சென்னையில் அக்கட்சி தலைமை அலுவலகத்தில் நடக்க உள்ளது. இதில் வேட்பாளர்கள் தேர்வு குறித்து முடிவெடுக்கப்பட உள்ளது. அன்றைய தினம் அல்லது அதற்கு அடுத்த நாள் வேட்பாளர் அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.



Advertisement

வாசகர் கருத்து (50)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்மைந்தன் - திண்டுக்கல் ,இந்தியா
16-மார்-201920:15:08 IST Report Abuse

தமிழ்மைந்தன் ஊழல்திமுக ஆட்களுக்கு இரண்டாவது அடிமை இதோ

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
16-மார்-201916:26:06 IST Report Abuse

Pugazh Vபணத்தை வாரி இறைத்து மாணவர்களை தூண்டி, மாணவ மாணவியர்களை அவமானப்படுத்துவதன் பின்விளைவுகளை நீங்கள் அனுபவிக்க போகிறீர்கள்

Rate this:
சிவ.இளங்கோவன் . - Thanjavur,இந்தியா
16-மார்-201915:11:30 IST Report Abuse

சிவ.இளங்கோவன் .பணத்தை மட்டுமே மூலதனமாக வைத்து தேர்தலை சந்திக்க வரும் அடிமை கூட்டணி மண்ணை கவ்வ போவது உறுதி .. கபிலன் போன்ற முகமூடிகள் இத்தேர்தலின் மூலம் வைத்து செய்யப்படுவார்கள் ..

Rate this:
மேலும் 47 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X