பதிவு செய்த நாள் :
வரலாறு மாறுமா
எதிர்க்கட்சிகள் கூட்டணி தேறுமா!

அரசியல் கணக்குகள் மற்றும் கட்சிகளின் இலக்குகள் ஆகியவையே, ஒரு கூட்டணியை வலிமையானதாக்கும். இது, எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கும் பொருந்தும். மேற்கு வங்க முதல்வர், மம்தா பானர்ஜி, கோல்கட்டாவில் நடத்திய, எதிர்க்கட்சிகள் பேரணியில், அதிகளவில் எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்கேற்றதை, இதற்கு உதாரணமாக கூறலாம்.

வரலாறு மாறுமா,எதிர்க்கட்சிகள்,கூட்டணி,தேறுமா!


'மஹாகத்பந்தன்' என்ற பெயரில், எதிர்க்கட்சிகளின், மெகா கூட்டணி அமைந்துள்ளது, ஆளும், பா.ஜ.,வுக்கு, வரும் லோக்சபா தேர்தல் அவ்வளவு சுலபமானதாக இருக்காது என்பது உறுதியாகி உள்ளது. அதே நேரத்தில், பல்வேறு எதிர்க்கட்சிகள் இணைந்து கூட்டணி அரசு அமைக்கும் வரலாறு, மீண்டும் திரும்புமா என்ற கேள்வியும் எழுகிறது. லோக்சபாவுக்கு ஏழு கட்டங்களாக, ஏப்., 11 முதல் மே, 19 வரை தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தல், மத்தியில் ஆளும், பா.ஜ., தலைமையிலான, தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு இடையேயான போட்டியாக பார்க்கப்படுகிறது.

அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றாக இணைந்து, மெகா கூட்டணியை உருவாக்க முடியாவிட்டாலும், இந்த எதிர்க்கட்சிகள் எல்லாம், ஒரே மனநிலையில் உள்ளன.அது, பா.ஜ.,வை, குறிப்பாக, பிரதமர் மோடியை வீழ்த்துவது என்பது தான். இதற்காக தான், இந்த எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. நம் நாட்டில், இதற்கு முன்பும், இது போல, எதிர்க்கட்சிகளின் கூட்டணி அரசு அமைந்துள்ளது. அந்த வரலாற்றை சற்று பார்ப்போம்.

1977 - ஜனதா பரிவார்:


காங்., பிரதமர், இந்திரா கொண்டு வந்த, எமர்ஜன்சிக்குப் பின், நடந்த இந்த தேர்தலில், எதிர்க்கட்சிகளும், மக்களும், ஒரே மனநிலையில் இருந்தனர். இந்த தேர்தலில், மொத்தமுள்ள, 542 தொகுதிகளில், 51.89 சதவீத ஓட்டுகளுடன், ஜனதா கட்சி கூட்டணி, 345ல் வென்றது. காங்., 35 சதவீத ஓட்டுகளுடன், 154 இடங்களை பெற்றது. இந்த சோதனை முயற்சி, எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை காட்டியது. மேலும், மிகவும் வலுவான ஆளுங்கட்சியை வீழ்த்த முடியும் என்பதையும், இந்த தேர்தல் காட்டியது.

1989 - தேசிய முன்னணி:


காங்., பிரதமர் ராஜிவுக்கு எதிராக, வி.பி.சிங் தலைமையில், பல கட்சிகள் அடங்கிய கூட்டணி போட்டியிட்டு ஆட்சியைப் பிடித்தன. 'போபர்ஸ்' பீரங்கி ஊழலால், பிரதமராக இருந்த ராஜிவ் ஆட்சியை இழந்தார். ஜனதா தளம், தெலுங்கு தேசம், தி.மு.க., அசோம் கன பரிஷத் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து, தேசிய முன்னணி கூட்டணி அரசை அமைத்தன. முந்தைய தேர்தலில், 48.1 சதவீதத்துடன், 415 தொகுதிகளில் வென்ற காங்., 39.5 சதவீத ஓட்டுகளுடன், 197ல் மட்டுமே வென்றது. ஜனதா தளம், 143; கம்யூ., கட்சிகள், 45 இடங்களில் வென்றன. முந்தைய தேர்தலில், இரண்டு தொகுதிகளில் வென்ற, பா.ஜ., 85 தொகுதிகளில் வென்று, ஆட்சிக்கு ஆதரவு அளித்தது.

2004 - ஐக்கிய முற்போக்கு கூட்டணி:


வாஜ்பாய் தலைமையிலான, பா.ஜ., அரசுக்கு எதிராக, 2004 தேர்தலில், பல்வேறு பிராந்திய கட்சிகள் இணைந்த, ஐக்கிய முற்போக்கு கூட்டணியை, காங்., உருவாக்கியது. இந்தக் கூட்டணி, 61.7 சதவீத ஓட்டுகளுடன், 335 தொகுதிகளில் வென்றது. பா.ஜ., கூட்டணி, 23.75 சதவீத ஓட்டுகளுடன், 182ல் வென்றது. தற்போது, 2019 லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு எதிர்க்கட்சிகள் இணைந்துள்ளன.

Advertisement

விவசாயிகள் பிரச்னை, வேலைவாய்ப்பின்மை, 'ரபேல்' போர் விமான ஒப்பந்தம் போன்ற பிரச்னைகளை, இந்தக் கட்சிகள் முன் வைத்துள்ளன.

லோக்சபா தேர்தல் என்பது, தேசிய அளவில் நடந்தாலும், மாநில அளவிலான அரசியல் கணக்குகள் மற்றும் கட்சிகளின் எதிர்பார்ப்பு ஆகியவை, லோக்சபா தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு அதிகம் உள்ளது. உதாரணமாக, உத்தர பிரதேசத்தில், மொத்தமுள்ள, 80 தொகுதிகளில், கடந்த தேர்தலில், பா.ஜ., 71ல் வென்றது. தற்போது, முன்னாள் முதல்வர்களான, மாயாவதியின் பகுஜன் சமாஜ் மற்றும் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சிகள், கூட்டணி அமைந்துள்ளன.

கடந்த தேர்தலில், பா.ஜ.,வுக்கு 43.3 சதவீத ஓட்டு கிடைத்தது, பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி கூட்டணிக்கு கிடைத்த மொத்த ஓட்டு சதவீதம், 42.65 சதவீதம். தற்போது, இவ்விரு கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளதால், முந்தையத் தேர்தலை விட, 50 சதவீதம் குறைவான இடங்களிலேயே, பா.ஜ., வெல்லும் என, கூறப்படுகிறது. தற்போது, பெரும்பாலான எதிர்க்கட்சிகளின் ஒரே இலக்கு, பா.ஜ., அரசை, குறிப்பாக, பிரதமர் நரேந்திர மோடியை வீழ்த்துவதே. தங்கள் மாநிலங்களில் இவர்கள் தனித்தனியாக போட்டியிட்டாலும், தேர்தலுக்குப் பின், ஒன்று சேருவதற்கு, இந்த இலக்கே காரணமாக அமைய வாய்ப்புள்ளது.

- கே.எஸ்.நாராயணன்
- நமது சிறப்பு நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
16-மார்-201918:10:03 IST Report Abuse

A.George AlphonseThe old history of opposition parties Mega Koottani's main reason reveals that the common point of defeating the ruling party only.In those days to remove the Congress from power and now to remove the BJP from power.In olden days to remove Mrs.Indira Gandhi and Mr.Rajiv Gandhi (both were Congress) from power and now to remove Mr.Narra Modi(BJP) from power.But the opposition parties Koottani never Complecated their full terms when they came to Power and again the Congress came into power.This time also the past history may repeat once again without any doubt.Only wastage of time, energy and monies of the people and our country but not concreat and Permanent solutions for the people problems and betterment of our country at any time.

Rate this:
தமிழ்மைந்தன் - திண்டுக்கல் ,இந்தியா
16-மார்-201913:36:57 IST Report Abuse

தமிழ்மைந்தன் இந்த தேர்தல் கொள்ளைகூட்டத்திற்கும் இந்தியமக்களுக்கும் இடையே நேரிடையான போட்டி.........மக்கள் வென்றாக வேண்டும்...........2ஜி, காமன்வெல்த், ஆதர்ஸ், நிலக்கரி, சேது சமுத்திர திட்டம், பத்திரிக்கை தாக்குதல் போன்ற கொள்ளையர்கள் ஒழிக்கப்பட வேண்டும்..... மக்களே...உஷார் உஷார்

Rate this:
sahayadhas - chennai,இந்தியா
16-மார்-201911:25:24 IST Report Abuse

sahayadhasகூட்டணி தேவைபடாது. பொய்ய வெல்ல ஒரு உண்மை மட்டும் போதும்.

Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X