'வேலைவாய்ப்பு விவகாரத்தில் தோல்விகளை மறைக்கிறார் மோடி| Dinamalar

'வேலைவாய்ப்பு விவகாரத்தில் தோல்விகளை மறைக்கிறார் மோடி

Added : மார் 15, 2019
Advertisement

புதுடில்லி:''வேலைவாய்ப்பு குறித்த உண்மையான புள்ளி விபரங்களை மக்களிடத்தில், எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்வதை, பிரதமர் மோடி தடுக்கிறார்,'' என, காங்., தலைவர் ராகுல் குற்றம் சாட்டிஉள்ளார்.
'என்.எஸ்.எஸ்.ஓ., எனப்படும், தேசிய புள்ளி யியல் ஆய்வு நிறுவனத்தின் புள்ளி விபரங்களை, மத்திய அரசு, திருத்தி அமைக்கும் முயற்சியில் ஈடுபடுகிறது' என, பொருளாதார நிபுணர்கள், நேற்று முன்தினம் குற்றம் சாட்டினர்.மேலும், 'தன்னாட்சி நிறுவனங்களின் நிர்வாகத்தில் சுதந்திரம் தேவை' என, அவர்கள் வலியுறுத்தினர்.
இதையடுத்து, காங்கிரஸ் தலைவர் ராகுல், நேற்று, ''வேலைவாய்ப்பு நிலவரம் குறித்த புள்ளிவிபரங்களில், அரசின் தோல்விகள், மக்களுக்கு தெரியக்கூடாது என, பிரதமர் நினைக்கிறார். அதனால் தான், அதுகுறித்த புள்ளி விபரங்கள் வெளியாகமல் தடுக்கிறார்,'' என்றார்.
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர், ரன்தீப் சுர்ஜேவாலா கூறியதாவது:இந்தியாவின் சர்வதேச மதிப்பையும், நம்பகத்தன்மையையும், மோடி அரசு சீர்குலைத்தது போல், வேறு யாரும் சீர்குலைக்க முடியாது. சர்வதேச பொருளாதார நிபுணர்கள், சமூக ஆய்வாளர்கள், நாட்டின் புள்ளி விபரங்கள் திருத்தப்படுவது குறித்து கவலைப்படுகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X