பொது செய்தி

இந்தியா

ஓட்டு இயந்திரங்கள் ஏற்றி செல்லும் வாகனங்களில் ஜி.பி.எஸ்., கட்டாயம்

Added : மார் 15, 2019
Advertisement

புதுடில்லி:'லோக்சபா தேர்தலின் போது, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் மற்றும் ஒப்புகை சீட்டு இயந்திரங்களை ஏற்றி செல்லும் வாகனங்களில், கட்டாயமாக, ஜி.பி.எஸ்., கருவி பொருத்தப்பட்டு இருக்க வேண்டும்' என, தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.

லோக்சபா தேர்தல், அடுத்த மாதம், 11ல் துவங்கி, மே 19 வரை, ஏழு கட்டங்களாக நடக்கிறது. இதற்கான ஆயத்த பணிகளில், தேர்தல் ஆணைய அதிகாரிகள் முழு வீச்சில் பணியாற்றி வருகின்றனர்.


அதிகாரிகள்



நாடு முழுவதும், 10.35 லட்சம் ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. இந்த தேர்தலில், உபரி இயந்திரங்களையும் சேர்த்து, 39.6 லட்சம் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களும், 17.4 லட்சம் ஒப்புகை சீட்டு இயந்திரங்களும் பயன்படுத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சமீபத்தில் நடந்த ஐந்த மாநில சட்டசபை தேர்தலின்போது, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், சாலையிலும், ஓட்டல் அறையிலும், அரசியல்வாதிகள் சிலரது, வீட்டிலும் கண்டெடுக்கப்பட்டதாக, செய்தி வெளியானது.

இந்த முறை இதுபோன்ற முறைகேடுகள் நடக்காமல் தடுக்க, தேர்தல் ஆணைய அதிகாரிகள் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.தேர்தல் நேரங்களில், உபரி கையிருப்பாக வைக்கப்படும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், அதிகாரிகளின் கவனக் குறைவால் காணாமல் போகின்றன.


தேர்தல் கமிஷன்



எனவே, 'இந்த முறை உபரி கையிருப்பு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் மற்றும் ஒப்புகை சீட்டு இயந்திரங்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களில், இடங்களை தெளிவாக காட்டும், ஜி.பி.எஸ்., கருவி கட்டாயம் பொருத்தப்பட வேண்டும்' என, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X