அருணாச்சல் தேர்தலில் 'போர்ட்டர்'கள் பங்கு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

அருணாச்சல் தேர்தலில் 'போர்ட்டர்'கள் பங்கு

Added : மார் 16, 2019
Advertisement

இடாநகர்:அருணாச்சல பிரதேச மாநிலத்தில், சாலை வசதிகள் இல்லாத மலை கிராமங்களுக்கு பொருட்களை எடுத்துச் செல்வதற்கு, 'போர்ட்டர்'கள் எனப்படும் சுமை துாக்கும் தொழிலாளர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
அருணாச்சல பிரதேசத்தில், முதல்வர், பெமா காண்டு தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தின் கடினமான மலைப் பகுதிகளில் உள்ள கிராமங்களில் தேர்தல் நடக்கும்போது, மலைக் கிராமங்களில் உள்ள ஓட்டுச் சாவடிகளுக்கு தேவையான பொருட்கள், ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் உள்ளிட்டவற்றை எடுத்துச் செல்ல, தொழிலாளர்களை பயன்படுத்துகின்றனர்.
ஓட்டுப் பதிவு முடிந்த பின், அவற்றை, ஓட்டு எண்ணப்படும் மையங்களுக்கு அவர்கள் எடுத்து வருகின்றனர்.நீண்ட தொலைவில் உள்ள சில கிராமங்களில் இருந்து, இந்த பொருட்களை எடுத்து வர, மூன்று நாட்கள் ஆகும் என்பதால், இம்மாநிலத்தில் ஓட்டு எண்ணிக்கை முடிவு, தாமதமாகவே வெளியாகிறது.
தற்போது நடக்கவுள்ள லோக்சபா தேர்தலில், தொழிலாளர்கள் நியமனம் குறித்து, துணை தலைமை தேர்தல் அதிகாரி லிகன் கோயு கூறியதாவது:கடந்த, 2009ல் நடந்த சட்டசபை தேர்தலில், 1,400 பேரும், 2014ல் நடந்த லோக்சபா தேர்தலில், 2,100 போர்ட்டர்களும் நியமிக்கப் பட்டனர்.தற்போது, தொலைதுார மலைக்கிராமங்களில், 518 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. ஒரு ஓட்டுச் சாவடிக்கு, நான்கு பேர் வீதம் தொழிலாளர்கள் நியமிக்கப்படுவர். தேவைக்கேற்ப கூடுதல் தொழிலாளர்களை, மாவட்ட தேர்தல் அதிகாரி கள் நியமிப்பர்.இவ்வாறு அவர் கூறினார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X