ஆந்திர முன்னாள் முதல்வரின் இளைய சகோதரர் படுகொலை| Dinamalar

ஆந்திர முன்னாள் முதல்வரின் இளைய சகோதரர் படுகொலை

Added : மார் 16, 2019 | கருத்துகள் (4)
Advertisement
 ஆந்திர முன்னாள் முதல்வரின் இளைய சகோதரர் படுகொலை

அமராவதி:ஆந்திர முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான, ராஜசேகர ரெட்டியின் சகோதரரும், முன்னாள் அமைச்சருமான, விவேகானந்தா ரெட்டி, 68, தன் வீட்டில், மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார்.
ஆந்திராவில், முதல்வர், சந்திரபாபு நாயுடு தலைமையில், தெலுங்கு தேசம் ஆட்சி நடக்கிறது. இங்கு, கடப்பா மாவட்டத்தில் உள்ள புலிவேந்துலா என்ற இடத்தை சேர்ந்தவர், விவேகானந்தா ரெட்டி. இவர், ஆந்திர முன்னாள் முதல்வர், மறைந்த, ராஜசேகர ரெட்டியின் இளைய சகோதரர்.இவர், புலிவெந்துலா தொகுதி காங்கிரஸ், எம்.எல்.ஏ.,வாக, இரண்டு முறை பதவி வகித்துள்ளார்.
காங்கிரசைச் சேர்ந்த கிரண்குமார் ரெட்டி முதல்வராக இருந்த போது, விவசாயத் துறை அமைச்சராக பதவி வகித்தார்.கடப்பா லோக்சபா தொகுதியில், இரண்டு முறை, எம்.பி.,யாக இருந்துள்ளார். ராஜசேகர ரெட்டியின் மறைவுக்கு பின், அவரது மகன் ஜெகன்மோகன் ரெட்டி, ஒய்.எஸ்.ஆர்., - காங்., என்ற கட்சியை துவங்கியபோது, அதில் சேராமல்,காங்கிரஸ் கட்சியிலேயே தொடர்ந்தார்.
புலிவெந்துலா சட்டசபை தொகுதிக்கு, 2011ல் நடந்த இடைத்தேர்தலில், ராஜசேகர ரெட்டியின் மனைவி, விஜயம்மாவை எதிர்த்து போட்டியிட்டு தோற்றார். அதன் பின், ஒய்.எஸ்.ஆர்., காங்.,கில் இணைந்தார்.இந்நிலையில், விவேகானந்தா ரெட்டியின் மனைவி, ஐதராபாத் சென்ற நிலையில், புலிவெந்துலாவில் உள்ள வீட்டில், நேற்று முன்தினம் இரவு, அவர் தனியாக இருந்தார்.


காயங்கள்



நேற்று காலையில், விவேகானந்தா ரெட்டியின் உதவியாளர் கிருஷ்ணா ரெட்டி வந்து பார்த்த போது, கழிப்பறையில், மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது தலையின் முன் மற்றும் பின் பக்கங்களில் காயம் இருந்ததாகவும், கழிப்பறை மற்றும் படுக்கை அறைகளில், ரத்தக் கறை படிந்துள்ளதாகவும், உதவியாளர் தெரிவித்தார்.பிரேத பரிசோதனை அறிக்கையில், அவர் கொலை செய்யப்பட்டதாக தெரிய வந்துள்ளது. கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.



வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
18-மார்-201911:13:17 IST Report Abuse
Malick Raja அரசியல்வாதிகளுக்கு எது நடந்தாலும் யாரும் பார்க்கவே மாட்டார்கள் ..
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
17-மார்-201908:07:53 IST Report Abuse
Srinivasan Kannaiya அவரை சார்ந்தவர்கள் யாரேனும் தேர்தலில் நிக்கிறார்களா
Rate this:
Share this comment
Cancel
nicolethomson - bengalooru,இந்தியா
16-மார்-201905:50:18 IST Report Abuse
 nicolethomson ரெட்டி குடும்பமே கோல்மால் குடும்பம் pola
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X