அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
கை மாறுகிறது பணம்!
தி.மு.க., - அ.தி.மு.க.,வில்
உருவானது புது வியூகம்

தமிழகத்தில் நடக்க உள்ள, லோக்சபா தேர்தல் மற்றும் சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், வேட்பாளர்களின் வெற்றியை தீர்மானிப்பதில், பணம் முக்கிய காரணியாக திகழப் போகிறது. பணம் வினியோகத்தில், தங்களுடைய வழக்கமான வழிமுறைகளை மாற்ற, அ.தி.மு.க.,வும், தி.மு.க.,வும் முடிவு செய்துள்ளன.

A.D.M.K,ADMK,D.M.K,DMK,அ.தி.மு.க,அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்,தி.மு.க,திராவிட முன்னேற்றக் கழகம்,கை மாறுகிறது பணம்,உருவானது,புது வியூகம்


தமிழகத்தில், தேர்தல் என்றாலே, மக்களுக்கு கொண்டாட்டம் என்ற, நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில், வேட்பாளர்களுக்கு, ஓட்டு கேட்டு செல்வோருக்கு, வேட்பாளர் தன் செலவில், டீ வாங்கி கொடுப்பார்; வேறு எதுவும் தர மாட்டார்.

பிரியாணி:


கட்சியின் மீதுள்ள பிடிப்பு காரணமாக, கட்சியினர், தங்களுடைய கை காசை செலவழித்து, பிரசாரம் செய்தனர். தற்போது, நிலைமை தலைகீழ். பணம் இருந்தால் தான், எதையும் செய்ய முடியும் என்ற நிலை உள்ளது. ஒரு அரசியல் கட்சி வேட்பாளர், ஒரு வட்டத்தில், ஓட்டு கேட்க செல்வதற்கு முன், அந்த வட்ட நிர்வாகிக்கு, குறிப்பிட்ட தொகையை வழங்க வேண்டும். அந்த பணத்தில், அவர் வேட்பாளரை வரவேற்க, கூட்டத்தை திரட்டுவார்; சால்வை, பட்டாசு போன்றவற்றை வாங்குவார். அதன்பின், வேட்பாளருடன், வீடு வீடாக செல்ல, ஆட்களை ஏற்பாடு செய்வார். அவர்களுக்கு, 200 அல்லது 300 ரூபாய், மதியம் பிரியாணி வழங்கப்படும்.

இது தவிர, வேட்பாளர்களை வரவேற்று, ஆரத்தி எடுக்கும் பெண்கள்; வீட்டின் முன் கோலமிடும் பெண்கள்; பூ துாவும் பெண்களுக்கு, வேட்பாளர் தனியே செலவழிக்க வேண்டும். இது தவிர, உடன் வரும் வாகனங்களுக்கு, பெட்ரோல், டீசல் செலவு, கட்சியினருக்கு, இரவு மது விருந்து என, பணம் தண்ணீராக செலவாகும். கடந்த சில தேர்தல்களில், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது, அதிகரித்து விட்டது. வாக்காளர்களுக்கு, அண்ணாதுரை காலத்திலேயே, பணம் கொடுக்கும் பழக்கம் இருந்துள்ளது. அன்று, 5 ரூபாய் வழங்கிய நிலை போய் இன்று, 500, 1,000 வழங்கும் அளவுக்கு வந்துள்ளது. இடைத்தேர்தலில், ஓட்டின் மதிப்பு, 2,000 ரூபாயை தொட்டுள்ளது.

மூன்றாம் நபர்:


மேலும், பணம் கொடுத்தால், வெற்றி பெறலாம் என்ற எண்ணம், அனைத்து கட்சிகளிடமும் ஏற்பட்டு உள்ளது. சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், அ.தி.மு.க., சார்பில் பணம் வழங்கும் பொறுப்பு, மூன்றாவது நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. எனினும், பணம் மக்களை சென்றடையவில்லை என்ற, குற்றச்சாட்டு எழுந்தது. எனவே, இம்முறை கட்சியினரிடமே, பணம் வினியோகத்தை ஒப்படைக்க, அ.தி.மு.க., தலைமை முடிவு செய்துள்ளது. பொங்கல் பரிசாக, 1,000 ரூபாய்; வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு, 2,000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இது, மக்களிடம் நேரடியாக சென்றடைந்து விட்டது.

இந்நிலையில், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை, மூன்றாவது நபரிடம் ஒப்படைத்தால், கட்சியினர் விரக்தி அடைவர். எனவே, இம்முறை கட்சியினர் வாயிலாக, பணத்தை வினியோகம் செய்யலாம். முறையாக வினியோகம் செய்யப்படுகிறதா என்பதை, மூன்றாவது நபரை வைத்து கண்காணிக்கலாம் என, கட்சி தலைமை தெரிவித்துள்ளது. இதற்கு நேர் மாறாக, தி.மு.க., தலைமை முடிவு செய்துள்ளது. கடந்த சட்டசபை தேர்தலின் போது, வாக்காளர்களுக்கு

Advertisement

வினியோகம் செய்வதற்காக வழங்கிய பணத்தை, மாவட்ட செயலர்கள் எடுத்துக் கொண்டனர்.

தேர்தல் முடிந்ததும், வேட்பாளர்களை கேட்டபோது, மாவட்ட செயலர்கள் பணம் வழங்காததை தெரிவித்தனர். இது தொடர்பாக, அவர்களிடம் எழுத்துப்பூர்வமாக, புகார் எழுதி வாங்கி உள்ளது, தி.மு.க., தலைமை. இம்முறை பணம் வினியோகம் குறித்து, கட்சியின் மூத்த தலைவர்கள் பேச்செடுத்தபோது, 'அதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்' என, ஸ்டாலின் கூறியுள்ளார். கடந்த முறைபோல் நடக்காமலிருக்க, இம்முறை, மூன்றாவது நபர் வாயிலாக, பணம் வினியோகம் செய்ய, அக்கட்சி தலைமை முடிவு செய்து உள்ளது.

ஆலோசனை :


அதே நேரம், இரு கட்சிகளும், கூட்டணி கட்சிகளிடம் பணம் கொடுக்காமல், அவற்றுக்கும் தாங்களே செலவு செய்வது என்ற முடிவில், உறுதியாக உள்ளன. இவ்விரு கட்சிகளுக்கு போட்டியாக, தனித்து போட்டியிடும், அ.ம.மு.க., சில குறிப்பிட்ட தொகுதிகளில் மட்டும், வெற்றி பெறும் வகையில், பணத்தை வாரி இறைக்க முடிவு செய்துள்ளது. இதை அறிந்த, தேர்தல் கமிஷன், பணம் வினியோகத்தை, எப்படி தடுப்பது என, ஆலோசித்து வருகிறது. ஆனால், வாக்காளர்களோ, ஓட்டுக்கு பணம் எப்போது வரும் என, ஆவலோடு காத்திருக்கின்றனர்.

- நமது சிறப்பு நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
yila - Nellai,இந்தியா
21-மார்-201915:41:12 IST Report Abuse

yilaகட்சிகள் கருப்பு, வெள்ளை, வெளிநாட்டுப்பணம் எல்லாவற்றையும், எலக்ட்டோரல் பாண்ட் மூலமாக, எல்லா மக்களையும் ஏமாற்றிவிட்டு, சட்டபூர்வமாக வாங்குவதுபோல, மக்களுக்கும் இந்த எலக்ட்டோரல் பாண்ட் மூலமாக, சட்டபூர்வமாக பணம் கொடுக்க சட்டம் கொண்டு வரலாமே? இந்த ஊழலும் சட்டபூர்வமாக செய்யப்படலாமே? ஏன் கூடாது?

Rate this:
Tamilselvan - Chennai,இந்தியா
18-மார்-201918:40:57 IST Report Abuse

Tamilselvanஸ்பெக்ட்ரம் கொள்ளை நடக்க வில்லை என்று சொல்வது மிக பெரிய மோசடி.கனி,ராசா தொழிற் பிஷை பேச்சுகளே சாட்சிகள். விசாரணையை மீண்டும் தொடக்கி, மக்களின் பணத்தை மீண்டும் கிடைக்க பெற வேண்டும். மக்களின் உழைப்பை கொள்ளை அடித்தவர்களுக்கு தகுந்த தண்டனை கிடைக்க பட வேண்டும்.

Rate this:
BoochiMarunthu - Paradise papers,பனாமா
19-மார்-201916:42:56 IST Report Abuse

BoochiMarunthu2 ஜீ ஊழல் வழக்கில், மோடி அரசு ஒரு சின்ன துண்டு பேப்பர் ஆதாரம் கூட கொடுக்கவில்லை . காங்கிரஸ் அரசில் போட்ட வழக்கில் 30000 பக்கங்கள் இருந்தது . ...

Rate this:
Cheran Perumal - Radhapuram,இந்தியா
20-மார்-201902:25:09 IST Report Abuse

Cheran Perumalஆதாரங்களையெல்லாம் தான் மன்மோகன் வெளியேறும் முன் உங்க ராசாவின் ஆட்கள் பூந்து அழித்துவிட்டார்களே? ...

Rate this:
Achchu - Chennai,இந்தியா
21-மார்-201904:31:59 IST Report Abuse

Achchu2 G வழக்கு என்னான்னு தமிழ்ச்செல்வன் நாலுவரியில் தெளிவா சொல்ல முடியுமா? ...

Rate this:
Achchu - Chennai,இந்தியா
21-மார்-201916:03:38 IST Report Abuse

Achchuமல்லையா 9000 ஆயிரம் கோடி நீரவ் மோடி 13500 ஆயிரம் கோடி A ராசா சுருட்டியதாக இவர்கள் சொல்வதோ இவைகளில்லாம் பல ஆயிரம் மடங்கு பெரிய தொகை சின்ன சின்ன கேசுகளையெல்லாம் வெளிநாடுகளில் விரட்டிப் பிடிக்கும் இந்திய சர்க்கார் பலஆயிரமடங்கு பெரிய குற்றவாளிகளை உள்ளூரிலேயே விட்டு விடுவார்களா யார் ஏமாளி குற்றம் சாட்டுபவர்களா விட்டு விட்டவர்களா? ...

Rate this:
இந்தியன் kumar - chennai,இந்தியா
18-மார்-201913:09:20 IST Report Abuse

இந்தியன் kumarபணம் கொடுக்கும் எந்த கட்சி வேட்பாளரையும் நிராகரியுங்கள் , நல்லவர்கள் இருந்தால் தேர்ந்தெடுங்கள் இல்லை என்றால் நோட்டாவை தேர்ந்து எடுங்கள்

Rate this:
Achchu - Chennai,இந்தியா
21-மார்-201904:34:56 IST Report Abuse

Achchuஎப்போதாவது தங்களுக்கு வோட்டுக்கு பணம் தந்திருக்கிறார்களா இல்லை பணத்துடன் வந்தவர்களை மறுத்து அனுப்பியிருக்கிறீர்களா? ...

Rate this:
yila - Nellai,இந்தியா
21-மார்-201915:37:30 IST Report Abuse

yilaநோட்டாவிற்கு வாக்களிப்பது, உங்கள் எதிரியை ஜெயிக்க வைக்கும். எனவே, அப்படிப்பட்ட முட்டாள்தனம் செய்யாதீர்கள். ...

Rate this:
மேலும் 28 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X