கர்தார்பூர் சாலை திட்டம் பின்வாங்கியது பாகிஸ்தான் | Dinamalar

பொது செய்தி

இந்தியா

கர்தார்பூர் சாலை திட்டம் பின்வாங்கியது பாகிஸ்தான்

Updated : மார் 16, 2019 | Added : மார் 16, 2019 | கருத்துகள் (16)
Advertisement
கர்தார்பூர்,சாலை திட்டம்,பின்வாங்கியது,பாகிஸ்தான்

புதுடில்லி: பஞ்சாப் மாநிலத்திலிருந்து பாகிஸ்தானில் உள்ள கர்தார்பூர் வரை சாலை அமைக்கும் திட்டம் தொடர்பாக ஏற்கனவே கொடுத்த வாக்குறுதிகளில் இருந்து தற்போது பாகிஸ்தான் பின் வாங்கியுள்ளது.

பாகிஸ்தானின் கர்தார்பூரில் சீக்கிய மத ஸ்தாபகர் குருநானக் தேவின் நினைவிடம் உள்ளது. இதற்கு சீக்கியர்கள் எளிதாக செல்லும் வகையில் பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டத்திலிருந்து சாலை அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. பாகிஸ்தானும் சம்மதித்தது.



இந்த சாலை தொடர்பாக இரு நாட்டு அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. ஆனால் இந்த திட்டத்தை செயல்படுத்த கொடுத்த வாக்குறுதிகளை பாக். இப்போது மறுத்துள்ளது.உள்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது: 'கர்தார்பூருக்கு செல்லும் சீக்கியர்களுக்கு இலவச 'விசா' வழங்கப்படும்' என பாகிஸ்தான் அறிவித்திருந்தது. ஆனால் இப்போது 'கட்டணம் செலுத்தி சிறப்பு அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டும்' என கூறுகிறது.

'கர்தார்பூருக்கு அமைக்கப்படும் சாலையை வாரத்தில் ஏழு நாட்களும் திறந்து வைக்க வேண்டும்' என இந்தியா கோரியது. ஆனால் 'குறிப்பிட்ட நாட்களில் மட்டும் திறந்துவைக்கப்படும்' என பாகிஸ்தான் இப்போது கூறுகிறது.'யாத்ரீகர்கள் பாத யாத்திரையாக நடந்து செல்ல அனுமதிப்போம்' என முன்பு தெரிவித்திருந்தது. இப்போது 'குறைந்தது 15 பேர் அடங்கிய குழுவாகதான் செல்ல வேண்டும்; அதுவும் வாகனத்தில் தான் செல்ல வேண்டும்' என கூறுகிறது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.





வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
16-மார்-201912:59:44 IST Report Abuse
ஆப்பு ரொம்ப நல்லதாப் போச்சு. அப்பிடியாச்சும் யாத்திரை போகலேண்ணா என்ன? கடவுள் எங்கும் இருக்காரு.
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
16-மார்-201912:35:56 IST Report Abuse
Nallavan Nallavan சீனாவின் ஆலோசனையாக இருக்கக் கூடும் .......
Rate this:
Share this comment
Cancel
natarajan s - chennai,இந்தியா
16-மார்-201909:07:28 IST Report Abuse
natarajan s இந்திய பாக் பிரிவினையின் போது ஜின்னாவின் பிடிவாதத்தால் raddclife என்பவர் தலைமையில் எல்லை கோடு நிர்ணயம் 10 நாட்களில் முடிக்கப்பட்டது. அப்போதே lahore kartapur கராச்சி மற்றும் contiguous part நமது பகுதிக்குள் இருக்க வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. சுதந்திர பிரகடனத்துக்கு நாள் குறித்த பிறகும் இந்த எல்லை வரையறை முடிவு பெறவில்லை எனவே இந்த பகுதியில் ரவி ஆற்றங்கரை எல்லையாக மாற்றப்பட்டுவிட்டது. சீக்கியர்களின் மிக முக்கியமான புண்ணிய தளங்கள் பல பாகிஸ்தான் வசம் சென்று விட்டன . அப்போது ஜின்னாவும் divide or destroy என்று போராட்டம் நடத்தினார். ஆங்கிலேயர்களும் எதெற்கு நமக்கு தலைவலி இவர்கள் இருவரும் அடித்துக்கொண்டு சாகட்டும் என்று வேடிக்கை பார்த்து விட்டனர். அது இன்றுவரை காஷ்மீர் தொடங்கி குஜராத் வரை தொடர்கிறது .
Rate this:
Share this comment
Darmavan - Chennai,இந்தியா
16-மார்-201911:05:11 IST Report Abuse
Darmavanஇது சொல்லுவது பிரிவினைக்கு பின் முஸ்லிம்களை இந்தியாவில் தங்க விட்ட பாதக செயலை/சலுகையோடு செய்தார்கள் என்பதே.காரணம்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X