காங்., தலைவர் ராகுல் தமிழகத்தில் போட்டி? Dinamalar

எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
எதிர்பார்ப்பு!
காங்., தலைவர் ராகுல்
தமிழகத்தில் போட்டி?

காங்., தலைவர் ராகுல், தமிழகத்தில் போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருவதால், தமிழகத்தில் அவர் போட்டியிடலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

காங்., தலைவர்,ராகுல்,தமிழகத்தில்,போட்டி?


தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, இரு நாட்களுக்கு பின், தமிழகத் தலைநகர் சென்னையில் பிரசாரத்தை துவக்கிய, காங்., தலைவர், ராகுல், ஏராளமான புதிய வாக்காளர்களின் இதயங்களை வென்றுள்ளதாக கூறப்படுகிறது.எனவே, ராகுல், தமிழகத்தில் நடக்கும் லோக்சபா தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்து வருகிறது.

உ.பி., மாநிலம், அமேதி தொகுதியில், ராகுல் போட்டியிடுவது வழக்கம். அதன்படி, காங்கிரஸ் வெளியிட்ட முதல் பட்டியலில், அவர் பெயர் இடம் பெற்றிருந்தது.எனினும், அவர் போட்டியிடும் இரண்டாவது தொகுதி,

தமிழகத்தில் ஏதாவது ஒரு தொகுதியாக இருக்கும் என, பேசப்படுகிறது. அவ்வாறு அவர் போட்டி யிட்டால், தென் மாநிலங்களில் போட்டியிடும், இந்திரா குடும்பத்தை சேர்ந்த மூன்றாவது நபராக, ராகுல் திகழ்வார்.

இதற்கு முன், ராகுலின் பாட்டியும், முன்னாள் பிரதமருமான இந்திரா, கர்நாடக மாநிலம், சிக்மகளூரில், 1978ல் போட்டியிட்டு வென்றார். மீண்டும், 1980ல், ஆந்திராவின் மேடக் தொகுதியில் வெற்றி பெற்றார்.பின், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவரும், ராகுலின் தாயுமான, சோனியா, 1999ல், கர்நாடகா மாநிலம், பெல்லாரியில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து, பா.ஜ., சார்பில் போட்டியிட்ட, சுஷ்மா சுவராஜ் தோல்வியை தழுவினார்.

இதற்கிடையே, 'ராகுல் தமிழகத்தில் போட்டியிட வேண்டும்' என, 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில், காங்., மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான சிதம்பரத்தின் மகன் கார்த்தி, உட்பட பலர் பதிவிட்டுள்ளார்.

இது குறித்து, காங்., செய்தி தொடர்பாளர், பவன் கேரா, நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: ராகுலை தங்கள் மாநிலத்தில் போட்டியிட வலியுறுத்தி, பல்வேறு மாநிலங்களை சேர்ந்த, காங்., தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Advertisement

இதுபற்றி, கட்சி மேலிடம் தான் முடிவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தென் மாநிலங்களில் ஏதாவது ஒன்றில், ராகுல் போட்டியிட்டால், காங்.,கின் செல்வாக்கை அதிகரிக்க உதவும் என, காங்., வட்டாரங்கள் கூறுகின்றன.தமிழகத்தில், ராகுல் போட்டியிட விரும்பினால், சிவகங்கை தொகுதியே அவருக்கு பொருத்தமானதாக இருக்கும், என, காங்., வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. இந்த தொகுதி, 1984 முதல், தொடர்ந்து, காங்., மூத்த தலைவர் சிதம்பரத்தின் கோட்டையாக இருந்து வந்துள்ளது. இருப்பினும், 2014ல் நடந்த லோக்சபா தேர்தலின் போது, இந்த தொகுதியில், காங்., சார்பில் போட்டியிட்ட, சிதம்பரம் மகன் கார்த்தி, அ.தி.மு.க., வேட்பாளர், பி.ஆர்.செந்தில் நாதனிடம் தோல்வியை தழுவினார்.

- நமது சிறப்பு நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
17-மார்-201900:29:04 IST Report Abuse

Pugazh Vமக்களின் பணத்தில் சுற்றுலா சென்றதெல்லாம்/ ஆனால் பேச்சை பாருங்கள்.

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
17-மார்-201900:27:35 IST Report Abuse

Pugazh V//1885 ல் வெளிநாட்டு கிருஸ்தவர்களால் / / ஏன் இப்படி மதவெறி பிடித்து அலைகிறாரோ? இந்தியா வை இலங்கை மாதிரி உள்நாட்டு போர் கலவரங்கள் நிறைந்த நாடாக ஸாரி- சுடுகாடாக ஆக்க முயல்கிறார்கள். இந்த மதவெறி யை முதலில் உங்கள் பாஜக வில் காட்டி அதில் பதவிக்காக அல்லது தெரியாமல் மாட்டிகிட்ட கிறிஸ்தவ இஸ்லாமிய ர்களையும் பாஜக வில் இருக்கும் திருட்டு திராவிடால்ஸையும் கட்சி யிலிருந்து நீக்கி அறிக்கை விடுங்கள். அப்புறம் பார்க்கலாம்

Rate this:
adithyan - chennai,இந்தியா
16-மார்-201916:27:33 IST Report Abuse

adithyanபுதுச்சேரியில் நிறுத்தினால் வெற்றி பெற வாய்ப்புண்டு.மற்ற எல்லா இடங்களிலும் காங்கிரஸ் படு தோல்வி அடையும்.

Rate this:
மேலும் 9 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X