பதிவு செய்த நாள் :
'வேலைவாய்ப்பு விவகாரத்தில்
தோல்விகளை மறைக்கிறார் மோடி'

புதுடில்லி: ''வேலைவாய்ப்பு குறித்த உண்மையான புள்ளி விபரங்களை மக்களிடத்தில், எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்வதை, பிரதமர் மோடி தடுக்கிறார்,'' என, காங்., தலைவர் ராகுல் குற்றம் சாட்டிஉள்ளார்.

Modi,Narendra modi,நரேந்திர மோடி,மோடி,ராகுல்,rahul,rahul gandhi


'என்.எஸ்.எஸ்.ஓ., எனப்படும், தேசிய புள்ளி யியல் ஆய்வு நிறுவனத்தின் புள்ளி விபரங்களை, மத்திய அரசு, திருத்தி அமைக்கும் முயற்சியில் ஈடுபடுகிறது' என, பொருளாதார நிபுணர்கள், நேற்று முன்தினம் குற்றம் சாட்டினர். மேலும், 'தன்னாட்சி நிறுவனங்களின் நிர்வாகத்தில் சுதந்திரம் தேவை' என, அவர்கள் வலியுறுத்தினர்.

இதையடுத்து, காங்கிரஸ் தலைவர் ராகுல், நேற்று, ''வேலைவாய்ப்பு நிலவரம் குறித்த புள்ளிவிபரங்களில், அரசின் தோல்விகள்,

மக்களுக்கு தெரியக்கூடாது என, பிரதமர் நினைக்கிறார். அதனால் தான், அதுகுறித்த புள்ளி விபரங்கள் வெளியாகமல் தடுக்கிறார்,'' என்றார்.

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர், ரன்தீப் சுர்ஜேவாலா கூறியதாவது: இந்தியாவின் சர்வதேச மதிப்பையும், நம்பகத்தன்மையையும், மோடி அரசு சீர்குலைத்தது போல், வேறு யாரும் சீர்குலைக்க முடியாது. சர்வதேச பொருளாதார நிபுணர்கள், சமூக ஆய்வாளர்கள், நாட்டின் புள்ளி விபரங்கள் திருத்தப்படுவது குறித்து கவலைப்படுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

அனைவருக்கும் மருத்துவ சிகிச்சை:


சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில், தொண்டு நிறுவனத்தில் சார்பில், 'அனைவருக்கும் மருத்துவ சிகிச்சை' என்ற தலைப்பில், தேசிய மாநாடு நடந்தது. இதில், காங்., தலைவர் ராகுல், நேற்று பேசியதாவது: பிரதமர் மோடி, 'ஆயுஷ்மான் பாரத்' திட்டத்தை, தன் கனவு திட்டம் என கூறுகிறார். ஆனால், இந்த திட்டத்தால், ஏழை, எளிய மக்கள் பயனடையவில்லை. சில தொழிலதிபர்கள் தான் பலனடைந்துள்ளனர். அவர்களுக்காக தான், இந்த திட்டத்தை மோடி அறிவித்துள்ளார்.

Advertisement



மத்தியில் காங்., ஆட்சி அமைந்தால், நாட்டு மக்கள் அனைவரும் மருத்துவ சிகிச்சை பெறுவதை உரிமையாக்கும் சட்டத்தை அமல்படுத்துவோம். இது பற்றிய விரிவான தகவல்கள், தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருக்கும். மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 3 சதவீதத்தை, மருத்துவ செலவுக்காக ஒதுக்குவோம். டாக்டர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

வேலைவாய்ப்பின்மை பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.அனைவருக்கும் தரமான மருத்துவ சிகிச்சை, குறைந்த செலவில் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். இந்த மூன்றையும் செயல்படுத்தாமல், நாடு வளர்ச்சி அடையாது. இவ்வாறு அவர் பேசினார்.


Advertisement

வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajavel - Ariyalur,இந்தியா
16-மார்-201918:32:43 IST Report Abuse

Rajavelவேலைவாய்ப்பு வழங்கி சம்பளம் கொடுக்கிறதே பிஜேபி கட்சி

Rate this:
Kannan - Chennai,இந்தியா
16-மார்-201917:20:56 IST Report Abuse

Kannanஇந்த பையனுக்கு என்ன தெரியும்? எழுதிக்கொடுத்ததை சொல்லிக்கொண்டு திரிகிறான். இவனோட பாட்டி இந்திரா "வறுமையை ஒழிப்போம்" என்றார். இன்றுவரை அது ஒழியவில்லை. காங்கிரஸ் தான் ஆட்சியில் பல வருடங்கள் இருந்தது. இந்த பையனோட அப்பா பிரதமர் ஆக இருந்தார். அப்புறம் அம்மா தன்னுடைய பதிலியை வைத்து ஆட்சிபீடத்தில் அமர்த்தி பத்து வருடம் இருந்தார். அப்போதெல்லாம் வேலை வாய்ப்பு கிடைத்ததா . பிராடு கூட்டம்.

Rate this:
Rajavel - Ariyalur,இந்தியா
16-மார்-201916:31:56 IST Report Abuse

Rajavelவேலைவாய்ப்பு என்று சொல்லிவிட்டார்.

Rate this:
மேலும் 28 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X