3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்? தேர்தல் கமிஷனுக்கு கோர்ட் உத்தரவு Dinamalar
பதிவு செய்த நாள் :
3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்?
தேர்தல் கமிஷனுக்கு கோர்ட் உத்தரவு

புதுடில்லி: தமிழகத்தில், இடைத்தேர்தல் நடக்கவுள்ள, 18 சட்டசபைத் தொகுதிகளுடன், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கும், இடைத் தேர்தல் அறிவிக்கக் கோரி, தி.மு.க., தாக்கல் செய்த மனு குறித்து, இரு வாரங்களில் முடிவெடுக்கும்படி, தேர்தல் ஆணையத்துக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

3 தொகுதி,இடைத்தேர்தல்,தேர்தல் கமிஷன்,  Court, கோர்ட், நீதிமன்றம், உத்தரவு


'லோக்சபா தேர்தல், ஏழு கட்டமாக நடத்தப்படும்' என, தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில், ஏப்., 18ல், லோக்சபா தேர்தல் நடக்கவுள்ளது. 'இத்துடன், 18 சட்டசபைத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடக்கும்' என, தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. இருப்பினும், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகள் தொடர்பாக, நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில்

உள்ளதாக கூறி, அங்கு, 'இந்த தொகுதிகளில், தற்போது தேர்தல் நடத்தப்படாது' என, தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதை எதிர்த்து, தி.மு.க., சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது: தமிழகத்தில், இடைத் தேர்தல் நடக்கும், 18 தொகுதிகளுடன், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடத்தும்படி, தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். இந்த தொகுதிகள், நீண்ட காலமாக காலியாக உள்ளன. இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள், எஸ்.ஏ.பாப்டே, அப்துல் நஸீர் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தி.மு.க., சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் அபிஷேக் சிங்வி, வில்சன் ஆகியோர், 'தமிழகத்தில், ஏப்., 18ல், மூன்று தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடத்த முடியாவிட்டால், நாடு முழுவதும் அறிவிக்கப்பட்டுள்ள, ஏழு கட்ட தேர்தல் தேதிகளுக்குள், அவற்றுக்கு தேர்தல் நடத்தலாமே' என, வாதிட்டனர்.

Advertisement

தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர், 'தமிழகத்தில் தேர்தல் அறிவிக்கப்படாத, மூன்று சட்டசபைத் தொகுதிகளுக்கு தேர்தல் தேதி அறிவிக்க, அவகாசம் தேவைப்படுகிறது' என்றார்.

இருதரப்பு வாதங்களுக்கு பின், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு விபரம்: சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால், மூன்று தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த முடியாது எனக் கூறுவது, பொறுப்பை தட்டிக்கழிப்பது போல் உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக, இரு வாரங்களில் தேர்தல் ஆணையம் முடிவெடுத்து அறிவிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Advertisement

வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
16-மார்-201921:04:09 IST Report Abuse

Natarajan Ramanathan.....

Rate this:
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
16-மார்-201918:21:26 IST Report Abuse

Natarajan Ramanathan21 தொகுதிகளிலும் தீயமுக தோற்க வேண்டாமே

Rate this:
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
16-மார்-201918:11:25 IST Report Abuse

Natarajan Ramanathan.....

Rate this:
மேலும் 7 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X