சபரீசன் மீது வழக்கு ஏன்? ஸ்டாலின் புது விளக்கம் Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
சபரீசன் மீது வழக்கு ஏன்?
ஸ்டாலின் புது விளக்கம்

சென்னை: ''பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தை திசை திருப்பவே, என் மருமகன் சபரீசன் மீது, வழக்கு பதிவு செய்துள்ளனர்,'' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறினார்.

சபரீசன்,வழக்கு,ஸ்டாலின்,விளக்கம்


அவரது பேட்டி: பொள்ளாச்சி, பாலியல் வன்கொடுமை வழக்கில், குற்றவாளிகளை தப்ப விடாமல், உயர் நீதிமன்ற கண்காணிப்பின் கீழ், சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும் என, கூட்டணி தலைவர்கள் கூட்டத்தில், நாங்கள் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறோம்.

கூட்டு பிரசாரம்:


லோக்சபா மற்றும், 18 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தலில் போட்டியிடும், தி.மு.க., வேட்பாளர்கள் பட்டியல், 17ல் வெளியிடப்படும். லோக்சபா தேர்தலுக்கு தனியாகவும், 18 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கு

தனியாகவும், தேர்தல் அறிக்கைகள் வெளியிடப்படும். கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், நாகர்கோவிலில், கூட்டு பிரசாரம் செய்தோம்; அது தொடரும். என் பிரசார பயணம் தயாரானதும், முறையாக வெளியிடப்படும். சமூக வலைதளங்களில், எனக்கு எதிராக, திட்டமிட்டு பொய் பிரசாரம் செய்கின்றனர். அதற்கு பதிலடி கொடுக்கக் கூடிய வகையில், எங்களது பிரசாரம் அமையும்.

பொள்ளாச்சி, பாலியல் விவகாரம், நாட்டில் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. அது, வரும் தேர்தலில் எதிரொலிப்பதற்கு, வாய்ப்புகள் உள்ளன. ஆளுங்கட்சியே, குற்றவாளிகளுக்கு துணை நிற்கிறது. அதை எதிர்த்து, பொது மக்கள், மாணவர்கள் போராடுகின்றனர்.

துாண்டுதல்:


அரசியலுக்கு அப்பாற்பட்டு, பல போராட்டங்கள் தொடர்ந்து நடக்கின்றன. அதை, திசை திருப்ப வேண்டும் என்பதற்காக தான், என் மருமகன் சபரீசன் மீது, வழக்கு பதிவு செய்திருக்கின்றனர். என் துாண்டுதலில் தான், இவை அனைத்தும் நடப்பதாக, புகார் அளித்துள்ளனர். சட்டரீதியாக, அதை சந்திக்க தயாராக உள்ளேன். மீதமுள்ள,

Advertisement

மூன்று சட்டசபை தொகுதிகளுக்கும், தேர்தல் நடத்த வேண்டும் என, நீதிமன்றத்தை நாடியிருக்கிறோம். தேர்தல் நடத்த வேண்டும் என, நீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால், தேர்தல் கமிஷன், இரண்டு வாரம் கால அவகாசம் கேட்டுள்ளது.

நோக்கம்:


தேர்தல் நடத்த வேண்டும் என்பது, எங்களுடைய நோக்கம். நடத்தக் கூடாது என்பது, மத்திய, மாநில அரசுகளின் நோக்கம். தேர்தல் நடந்தால், ஆட்சி இருக்காது. எனவே, சதி செய்கின்றன. அந்த சதியை, நீதிமன்றம் வாயிலாக முறியடிப்போம். மத்திய, மாநில அரசுகளை அப்புறப்படுத்த, தமிழக மக்கள் தயாராக உள்ளனர். அதை நோக்கி, நாங்களும் சென்று கொண்டிருக்கிறோம். இவ்வாறு, ஸ்டாலின் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (85)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilselvan - Chennai,இந்தியா
20-மார்-201903:39:24 IST Report Abuse

Tamilselvanசட்ட சபைக்கு போனோமா , சட்டையை கிழித்தோமா, தினமும் வெளி நடப்பு செய்த்தோமா என்று இருக்க வேண்டும் . வேண்டாத வேலை எதுவும் செய்ய வேண்டாம்.

Rate this:
Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்
20-மார்-201903:01:11 IST Report Abuse

Vaithilingam Ahilathirunayagamயாராக இருந்தாலும், செய்த வினைகளுக்குரிய தண்டனைகளை அனுபவித்தே ஆகவேண்டும். இதுதான் நியதி.

Rate this:
tamilselvan - chennai,இந்தியா
19-மார்-201918:46:16 IST Report Abuse

tamilselvanஸ்டாலின் நீங்கள் உங்கள் அப்பா காலத்தில் போட் ஆட்டத்தை நினைத்து பாருங்கள்

Rate this:
மேலும் 82 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X