இன்று கூடுகிறது பா.ஜ.,தேர்தல் குழு

Updated : மார் 16, 2019 | Added : மார் 16, 2019 | கருத்துகள் (9)
Advertisement
இன்று கூடுகிறது  பா.ஜ.,தேர்தல் குழு

லோக்சபா தேர்தலுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்வதற்காக, மத்தியில் ஆளும், பா.ஜ.,வின், மத்தியதேர்தல் குழுவின் மூன்று நாள் கூட்டம், இன்று துவங்குகிறது.தற்போது, எம்.பி.,க் களாக உள்ளவர்களில், 40 சதவீதம் பேருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படாது என, பரவலாக பேசப்படுவதால்,அவர்கள் கலக்கத்தில்உள்ளனர்.கடந்த, 2014ல் நடந்த லோக்சபா தேர்தலில், மொத்தமுள்ள, 543 தொகுதிகளில், 282ல், பா.ஜ., வென்றது.லோக்சபாவுக்கு, ஏழுகட்டங்களாக தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.காங்கிரஸ் இரண்டு வேட்பாளர் பட்டியல்களை வெளியிட்டுள்ளது. மாயாவதியின் பகுஜன் சமாஜ், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி, மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்., என, சில கட்சிகளும் வேட்பாளர் பட்டியலைவெளியிட்டு வருகின்றன.
இந்நிலையில், பா.ஜ.,வின் மத்திய தேர்தல் குழு கூட்டம், டில்லியில், 16, 18 மற்றும், 22ல் நடக்க உள்ளது.இந்தக் குழுவில்பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ., தேசியத் தலைவர், அமித் ஷா, மூத்த தலைவர்கள், ராஜ்நாத் சிங், சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி, நிதின் கட்கரி, ஜே.பி. நட்டா, சிவராஜ் சிங் சவுகான், தன்வார்சந்திர கெலாட், ராம் லால், ஷானவாஸ் ஹுசேன் உள்ளிட்டோர் இடம்பெற்றுஉள்ளனர்.ஆலோசனைஇந்த மூன்று நாள்கூட்டத்துக்குப் பிறகே, பா.ஜ., போட்டியிடும் தொகுதிகளின் வேட்பாளர்கள் பெயர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.கடந்த, சில மாதங்களாகவே, வேட்பாளர் தேர்வு குறித்து, கட்சித் தலைவர், அமித் ஷா, மூத்த தலைவர்கள், மாநில தலைவர்கள் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்திவருகிறார்.மேலும், தற்போதுள்ள, எம்.பி.,க்களின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்யப்படுகிறது.தொகுதிகளில் நிறைவேற்றிய திட்டங்கள், பார்லிமென்டில் செயல்பாடு, அரசின் திட்டங்கள் குறித்து மக்களிடம் கொண்டு சென்றது, தொகுதியில் உள்ள செல்வாக்கு உள்ளிட்ட பல காரணிகளின் அடிப்படையில், தற்போதுள்ள,எம்.பி.,க்களின் செயல்பாடு குறித்து அறிக்கைதயாரிக்கப்பட்டுள்ளது.தற்போதுள்ள, எம்.பி.,க்களில், 40 சதவீதம் பேருக்குமீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படாது என, கூறப்படுகிறது.வாய்ப்புஇதைத் தவிர, ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடமும் மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இவற்றை, அமித் ஷா நேரடியாக ஆய்வு செய்து உள்ளார்.பா.ஜ., வரலாற்றில் முதல் முறையாக, தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடம் இருந்து, கட்சித் தலைவர் மனு வாங்குவதும், அவர்களுடன் விவாதித்ததும், இதுவே முதல் முறையாகும்.பெரும்பாலானகட்சிகள், வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு உள்ளன அல்லது இறுதி செய்துள்ளன.அதனால், தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத அதிருப்தியாளர்கள், கட்சியில் இருந்து விலகுவதற்கான வாய்ப்பு குறையும் என, பா.ஜ.,நம்புகிறது.நடப்பு, எம்.பி.,க்களில், 40 சதவீதம் பேருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படாது என செய்தி வெளியாகி உள்ளதால், எம்.பி.,க்கள் கலக்கத்தில் உள்ளனர்.கே.எஸ்.நாராயணன் சிறப்பு செய்தியாளர்

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sahayadhas - chennai,இந்தியா
16-மார்-201911:17:28 IST Report Abuse
sahayadhas 44 காவு குடுத்து 7% உயர்ந்துள்ளதே அப்புறம் என்ன பயம்.
Rate this:
Share this comment
Cancel
sahayadhas - chennai,இந்தியா
16-மார்-201911:15:53 IST Report Abuse
sahayadhas புதிய உறுப்பினர்களுகு சீட் உறுதி
Rate this:
Share this comment
Cancel
RM -  ( Posted via: Dinamalar Android App )
16-மார்-201910:56:07 IST Report Abuse
RM Whenever see the Amitsha photo we cannot forget the Harikrishnan loya murder case. He even not a head of BJP using Govt. guest houses , near Cochin newairport which was not officially opened ,he landed his private jet without permission. His son got crores in business within short period. Misusing power is his nature. If Modi is a clean person how he allow Amitshah?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X