கர்நாடக அதிகாரியிடமிருந்து 2.25 கோடி ரூபாய் பறிமுதல்

Added : மார் 16, 2019
Advertisement

பெங்களூரு:கர்நாடகாவில், அரசு அதிகாரியிடமிருந்து, 2.25 கோடி ரூபாயை, வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் பங்கேற்கும் நிகழ்ச்சிக்காக, இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததா என, அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.கர்நாடகாவில், முதல்வர் குமாரசாமி தலைமையிலான, மதச் சார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது.

லோக்சபா தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், அரசியல்வாதிகள், அவர்களின் நெருங்கிய ஆதரவாளர்களின் செயல்பாடுகளை, வருமான வரித்துறை கூர்ந்து கவனித்து வருகிறது. வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது தொடர்பாகவும் கண்காணித்து வருகிறது.

இதற்கிடையில், லோக்சபா தேர்தலுக்காக, அரசு அதிகாரிகள் மூலம், ஆளுங்கூட்டணி கட்சியினர், அரசு ஒப்பந்ததார்களிடமிருந்து, 10 - 20 சதவீதம் கமிஷன் பெற்று வருவதாக, வருமான வரித்துறைக்கு ரகசிய தகவல் வந்தது.இதையடுத்து, பெங்களூரு, ராஜ்மஹால் ஓட்டலில், வருமான வரித்துறை அதிகாரிகள், நேற்று முன்தினம் சோதனை நடத்தினர்.

அப்போது, கர்நாடக மாநில, கிராமிய அபிவிருத்தி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை செயல் பொறியாளர் நாராயணகவுடா பாட்டீல், ஓட்டலில் இருந்தார்.அவரிடமிருந்து, 2.25 கோடி ரூபாய் ரொக்கம், ஒப்பந்ததாரர்கள் கொடுத்த பணத்தின் விபரம் அடங்கிய ஆவணங்கள், லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டன. நேற்று மீண்டும் வருமான வரித்துறை அதிகாரிகள், ராஜ்மஹால் ஓட்டலுக்கு விசாரணைக்கு சென்ற போது, பொறியாளர் நாராயணகவுடா பாட்டீல் தலைமறைவானது தெரிய வந்தது.

அவரது கார் டிரைவர் மட்டும் அதே ஓட்டலில் தங்கியிருந்தார்.அவரை விசாரித்த போது, காங்கிரசை சேர்ந்தவரும், கிராமபுற மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சருமான, கிருஷ்ணபைரே கவுடாவுக்கு வழங்குவதற்காக, ஒப்பந்ததாரர்களிடமிருந்து பணம் வசூலிக்கப் பட்டு உள்ளதாக, தெரிவித்தார்.விசாரணையில், லோக்சபா தேர்தல் செலவுக்காக ஒப்பந்த தாரர்களிடமிருந்து, கமிஷன் முறையில் பணம் பெறப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தலைமறைவாகியுள்ள பொறியாளரை வருமான வரித்துறையினர் தேடி வருகின்றனர்.வரும், 18ல், கலபுரகியில், காங்கிரஸ் தலைவர் ராகுல் பங்கேற்கும் நிகழ்சிக்காக, இந்த பணம் பதுக்கப்பட்டதாக, பா.ஜ., தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X