நியூசி. துப்பாக்கிச்சூடு: கொலையாளி யார்?

Updated : மார் 16, 2019 | Added : மார் 16, 2019 | கருத்துகள் (18)
Share
Advertisement

கிறைஸ்ட்சர்ச் : நியூசிலாந்தின் முக்கிய நகரங்களில் ஒன்று கிறைஸ்ட்சர்ச். இங்குள்ள, அல் - நுார் என்ற மசூதியில், நேற்று, ஏராளமானோர் தொழுகையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, கறுப்பு உடை மற்றும் தலையில், 'ஹெல்மெட்' அணிந்த மர்ம நபர் ஒருவன், மசூதிக்குள் நுழைந்தான். அவன் கைகளில் இருந்த அதிநவீன இயந்திர துப்பாக்கியால், கண்ணில் பட்டவர்களை எல்லாம், சரமாரியாக சுட்டான். இதில் 49 பேர் பலியாகினர்.latest tamil newsவெறியாட்டம் :


போலீஸ் விசாரணையில் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட மர்ம நபர், 74 பக்க அறிக்கை ஒன்றை எழுதி உள்ளான். அதில், தனது பெயர் பிரின்டன் ஹாரிசன் டாரன்ட்28 எனவும், ஆஸ்திரேலிய குடிமகன் என்றும், இந்த தாக்குதலை நடத்தவே நியூசிலாந்து வந்ததாகவும், தான் எந்த பயங்கரவாத அமைப்பையும் சேர்ந்தவன் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளான்.


latest tamil news


கைது செய்யப்பட்ட அவன் கிறிஸ்ட் சர்ச் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டான். ஜாமின் கோரிய அவனது கோரிக்கையை மறுத்த நீதிபதி ஏப்ரல் 5-ம் தேதிவரை காவலில் வைக்க உத்தரவிட்டார்.


வைரலாக பரவியது :


latest tamil news


இந்த துப்பாக்கி சூட்டை நிகழ்த்திய பிரின்டன் ஹாரிசன் டாரன்ட் தலையில், 'ஹெல்மெட்' அணிந்திருந்தான். அதில், 'கேமரா' பொருத்தி, அதன் வாயிலாக, 'பேஸ்புக்' சமூக வலைதளத்தில் இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை நேரடி ஒளிபரப்பு செய்தான். இது வைரலாக பரவி பார்ப்பவர்கள் நெஞ்சை பதற வைத்தது. இதனால் துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வீடியோக்களை அகற்றும்படி பேஸ்புக் நிறுவனத்தை நியூசி., போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Nagarajan - chennai,இந்தியா
16-மார்-201915:13:36 IST Report Abuse
Ramesh Nagarajan இப் பதிவை செய்யும் போது நெஞ்சம் கனக்கிறது. குருவி சுடுவது போல் மசூதியில் தொழுகையில் இருந்தவர்களை ஒரு க்ஷண நேரத்தில் கொன்று குவித்து விட்டான். வலியின் உச்சத்தால் அலற கூட முடியாமல் மரணம் சம்பவித்திருக்கிறது. இது எதனால் எதற்க்காக நடந்தது. எவ்வளவு பெரிய இழப்பு அந்தந்த குடும்பத்தினர்க்கு. இவர்கள் செய்த பாவம் தான் என்ன. தாங்கமுடியாத மரண வலியால் பலரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்க பட்டிருக்கின்றனர். கொலையாளிக்கு மரண தண்டனை கொடுத்தாலும் இங்கு போன உயிர்கள் திரும்ப வருமா. இந்தியாவில் இதை போன்ற கொடூர சம்பவங்களால் எத்தனை விலை மதிக்க முடியாத உயிர்களை நாம் இழந்திருக்கிறோம். இதற்கு தீர்வு என்ன. ஒவ்வொரு சமூகமும் அதை சார்ந்த மதங்களும் சிந்திக்க வேண்டிய விஷயம். வருங்கால சந்ததியினருக்கு நல்ல பல விஷயங்களை சொல்லி கொடுங்கள். பிற மதத்தினரை நேசிக்க கற்று கொடுங்கள். மத மாற்றம் தேவையில்லை. அவரவர்கள் மதத்தில் உள்ள நல்ல பல விஷயங்களை கற்று வாழ்க்கையில் ஒரு நல்ல மனிதனாக உருவெடுங்கள். விவேகானந்தரையும் கலாமையும் நேசித்த நாடு. பாரினிலே சிறந்த நாடு நமது பாரத நாடு. வாழ்க நமது பாரதம். ஜெய் ஹிந்த்
Rate this:
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
16-மார்-201914:02:34 IST Report Abuse
Pasupathi Subbian இது மனம் வெறுத்துபோனவனின் செயல். இந்தியாவில் கூட மதத்தின் பெயரால் தொடர்ந்து நடக்கும் தீவிரவாதத்தினால் மனம் வெறுத்துபோனவர்களும் உள்ளனர்.
Rate this:
Cancel
முகமது நபி பாலஸ்தீனம் !! ஹஹாஆஆஆ
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X