அடுத்த பிரதமர் ராகுல்: சித்தராமைய்யா| Dinamalar

அடுத்த பிரதமர் ராகுல்: சித்தராமைய்யா

Updated : மார் 16, 2019 | Added : மார் 16, 2019 | கருத்துகள் (43)
Advertisement

பெங்களூரு : நாட்டின் அடுத்த பிரதமரான ராகுல் கர்நாடகாவில் போட்டியிட வேண்டும் என காங்., தலைவரும் முன்னாள் முதல்வருமான சித்தராமைய்யா வேண்டுகோள் விடுத்துள்ளார்.



காங்., தலைவர் ராகுல் தலைமையில் மத்தியில் புதிய ஆட்சி அமைய உள்ளதாகவும், ராகுல் தான் அடுத்த பிரதமர் எனவும் திமுக தலைவர் ஸ்டாலின் ஏற்கனவே கூறி வருகிறார்.
இதனையடுத்து வரும் லோக்சபா தேர்தலில் ராகுல், தமிழகத்தின் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட வேண்டும் என காங் மற்றும் திமுக.,வினர் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் ராகுல், கர்நாடகாவில் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட வேண்டும் என சித்தராமைய்யா, ராகுலுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.



இது தொடர்பாக சித்தராமைய்யா வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், இந்திய தலைவர்களை கர்நாடகா எப்போதும் ஆதரித்துள்ளது. 1978 ல் இந்திரா சிக்மகளூர் தொகுதியிலும், 1999 ல் சோனியா பெல்லாரி தொகுதியிலும் போட்டியிட்டு, தங்களின் பலத்தை நிரூபித்துள்ளனர்.
நமது அடுத்த பிரதமரான ராகுலும் கர்நாடகாவின் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட வேண்டும் என விரும்புகிறோம். இந்த கோரிக்கையை ராகுல் பரிசீலிக்க வேண்டும். தென்னிந்தியாவில் எங்களின் பிரதிநிதியாக அவர் இருக்க வேண்டும். அதற்காக அவர் கர்நாடகாவை தேர்வு செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.





வாசகர் கருத்து (43)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
16-மார்-201921:28:27 IST Report Abuse
Natarajan Ramanathan இந்திரா 1977ல் உபி யில் டெபாசிட் பறிகொடுத்து படுதோல்வி அடைந்ததால் புகலிடம் தேடி கர்னாடகா வந்தார். அதுபோல பப்புவும் அமேதியில் படுதோல்வி அடைந்து 2024ல் உங்களிடம் வரும்போது வாய்ப்பு கொடுங்கள்.
Rate this:
Share this comment
Cancel
VELAN S - Chennai,இந்தியா
16-மார்-201920:19:17 IST Report Abuse
VELAN S ராகுல் மீன் கறி நல்லா சாப்பிடறாராம் , அதனால பிரதமர் போஸ்டை அவருக்கு கொடுப்பது நல்லது தான் , அடுத்த மாதம் எலக்சன் , காங்கிரஸிடமிருந்து , இந்தியாவுக்கு நாங்கள் என்னென்ன செய்வோம் பதவிக்கு வந்தால் , என்பது பற்றி தெளிவான அறிக்கை உண்டா ,
Rate this:
Share this comment
Cancel
Gnanam - Nagercoil,இந்தியா
16-மார்-201919:55:47 IST Report Abuse
Gnanam சீத்தராமையாவுக்கு பிரதமராக தகுதியில்லையா?
Rate this:
Share this comment
VELAN S - Chennai,இந்தியா
17-மார்-201911:24:02 IST Report Abuse
VELAN Sஏன் இல்லை , ஒரு கூட்டத்திலே , சீத்தராமையா ஒரு பெண்ணிடம் மிக மோசமாக நடந்து கொண்டார் என்று தினமலர் உட்பட பல பத்திரிக்கைகளில் செய்தி வந்துள்ளதே , அப்படிப்பட்ட நல்ல தகுதி வாய்ந்தவர் சீத்தராமையா , இந்த ஒரு தகுதி போதுமே சீத்தராமையா பிரதமர் ஆவதற்கு , எப்படி பட்ட அரசியல் வியாதிகள் நம்மிடையே இருக்கிறார்கள் , நாம் கொடுத்து வைத்தவர்கள்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X