பதிவு செய்த நாள் :
'ஊழலுக்கு எதிராக போராடும்
அனைவரும் காவலாளிகளே'

புதுடில்லி:''ஊழல் மற்றும் சமூக கொடுமைகளுக்கு எதிராக போராடும் மக்கள் அனைவரும், நாட்டின் காவலாளிகள் தான்,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

ஊழல்,காவலாளிகள், பிரதமர் மோடி


லோக்சபா தேர்தலின் சமீபத்திய பிரசாரத்தின் போது, 'நாட்டில், யாரையும் ஊழல் செய்ய விட மாட்டேன்; நானும், ஊழல் செய்ய மாட்டேன் .'தேசத்தின் காவலாளியாக இருப்பேன்' என, பிரதமர் மோடி உறுதி அளித்திருந்தார்.

காவலாளி என, நரேந்திர மோடி கூறியதை,

காங்., தலைவர் ராகுல், சமீபகாலமாக கடுமையாக விமர்சித்து வருகிறார். ஐரோப்பிய நாடான பிரான்சிடமிருந்து, 'ரபேல்' போர் விமானங் கள் வாங்குவதில் முறைகேடு நடந்துள்ளதாக, காங்.,தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.


'காவலாளி ஒரு திருடன்' என, பிரதமர் மோடியை, ராகுல் விமர்சித்து வருகிறார்.இந்நிலையில், ராகுலுக்கு பதிலடி தரும் வகையில், பிரதமர் மோடி தன், 'டுவிட்டர்' பக்கத்தில், கூறியிருப்பதாவது:


நாட்டிற்கு சேவை செய்ய, உங்களின்காவலாளியாக நான் இருக்கிறேன்; உங்கள் காவலாளிக்கு ஆதர வாக வும், நாட்டுக்கு சேவை செய்ய துணையாகவும் இருங்கள்.நாட்டில், சமூகக் கொடுமைகள், ஊழலுக்கு எதிராக போராடும் ஒவ்வொருவரும், காவலாளி தான். ஆதலால், நான் தனியாக இல்லை. தேசத்தின் வளர்ச்சிக்காக, கடுமையாக உழைக்கும்

Advertisement

ஒவ்வொருவரும், காவலாளி தான். இன்று, ஒவ்வொரு இந்தியரும்,'நானும்கூட காவலாளி தான்' என, கூறுகின்றனர்.இவ்வாறு மோடி கூறியுள்ளார்.

பிரதமர் மோடி, மூன்று நிமிடம் ஒளிபரப்பாகக் கூடிய வீடியோ ஒன்றையும், சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.


Advertisement

வாசகர் கருத்து (39+ 7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
18-மார்-201901:42:55 IST Report Abuse

ஜெய்ஹிந்த்புரம்இதை ஊழல் கும்பலோடு கும்மியடிச்சி, ஊழல் கும்பலோடு கூட்டணி வெச்சி, ஊழலை ஒளிச்சி வெக்கிறவர் சொல்லலாமோ?

Rate this:
Kumar - Tbilisi,தெற்கு ஜார்ஜியா
17-மார்-201916:41:59 IST Report Abuse

Kumar5 வருடமாக புதிய இந்தியாவை பெத்து போட்டாச்சு. இப்போ காவலாளி மேக்கப் ல வாராரு. இந்த பிம்பாலிகாபிம்பிளி எல்லாம் 2014 ஓடு முடிஞ்சி போச்சு. புதுசா மேக்கப் போட்டுக்கிட்டு வந்து ஏமாத்தலாம் என்றால் அது ஒருபோதும் நடக்காது. இந்தியா முழுவதும் உமக்கு பலத்த அடி இருக்கு. மோதி இனிமேல் ஆட்சிக்கு வர மாட்டார்.

Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
17-மார்-201913:36:05 IST Report Abuse

Visu Iyerஇன்னொரு முறை வாக்களிக்க வேண்டும் என மக்கள் நினைப்பார்களா? பொறுத்து இருந்து பார்க்கலாம்.

Rate this:
மேலும் 36 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X