தமிழில் கவனம் செலுத்தும் மோடி!

Updated : மார் 17, 2019 | Added : மார் 17, 2019 | கருத்துகள் (81)
Advertisement

புதுடில்லி:'தமிழகத்தில் எப்படியாவது அதிக தொகுதிகளை அள்ளி விடலாம்' என, பா.ஜ., தலைவர் அமித் ஷாவும், பிரதமர் மோடியும் நினைக்கின்றனர். இதற்கான வேலைகளில், பா.ஜ., மேலிடம் ஈடுபட்டுள்ளது.ஹிந்தியில், சின்ன வாசகங்களை பொதுக் கூட்டங்களில் சொல்லி, மக்களைப் பரவசப்படுத்துவது, மோடியின் வழக்கம்.'நமும்கின் அப் மும்கின்' என, ஒரு வாசகத்தை, வட மாநிலங்களில் நடக்கும் கூட்டங்களில் பேசி வருகிறார், மோடி. 'நடக்காது என்பதை நடத்திக் காட்டுவார் மோடி' என்பது, அந்த ஹிந்தி வாசகத்திற்கு அர்த்தம்.தமிழகத்தில் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்கும்போதும், தமிழில் சில வாசகங்களைப் பேசி, மக்களை கவர நினைக்கிறார், மோடி.

இதற்காக, பா.ஜ.,வின் தமிழக பொறுப்பாளராக உள்ள, மத்திய அமைச்சர் பியுஷ் கோயல், பல தமிழர்களைச் சந்தித்து வருகிறார்.அவர்களிடம், தேர்தல் தமிழ் கோஷங்கள் குறித்து ஆலோசனை கேட்டு வருகிறார்.'நாளை நமதே... நாற்பதும் நமதே... வேண்டும், வேண்டும் மோடி வேண்டும்' என்ற கோஷங்களை உருவாக்கி வருகிறார் கோயல். இதையெல்லாம் மோடியிடம் காண்பிக்க திட்டமிட்டுள்ளார். தனக்கு எது பிடிக்குமோ, அந்த வாசகங்களை தமிழக பிரசார கூட்டத்தில் பேச, மோடி திட்டமிட்டுள்ளார்.


தமிழகத்திற்கு மோடி வரும் போதெல்லாம், 'கோ பேக் மோடி' என, சமூக வலைதளங்களில் பிரசாரம் செய்து வருகின்றனர். 'பாகிஸ்தான் ஆதரவுடன், மோடிக்கு எதிராக இந்த பிரசாரம் தமிழகத்தில் நடக்கிறது' என, செய்திகள் வந்தன. இந்நிலையில், மோடிக்கு எதிரான சமூக வலைதள பிரசாரத்தை செய்வது யார் என்பதைத் தெரிந்து கொள்ள, உளவுத்துறை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாம்.

Advertisement
வாசகர் கருத்து (81)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மணிமேகலை - paris ,பிரான்ஸ்
17-மார்-201920:45:57 IST Report Abuse
மணிமேகலை  அவர்தான் EVM கூட கூட்டணி வச்சிருக்காங்களே அதனால 40 ம் அவங்களதுதான் அதில் சந்தேகமே இல்லை .
Rate this:
Share this comment
Cancel
மலரின் மகள்கள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
17-மார்-201919:08:53 IST Report Abuse
மலரின் மகள்கள் இதில் உள்ள சில செய்திகள் முற்றிலும் உண்மை. பாகிஸ்தான் மற்றுமுள்ள அவர்களுடன் இணைந்த சில அரபு தேசங்களும் அந்த மதத்தினர் வெளிநாட்டில் இருப்போர் மூலம் எதிராக செயலாற்றுகிறார்கள். பணம் பின்புலத்தில் இருக்கிறது. தவறாக தவறான செயலுக்கு வரும் பணத்தின் பாதையை அடைத்தாலும், வெளி நாட்டில் வேலை பார்க்கும் அந்த குறிப்பிட்ட சிலர் தனியாக சந்தித்து தாடி வைத்து கொண்டு மீசையை மழித்து கொண்டோ அல்லது தாடியும் மீசையும் இணைந்தே வைத்து கொண்டு குறிப்பாக தாடி நீண்டவர்கள் வெள்ளிக்கிழமை விடுமுறையில் ஒன்று கூடி சிலர் வீட்டில் இதுபற்றி பேசி சமூக வலைத்தளங்கள் மூலம் பிரசாரம் செய்கிறார்கள். அதற்கு பணம் பெறுகிறார்கள். பணத்தை நமது தேசத்திற்கு அவர்களின் உறவு குடும்பங்கள் மூலம் அனுப்புகிறார்கள் அது அந்த பிரார்த்தனை இடம் வழியாக கூட சென்று சேர்க்கிறது. நம்முடைய அந்த சகோதரர்கள் வெளிநாட்டில் குடும்பத்துடன் தங்கி இருக்கையில் பாகிஸ்தானியர்களுடன் அளவளாவுகிறார்கள். பாகிஸ்தானியர்கள் இவர்களை சந்திக்கிறார்கள். அனைவரும் தாடிவைத்தவர்கள் தான். பாகிஸ்தானின் ஆதரவு என்பது இவர்களுக்கு பணம் கிடைக்கும் தங்க வாத்து. எனக்கு தெரிந்த சிலர் வீட்டில் ஒன்று கூடி மீட்டிங் அல்லது கேட் டு கே தேர் நடப்பது உண்டு,
Rate this:
Share this comment
Cancel
மலரின் மகள்கள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
17-மார்-201919:03:05 IST Report Abuse
மலரின் மகள்கள் போடுங்கம்மா ஒட்டு என்பது தானே தேர்தல் முழக்கம். பெண்களை ஒதுக்கி யார் ஆட்சி செய்யமுடியும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X