பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - ஈரோடு

Added : மார் 17, 2019
Advertisement

காந்திஜி சாலையில் குழியால் கலக்கம்: ஈரோடு, காந்திஜி சாலையில், மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனை உள்ளது. இதன் அருகே மின் கம்பம் நடுவதற்காக குழி தோண்டினர். அதன் பிறகு நடவடிக்கை எடுக்க மறந்த விட்டார்கள். இதனால் தோண்டிய குழி, வாயை திறந்து கிடக்கிறது. வாகன போக்குவரத்து, மக்கள் நடமாட்டமுள்ள பகுதியில், ஆளை விழுங்கும் வகையில் இருப்பது, அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏதாவது பாதுகாப்பு ஏற்பாடு அல்லது பணியை முடித்து, குழியை விரைந்து மூடவேண்டும்.
அணை வளாகத்தில் தட்டுகளால் அசுத்தம்: கோபி அருகே, கொடிவேரி தடுப்பணையில் குளித்து மகிழ, தினமும் ஏராளமானோர் வருகின்றனர். குளித்து முடித்ததும், வளாகத்தில் குவிந்துள்ள மணலில் அமர்ந்து உணவு சாப்பிடுகின்றனர். இரைப்பை நிரம்பியதும், பலர் தட்டுகளை வீசி செல்கின்றனர். இவற்றை துப்புரவு பணியாளர்கள் அகற்றி விடுகின்றனர். இதை தவிர்க்க, போதிய குப்பை தொட்டி வைக்க, சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தடுப்பு கற்கள் மீண்டும் தேவை: அந்தியூர் தாலுகா அலுவலகம், அந்தியூர் - பர்கூர் சாலையில் உள்ளது. அலுவலகம் எதிரே, நெடுஞ்சாலைத் துறையினர் தடுப்பு கற்கள் வைத்தனர். சமீபத்தில் நடந்த கட்சி மாநாட்டுக்காக அகற்றப்பட்டன. அதன் பிறகும் மீண்டும் வைக்கவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் குறுக்கும், நெடுக்குமாக சென்று, போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துகின்றனர். விபத்து ஏற்படும் நிலையும் உருவாகியுள்ளது. மீண்டும் தடுப்புகற்களை வைத்து, விபத்தை தடுக்க வேண்டும்.

பயனுக்கு வராத கழிப்பிடங்கள்: பவானிசாகர் யூனியன், கொத்தமங்கலம் பஞ்., பகுதியில், தனிநபர் கழிப்பிடம் கட்ட இடம் இல்லாதவர்களுக்காக, 2.40 லட்சம் மதிப்பில், தாய் திட்டத்தில், 20 தனிநபர் கழிப்பிடங்கள், 2015ல் கட்டப்பட்டன. மூன்றாண்டு களுக்கு மேலாகியும், இதுவரை பயன்பாட்டுக்கு வரவில்லை. இதனால் கழிப்பிடம் முன்புள்ள திறந்த வெளியை, மக்கள் கழிப்பிடமாக்கி விட்டனர். தண்ணீர் வசதி ஏற்படுத்தி, கழிப்பிடங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X