கார் மோதிய விபத்தில் கூலி தொழிலாளி சாவு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கார் மோதிய விபத்தில் கூலி தொழிலாளி சாவு

Added : மார் 17, 2019
Advertisement

அந்தியூர்: வெள்ளித்திருப்பூர் அருகே, கார் மோதியதில், கூலி தொழிலாளி இறந்தார். வெள்ளித்திருப்பூர் அருகேயுள்ள, மறவன்குட்டையை சேர்ந்தவர் பழனிசாமி, 55, கூலி தொழிலாளி. அந்தியூர்-அம்மாபேட்டை சாலையில், பட்லூர் நால்ரோட்டில், நேற்று காலை, 9:30 மணிக்கு, எக்ஸ்.எல்., சூப்பர் மொபெட்டில் சென்றார். பின்னால் வந்த மாருதி சுவிப்ட் கார் மோதியதில், பலத்த காயமடைந்தார். அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டு, மேல் சிகிச்சைக்காக, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே இறந்தார். இதுகுறித்து வெள்ளித்திருப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர். விபத்தில் பலியான பழனிசாமிக்கு, திருமணமாகி விட்டது. இரண்டு மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி விட்டது.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X