பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டுச்சாவடி வாரியாக வாக்காளர் பட்டியல் சேகரிப்பு; போலீசார் தீவிரம்

Added : மார் 17, 2019
Advertisement

ஈரோடு: ஓட்டுச்சாவடி வாரியாக, வாக்காளர் பட்டியல் சேகரிப்பில், போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, திருப்பூர், நீலகிரி ஆகிய லோக்சபா தொகுதிகள் உள்ளன. கடந்த ஜன., 31ல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. புதிய வாக்காளர்கள் சேர்க்கைக்காக, இரண்டு சிறப்பு முகாம் நடந்தது. இதனால் இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் உள்ளிட்டவற்றில் சிறிய மாற்றம் இருக்க வாய்ப்புள்ளது. இதற்கிடையில் ஓட்டுச்சாவடி வாரியாக, வாக்காளர் பட்டியல் சேகரிப்பில், போலீசார் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து போலீசார் கூறியதாவது: இந்த பணியின் மூலம், வி.ஐ.பி.,கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், எம்.எல்.ஏ.,க்கள், பிரச்னைக்குரிய நபர்கள் குறித்தும், அவர்களது ஓட்டுச்சாவடி அமைந்துள்ள இடம் குறித்தும் முன்கூட்டி தெரிந்து கொள்ளலாம். மேலும், அதுபோன்ற ஓட்டுச்சாவடிகளில் கூடுதல் கவனம் செலுத்த முடியும். உள்ளூர் போலீசார், முன்னாள் ராணுவத்தினர், மாஜி போலீசார், ஊர்க்காவல் படையினர் அல்லது துணை ராணுவத்தினர் என, யாரை குறிப்பிட்ட ஓட்டுச்சாவடியில், பாதுகாப்புக்கு நிறுத்த வேண்டுமென்பதும், வாக்காளர் பட்டியல் நிர்ணயம் செய்து விடும். இவ்வாறு போலீசார் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X