பொது செய்தி

தமிழ்நாடு

கனி மார்க்கெட்டில் புதிய ஜவுளி வளாகம்: கடையை உறுதி செய்ய வலியுறுத்தி மனு

Added : மார் 17, 2019
Advertisement

ஈரோடு: 'ஈரோடு கனி மார்க்கெட் வளாகத்தில், ஜவுளி வளாகம் அமைக்கவுள்ள நிலையில், தங்களுக்கான கடையை உறுதி செய்ய வேண்டும்' என, வியாபாரிகள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.
ஈரோடு கனி மார்க்கெட் வாரச்சந்தை அனைத்து ஜவுளி வியாபாரிகள் சங்க தலைவர் செல்வராஜ், தினசரி ஜவுளி வியாபாரிகள் சங்க தலைவர் நூர்சேட் ஆகியோர் தலைமையில் சென்ற வியாபாரி கள், ஈரோடு எம்.எல்.ஏ.,க்கள் ராமலிங்கம், தென்னரசு ஆகியோரிடம், மனு வழங்கினர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: ஈரோடு கனி மார்க்கெட் ஜவுளி சந்தை, 40 ஆண்டாக செயல்படுகிறது. வளாகத்தை இடித்துவிட்டு, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், புதிதாக ஜவுளி வளாகம் கட்ட உள்ளனர். அடிப்படை வசதிகள், சிறப்பு அம்சங்களுடன் கடைகள் அமையும்போது, இப்போதுள்ள வியாபாரிகள் பாதிக்கக்கூடாது. இந்த வணிக வளாகத்தின் கட்டட வரைபடத்தை கேட்டும், இதுவரை வழங்கவில்லை. அதை வழங்குவதுடன், எதிர்காலத்தில் புதிய வளாகம் அமைந்தபின், சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கி, அதை ஆதாரமாக கொண்டு, மாநகராட்சி நிர்வாகம், கடைகளை ஒதுக்க வேண்டும். சிறு, குறு வியாபாரிகள் வியாபாரம் செய்வதால், பெரிய மற்றும் கார்ப்பரேட் வணிகர்களுக்கு இடம் தரக்கூடாது. இதை எம்.எல்.ஏ.,க்களிடம் வலியுறுத்தினோம். அரசிடம் இதுபற்றி பேசி தெரிவிப்பதாக, அவர்கள் தெரிவித்தனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X