பாசனத்துக்கு நீர் திறப்பு நிறுத்தம்: கொடிவேரியில் மக்கள் குதூகலம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பாசனத்துக்கு நீர் திறப்பு நிறுத்தம்: கொடிவேரியில் மக்கள் குதூகலம்

Added : மார் 17, 2019
Advertisement

கோபி: பாசனத்துக்கு தண்ணீர் திறப்பை நிறுத்தினாலும், கொடிவேரியில் கொட்டிய தண்ணீரில், சுற்றுலா பயணிகள், குளித்து குளிர்ந்தனர்.
பவானிசாகர் அணையில், நீர் இருப்பு திருப்திகரமாக இல்லாததால், சிக்கன நடவடிக்கையாக, கொடிவேரி தடுப்பணை வளாகத்தில் இருந்து, தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை பாசனங்களுக்கு, நேற்று காலை தண்ணீர் நிறுத்தம் செய்யப்பட்டது. மீண்டும், 19ல், தண்ணீர் திறக்கப்படவுள்ளது. அதேசமயம் காலிங்கராயன் பாசனம் மற்றும் குடிநீருக்காக திறக்கப்பட்ட, 500 கன அடி தண்ணீர், கொடிவேரி தடுப்பணை வழியாக, பவானி ஆற்றில் வெளியேறியது. இதனால் அருவியாக கொட்டிய தண்ணீரில், ஏராளமான சுற்றுலா பயணிகள், குளித்து மகிழ்ந்தனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், நேற்று வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X