நீதிமன்ற உத்தரவுப்படி 3 டாஸ்மாக் கடை மூடல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நீதிமன்ற உத்தரவுப்படி 3 டாஸ்மாக் கடை மூடல்

Added : மார் 17, 2019
Advertisement

ஈரோடு: நீதிமன்ற உத்தரவுப்படி, ஈரோடு மாவட்டத்தில், மூன்று டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. ஈரோடு மாவட்டத்தில், 197 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டன. இவற்றில், 102 கடைகளில் மட்டுமே பார்கள் உள்ளன. இந்நிலையில் விளை நிலங்களில், டாஸ்மாக் கடைகள் அமைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதன்படி தமிழகத்தில் உள்ள, 110 கடைகளை அகற்ற, நீதிமன்றம் உத்தரவிட்டது. இதில், ஈரோடு மாவட்டத்தில் கொடுமுடி, கந்தம்பாளையம், பங்களாபுதூர் ஆகிய இடங்களில், மூன்று டாஸ்மாக் கடைகள் நேற்று முதல் மூடப்பட்டன. டாஸ்மாக் ஊழியர்கள் கூறியதாவது: ஊராட்சி புன்செய்நிலத்தில் கட்டட வரைபட அனுமதி கிடைக்காததால், மூன்று டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் கடைகளின் எண்ணிக்கை, 194 ஆக குறைந்துள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X