சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வி.ஏ.ஓ.,விடம் கேள்வி: குடிமகனுக்கு 'சிறை'

Added : மார் 17, 2019
Advertisement

சென்னிமலை: பெருந்துறையை அடுத்த, துடுப்பதி, பள்ளபாளையத்தை சேர்ந்தவர் ஆறுமுகம், 40; துடுப்பதி கிராம நிர்வாக அலுவலகம் முன், அமர்ந்திருப்பது வழக்கம். அலுவலகம் அருகிலேயே டாஸ்மாக் கடையும் உள்ளது. இதனால் 'குடி'மகன்களும் அங்கு அமர்ந்திருப்பர். நேற்று முன்தினம் இரவு, வி.ஏ.ஓ., அலுவலகத்தின் முன்புறம், ஆறுமுகம் படுத்திருந்தார். தேர்தல் பணிக்காக வி.ஏ.ஓ., கவுதமன் அலுவலகத்தை திறந்துள்ளார். உயர் அதிகாரிகள் வருவதால், எழுந்து செல்லுமாறு, ஆறுமுகத்திடம் கூறியுள்ளார். இதனால் ஆவேசம் அடைந்த ஆறுமுகம், ''பகலிலேயே அலுவலகம் திறப்பதில்லை; இரவில் என்ன வேலை செய்கிறீர்கள்,'' என, டயலாக் பேசியுள்ளார். இதுகுறித்த புகாரின்படி, பெருந்துறை போலீசார், அரசு பணி செய்ய விடாமல் தடுத்ததாக, ஆறுமுகத்தின் மீது வழக்குப்பதிவு செய்தனர். பெருந்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X